தேவையான பொருட்கள்....
ஆரஞ்சுப்பழம் - 6
சுக்கு - சிறிய துண்டு
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை.
செய்முறை......
ஆரஞ்சுப்பழத்தைத் தோல் நீக்கி, சுளையை தனியாக எடுத்துக் கொண்டு, சுக்கு, உப்பைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும். (அதிக நேரம் மிக்ஸியில் அரைத்தால் துவர்ப்புச் சுவை கூடி விடும்)
ஆரஞ்சுப்பழத்திலேயே தண்ணீர் இருப்பதால், தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.
சூப்பரான எனர்ஜி ஜுஸ் இதுதான் என்பீர்கள்.