கர்ப்பத்தின் போது ஏற்படும் தலைவலிக்கான காரணங்கள் மற்றும் நிவாரணிகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:23 | Best Blogger Tips
causes n cures pregnancy headaches  
 
கர்ப்பமாக இருக்கும் போது, உடலில் நிறைய வலிகள் ஏற்படும். அவற்றில் ஒன்று தான் தலைவலி. இத்தகைய நிலையில் வரும் தலைவலிகள் மிகவும் தீவிரமாக இல்லாவிட்டாலும், அது மிகவும் தொந்தரவு கொடுப்பவையாகவே இருக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தால், நிச்சயம் இந்த பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். 
 
இந்த நேரத்தில் கண்ட மாத்திரைகளைப் போட்டு, தலை வலிகளை போக்க நினைக்கக்கூடாது. ஏனெனில் சில மாத்திரைகளால், கருவிற்கு கேடு உண்டாகவும் நேரிடலாம். ஆகவே அப்போது இயற்கை முறையில் சரிசெய்ய முயல்வதே புத்திசாலித்தனம். இப்போது இந்த தலைவலி ஏற்படுவதற்கு காரணத்தையும், அதனை எப்படி குணப்படுத்துவது என்பதையும் குறிப்பிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு குணப்படுத்துங்கள்.


டென்சன்
 
அதிகப்படியான வேலைப்பளுவினால் சிலருக்கு தலைவலி ஏற்படும். அதிலும் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் உண்டாகும் பிரச்சனைகளை சந்திக்கும் போது ஏற்படும் டென்சனால், தலைவலி அதிகரிக்கும். எனவே இத்தகையவற்றை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் மனதை அமைதிப்படுத்தும் செயல்களான யோகா மற்றும் தியானம் போன்றவற்றை செய்வது தான். 
 
ஹார்மோன் மாற்றங்கள் 
 
 கர்ப்பத்தின் போது ஹார்மோன் மாற்றங்கள் நிகழும். அவ்வாறு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், சிலருக்கு தலைவலி உண்டாகும். இத்தகைய தலைவலிக்கு சிறந்த நிவாரணம் என்றால், நல்ல சுத்தமான காற்றை சுவாசிப்பது மற்றும் மனதை புத்துணர்ச்சியூட்டும் சாக்லெட்டை சாப்பிடுவது தான். 
 
இரத்த சர்க்கரை அளவு குறைதல் 
 
கர்ப்பமாக இருக்கும் போது, சரியாக சாப்பிட முடியாமலும், வேலை செய்ய முடியாமலும் இருக்கும். அவ்வாறு இருந்தால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காது. இதனால் மதிய வேளையில் ஒருவித தலைவலி ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது என்றும், அந்த நேரத்தில் ஏதேனும் ஜூஸ் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம். 
 
புகைப்பிடித்தல்/காப்ஃபைன் அதிகம் பருகுதல் 
 
சில நேரங்களில், இந்த காரணங்களாலும் தலைவலியானது ஏற்படும். எனவே இந்த சமயத்தில் புகைப்பிடித்தலை நிறுத்திவிட்டு, காப்ஃபைன் அதிகம் பருகுதையும் தவிர்க்க வேண்டும். இதனாலும் தலைவலியை சரிசெய்யலாம். 
 
அதிகப்படியான இரைச்சல் 
 
கர்ப்பமாக இருக்கும் போது, அதிகப்படியான இரைச்சலின் காரணமாகவும் தலைவலி ஏற்படும். இதற்கு ஒரே வலி சப்தமில்லாத இடத்தில் இருப்பது தான். மேலும் இத்தகையவற்றால் தலைவலிக்கு ஆளாகுபவர்கள், டிவியை பார்க்காமல், லைட்டுகளை அணைத்துவிட்டு, நிம்மதியான ஒரு குட்டித் தூக்கம் போடுவது தான். 
 
இவையே கர்ப்பத்தின் போது தலைவலியை ஏற்படுத்தும் செயல்கள். நீங்கள் எந்த பிரச்சனையால் தலைவலிக்கு உள்ளானீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்....


Thanks to Thatstamil