வெப்பம் ....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:20 | Best Blogger Tips
Photo: எல்லாம் சிவமயம் என்பார்கள். அந்த சிவமே உஷ்ணமானவர். அதனால்தான் இந்த பிரபஞ்சமே வெப்பமாக இருக்கிறது. எங்கெங்கு காணினும் வெப்பமடா என்று சொல்லும் அளவுக்கு எல்லா இடத்திலும் வெப்பம் இருக்கிறது. உயிரே வெப்பமானதுதான். அதனால் தான் உயிர் இருக்கும் வரை உடலில் வெப்பம் இருக்கிறது. பூமிக்கு உள்ளேயும், வெளியேயும் வெப்பம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் நம்மால் வெப்பத்தை உணர முடிகிறது. பிரபஞ்சத்தின் உண்மையான நிலை இருள்தான். சூரியனோ மற்ற ஒளியோ இல்லை என்றால் உலகம் இருண்டு போய்விடும். அது போல நீரோ, காற்றோ இல்லை என்றால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போகும். ஆனாலும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அந்த நீரிலும், காற்றிலும் கூட வெப்பசக்தி இருக்கிறது. வருணனைப் பற்றி சொல்லுமிடத்து ரிக் வேதத்தில் ''நீருக்குள் அக்கினியை வைத்தான்'' என்று ஒரு வரி வரும். நம் முன்னோர்கள் இந்த சூக்கும இரகசியங்களை எல்லாம் அன்றே உணர்ந்திருந்தார்கள். 

மனிதனில் நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிப்பதே இந்த உஷ்ணம்தான். அந்த நல்ல மனிதனின் தேகம் சுப தேகமாகும். கெட்டவனின் தேகம் அசுப தேகமாகும். ஒரு காட்டிலோ, புல் தரையிலோ அசுப தேகம் கொண்டவன் நடந்தால் புல்பூண்டுகள் எல்லாம் அழிந்துவிடுகிறது. மீண்டும் முளைப்பதில்லை. அங்கு ஒரு பாதை உண்டாகி விடுகிறது. அப்படியே முளைத்தாலும் அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால் சுப தேகம் கொண்ட ஞானியோ, சித்தர்களோ, ரிஷிகளோ நடந்தால் செடி கொடிகள் அழிவதுமில்லை. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் நேராது. இதற்குக் காரணம் என்னவென்றால் சாதாரண மனிதனின் கால்களில் ஒரு விதமான விஷ வெப்பமுள்ளது. அவன் நடந்த இடத்தில் இரண்டு அடிக்கு மண் வெட்டிப் புரட்டிப் போட்டு விட்டுதான் செடிகளை பயிர் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் ஞான வெப்பம், அக்ஞான வெப்பம், விஷ வெப்பம், அமுத வெப்பம் என்று பலதரப்பட்ட வெப்பங்கள் உள்ளன. உள்ளங்காலிலுள்ள விஷ வெப்பம் மண்ணிலுள்ள உயிர் பொருளை அழித்து விடுகிறது. அந்த விஷ வெப்பமுள்ளவன் உடலில் இருந்து விஷ வெப்பமானது நீங்கி விட்டால் அக்ஞான வெப்பம் அழிந்து விடும். அந்த அசுப வெப்பம் நீங்கியவன் ஞானி. நீங்காதவன் அஞ்ஞானி. 

இன்னும் சொல்லப் போனால் ஆண் வெப்பம், பெண் வெப்பம் என்றும் உண்டு. பெண்ணின் வெப்பம் ஆணுக்கு சுகத்தைக் கொடுக்கும். ஆணின் வெப்பம் பெண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும். இந்த இரு வெப்பமும் நீங்கியவர்களுக்கு ஞான வெப்பம் மேலோங்கும். அது இன்னும் பேரானந்தமாக இருக்கும். காமம் அழியும் அமைதி நிலவும். வாசிப் பயிற்சியினால், தியானத்தால், ஜெப, தவத்தால், மௌனத்தால் உடம்பிலுள்ள எல்லா அசுத்த வெப்பங்கள் மொத்தமும் நீங்கி விடும். ஞான வெப்பம் மட்டுமே எஞ்சி நிற்கும். அதனால் அது வலிமை அடைந்து குண்டலினி என்கிற சக்தியின் வெப்பத்தை கிளப்பி விடும். அதன் விளைவு அமுத வெப்பத்தை யோகி அனுபவிக்கலாம். காம வெப்பம் அதிக உஷ்ண முடையது. கோப வெப்பமோ அதனினும் உஷ்ணமானது. குரோத வெப்பமோ கேட்கவே வேண்டாம். இந்த வெப்பங்களெல்லாம் சேர்ந்தால் மனிதனின் நரம்புகள் வீணாகி விடும். நாடி நரம்புகள் எல்லாம் சூடேறி மூளை தன் செயல்திறனை இழக்கும். அக்ஞான வெப்பம் மேலோங்கி நிற்கும். இது போன்ற ஐந்து அக்ஞான வெப்பங்களை உடையவன் கோமா என்கிற நிலைக்குப் போய்விடுவான். ஞானியோ தன் சாதனையின் வலிமையினால் அசுத்த வெப்பங்கள் அனைத்தையும் நீக்கி விடுவான். சுக்கில வெப்பம், சுரோணித வெப்பங்களையும் அறவே நீக்கி விடுவான். அதனால் அவனுக்கு முதலில் கல்ப வெப்பமும், அதற்குப் பிறகு ஞான வெப்பமும் முடிவில் அமுத வெப்பமும் சித்தியாகிறது. அப்போது அவன் நிர்விகல்ப ஸமாதியை அனுபவிப்பான். முடிவில் எல்லா வெப்பங்களும் நீங்கி பரிசுத்தமாகிய ஞானியை ஒரு வெப்பம் தனக்குள்ளே ஈர்த்துக் கொள்ளும். அதுவே சிவ வெப்பமாகும். அதற்கு உள்ளே போனால் எந்த பேதமும் இல்லை. அங்கே இரண்டென்ற நிலையே இல்லை. அதற்கு மேல் எதுவுமே இல்லை. அது இல்லாமலும் எதுவுமே இல்லை. அதுதான் சுடுகாடு. அங்கே அக்ஞானத் தத்துவங்கள் மட்டுமல்ல ஞானத் தத்துவங்களும் எரிந்து போகும். 

''சுட்டசுடு காடுமது வெளியுமாகும்;
சொல்லுதற்கு வாய் விளங்காச் சூட்சந்தானே.''
- கரூரார்.
இதையே மாணிக்க வாசகர் ''கோயில் சுடுகாடு'' என்பார். கோ என்றால் தெய்வத்தையும், ஆகாயத்தையும், வெளிச்சத்தையும், ஜீவனையும் குறிக்கும். இல் என்றால் வீடு. மேலோட்டமாகப் பார்த்தால் ஆலயத்தில் சென்று வணங்கினால் மும்மலங்களும் எரிந்து நாசமாகும். எனவே கோயில் சுடுகாடு என்பர். ஆனால் சூக்கும இரகசியம் அதுவல்ல. அது என்னவென்றால் கோ அதாவது உலகுக்கு அரசனாகிய சிவனின் இருப்பிடமே அனைத்து மூல மலங்களையும், தத்துவங்களையும் கொளுத்தும் இடமாகும். எனவே கோயில் சுடுகாடு.எல்லாம் சிவமயம் என்பார்கள். அந்த சிவமே உஷ்ணமானவர். அதனால்தான் இந்த பிரபஞ்சமே வெப்பமாக இருக்கிறது. எங்கெங்கு காணினும் வெப்பமடா என்று சொல்லும் அளவுக்கு எல்லா இடத்திலும் வெப்பம் இருக்கிறது. உயிரே வெப்பமானதுதான். அதனால் தான் உயிர் இருக்கும் வரை உடலில் வெப்பம் இருக்கிறது. பூமிக்கு உள்ளேயும், வெளியேயும் வெப்பம் கொதித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நிமிடம் காற்று இல்லை என்றால் நம்மால் வெப்பத்தை உணர முடிகிறது. பிரபஞ்சத்தின் உண்மையான நிலை இருள்தான். சூரியனோ மற்ற ஒளியோ இல்லை என்றால் உலகம் இருண்டு போய்விடும். அது போல நீரோ, காற்றோ இல்லை என்றால் எல்லாம் எரிந்து சாம்பலாகிப் போகும். ஆனாலும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் அந்த நீரிலும், காற்றிலும் கூட வெப்பசக்தி இருக்கிறது. வருணனைப் பற்றி சொல்லுமிடத்து ரிக் வேதத்தில் ''நீருக்குள் அக்கினியை வைத்தான்'' என்று ஒரு வரி வரும். நம் முன்னோர்கள் இந்த சூக்கும இரகசியங்களை எல்லாம் அன்றே உணர்ந்திருந்தார்கள்.

மனிதனில் நல்லவன் கெட்டவன் என்பதை தீர்மானிப்பதே இந்த உஷ்ணம்தான். அந்த நல்ல மனிதனின் தேகம் சுப தேகமாகும். கெட்டவனின் தேகம் அசுப தேகமாகும். ஒரு காட்டிலோ, புல் தரையிலோ அசுப தேகம் கொண்டவன் நடந்தால் புல்பூண்டுகள் எல்லாம் அழிந்துவிடுகிறது. மீண்டும் முளைப்பதில்லை. அங்கு ஒரு பாதை உண்டாகி விடுகிறது. அப்படியே முளைத்தாலும் அதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும். ஆனால் சுப தேகம் கொண்ட ஞானியோ, சித்தர்களோ, ரிஷிகளோ நடந்தால் செடி கொடிகள் அழிவதுமில்லை. அவற்றிற்கு எந்தவித பாதிப்பும் நேராது. இதற்குக் காரணம் என்னவென்றால் சாதாரண மனிதனின் கால்களில் ஒரு விதமான விஷ வெப்பமுள்ளது. அவன் நடந்த இடத்தில் இரண்டு அடிக்கு மண் வெட்டிப் புரட்டிப் போட்டு விட்டுதான் செடிகளை பயிர் செய்ய வேண்டும். ஒவ்வொரு மனித உடலுக்குள்ளும் ஞான வெப்பம், அக்ஞான வெப்பம், விஷ வெப்பம், அமுத வெப்பம் என்று பலதரப்பட்ட வெப்பங்கள் உள்ளன. உள்ளங்காலிலுள்ள விஷ வெப்பம் மண்ணிலுள்ள உயிர் பொருளை அழித்து விடுகிறது. அந்த விஷ வெப்பமுள்ளவன் உடலில் இருந்து விஷ வெப்பமானது நீங்கி விட்டால் அக்ஞான வெப்பம் அழிந்து விடும். அந்த அசுப வெப்பம் நீங்கியவன் ஞானி. நீங்காதவன் அஞ்ஞானி.

இன்னும் சொல்லப் போனால் ஆண் வெப்பம், பெண் வெப்பம் என்றும் உண்டு. பெண்ணின் வெப்பம் ஆணுக்கு சுகத்தைக் கொடுக்கும். ஆணின் வெப்பம் பெண்ணுக்கு சுகத்தைக் கொடுக்கும். இந்த இரு வெப்பமும் நீங்கியவர்களுக்கு ஞான வெப்பம் மேலோங்கும். அது இன்னும் பேரானந்தமாக இருக்கும். காமம் அழியும் அமைதி நிலவும். வாசிப் பயிற்சியினால், தியானத்தால், ஜெப, தவத்தால், மௌனத்தால் உடம்பிலுள்ள எல்லா அசுத்த வெப்பங்கள் மொத்தமும் நீங்கி விடும். ஞான வெப்பம் மட்டுமே எஞ்சி நிற்கும். அதனால் அது வலிமை அடைந்து குண்டலினி என்கிற சக்தியின் வெப்பத்தை கிளப்பி விடும். அதன் விளைவு அமுத வெப்பத்தை யோகி அனுபவிக்கலாம். காம வெப்பம் அதிக உஷ்ண முடையது. கோப வெப்பமோ அதனினும் உஷ்ணமானது. குரோத வெப்பமோ கேட்கவே வேண்டாம். இந்த வெப்பங்களெல்லாம் சேர்ந்தால் மனிதனின் நரம்புகள் வீணாகி விடும். நாடி நரம்புகள் எல்லாம் சூடேறி மூளை தன் செயல்திறனை இழக்கும். அக்ஞான வெப்பம் மேலோங்கி நிற்கும். இது போன்ற ஐந்து அக்ஞான வெப்பங்களை உடையவன் கோமா என்கிற நிலைக்குப் போய்விடுவான். ஞானியோ தன் சாதனையின் வலிமையினால் அசுத்த வெப்பங்கள் அனைத்தையும் நீக்கி விடுவான். சுக்கில வெப்பம், சுரோணித வெப்பங்களையும் அறவே நீக்கி விடுவான். அதனால் அவனுக்கு முதலில் கல்ப வெப்பமும், அதற்குப் பிறகு ஞான வெப்பமும் முடிவில் அமுத வெப்பமும் சித்தியாகிறது. அப்போது அவன் நிர்விகல்ப ஸமாதியை அனுபவிப்பான். முடிவில் எல்லா வெப்பங்களும் நீங்கி பரிசுத்தமாகிய ஞானியை ஒரு வெப்பம் தனக்குள்ளே ஈர்த்துக் கொள்ளும். அதுவே சிவ வெப்பமாகும். அதற்கு உள்ளே போனால் எந்த பேதமும் இல்லை. அங்கே இரண்டென்ற நிலையே இல்லை. அதற்கு மேல் எதுவுமே இல்லை. அது இல்லாமலும் எதுவுமே இல்லை. அதுதான் சுடுகாடு. அங்கே அக்ஞானத் தத்துவங்கள் மட்டுமல்ல ஞானத் தத்துவங்களும் எரிந்து போகும்.

''சுட்டசுடு காடுமது வெளியுமாகும்;
சொல்லுதற்கு வாய் விளங்காச் சூட்சந்தானே.''
- கரூரார்.
இதையே மாணிக்க வாசகர் ''கோயில் சுடுகாடு'' என்பார். கோ என்றால் தெய்வத்தையும், ஆகாயத்தையும், வெளிச்சத்தையும், ஜீவனையும் குறிக்கும். இல் என்றால் வீடு. மேலோட்டமாகப் பார்த்தால் ஆலயத்தில் சென்று வணங்கினால் மும்மலங்களும் எரிந்து நாசமாகும். எனவே கோயில் சுடுகாடு என்பர். ஆனால் சூக்கும இரகசியம் அதுவல்ல. அது என்னவென்றால் கோ அதாவது உலகுக்கு அரசனாகிய சிவனின் இருப்பிடமே அனைத்து மூல மலங்களையும், தத்துவங்களையும் கொளுத்தும் இடமாகும். எனவே கோயில் சுடுகாடு.
 
Via FB மௌனத்தின் குரல்