தீப்பெட்டி பற்றிய தகவல்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:33 | Best Blogger Tips
தீப்பெட்டி பற்றிய தகவல்கள்:-

ஆதிகால மனிதர்கள் கிடைத்த உணவுகளை சமைக்காமல் உண்டார்கள். பின் காலபோக்கில் இரண்டு கற்களை உரசி தீயை உருவாக்கினார்கள். அதன்பின் குச்சிகளை உரசி தீயை உண்டாக்கினார்கள்.
                1669 - ல் பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த வேதிப் பொருளையே தீயை உண்டாக்கும் பொருளாக பயன்படுத்தினர். 1680 - ல் ராபர்ட் பாயில் என்ற ஆங்கிலேயர் பாஸ்பரசும், கந்தகமும் ஒன்றோடொன்று உரசும் போது தீ உருவாவதைக் கண்டறிந்தார். 1830 - ல் சார்லஸ் சாருய்யா என்ற பிரெஞ்சு வேதியலார் வெண்பாஸ்பரசை வைத்து தீபெட்டி (Match box)உருவாக்கினார். 1832 - ல் ஜெர்மனி முதலாவதாக தீபெட்டிகளை கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. வெண்பாஸ்பரசால் செய்த தீப்பெட்டிகள் எளிதில் தீப்பற்றிக் கொண்டதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டது.
                1845 - ல் சிவப்பு பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பயன்படுத்தி எளிதில் தீ பிடிக்காத பாதுகாப்பான தீக்குச்சிகளை 1855 - ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். சிவப்பு பாஸ்பரசால் செய்யப்பட்ட பாதுகாப்பான தீப்பெட்டிகளை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோகன் எட்வர்ட் லுன்ஸ்ரான் உருவாக்கினார். லுன்ஸ்ரான் நாம் தற்பொழுது தீப்பெட்டிகளில் பயன்படுத்தும் அதே வேதிப் பொருட்களை 1855 - ல் பயன்படுத்தினார்ஆதிகால மனிதர்கள் கிடைத்த உணவுகளை சமைக்காமல் உண்டார்கள். பின் காலபோக்கில் இரண்டு கற்களை உரசி தீயை உருவாக்கினார்கள். அதன்பின் குச்சிகளை உரசி தீயை உண்டாக்கினார்கள்.
1669 - ல் பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்து இந்த வேதிப் பொருளையே தீயை உண்டாக்கும் பொருளாக பயன்படுத்தினர். 1680 - ல் ராபர்ட் பாயில் என்ற ஆங்கிலேயர் பாஸ்பரசும், கந்தகமும் ஒன்றோடொன்று உரசும் போது தீ உருவாவதைக் கண்டறிந்தார். 1830 - ல் சார்லஸ் சாருய்யா என்ற பிரெஞ்சு வேதியலார் வெண்பாஸ்பரசை வைத்து தீபெட்டி (Match box)உருவாக்கினார். 1832 - ல் ஜெர்மனி முதலாவதாக தீபெட்டிகளை கடைகளில் விற்பனைக்குக் கொண்டுவந்தது. வெண்பாஸ்பரசால் செய்த தீப்பெட்டிகள் எளிதில் தீப்பற்றிக் கொண்டதால் விபத்துகள் அதிகம் ஏற்பட்டது.
1845 - ல் சிவப்பு பாஸ்பரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதை பயன்படுத்தி எளிதில் தீ பிடிக்காத பாதுகாப்பான தீக்குச்சிகளை 1855 - ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். சிவப்பு பாஸ்பரசால் செய்யப்பட்ட பாதுகாப்பான தீப்பெட்டிகளை ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜோகன் எட்வர்ட் லுன்ஸ்ரான் உருவாக்கினார். லுன்ஸ்ரான் நாம் தற்பொழுது தீப்பெட்டிகளில் பயன்படுத்தும் அதே வேதிப் பொருட்களை 1855 - ல் பயன்படுத்தினார்
 
Thanks to FB Karthikeyan Mathan