மனிதன் சகலர்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:27 | Best Blogger Tips
Photo: விஞ்ஞானகலர்,பிரளயகலர்,சகலர் என்ற மூன்றுவித ஆன்ம தத்துவ வடிங்களில் மனிதன் சகலர் என்ற தத்துவ வடிவமாகும். சகலர் என்ற ஆன்மாவிற்கே உரித்தான ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலக் குற்றங்களை உடையவன் மனிதன். இக்குற்றங்க்களை அகற்றி நிர்மலமான ஆன்மாவைப் பெற்று பரம்பொருளோடு ஒன்று சேர்வதற்கான தத்துவத்தைக் குறிக்கும் மூர்த்தியே திரிபுராந்தீஸ்வரர் என்ற முப்புறம் எரித்த ஈசனின் வடிவம். இந்த மூன்று மலங்களும் பொன், வெள்ளி, இரும்பாலாகிய கோட்டையில் வசிக்கும் தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களாக சித்தரிக்கப் பட்டுள்ளது. அசுர சக்தியாகிய மூன்று மலங்களும் ஜீவாத்மாவை கொடுமையாகத் துன்புறுத்துவதால் அதில் இருந்து விடுபட பரமாத்மாவை பணிகின்ற வேளையில், பரம்பொருளான இறையாற்றல் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் நிறுத்தி, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியை அக்னியாகவும் வைத்து தேரில் ஏறி புறப்படும் போது அச்சு தேரின் முறிகின்றது. அப்போது ஆதிமூலத்தை வணங்கி திரிபுராதியர்களான அசுரர்கள் மீது பாணத்தை பிரயோகிக்க நினைத்தவர், இது தேவையற்றது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அசுரர்களைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடியில் அசுரர்கள் எரிந்து சாம்பலானார்கள். இது புராணம்.

மூலாதாரமே பூமி. இந்த மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. இது ப்ருத்வி தத்துவமாகும். இதுவே தேராக சொல்லப்பட்டது. அந்த தேருக்கு சூரியகலை, சந்திரகலை என்கிற மூச்சுக்களே சக்கரங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் குதிரைகள். தத்துவம் அசி என்ற உண்மை தத்துவமே பிரம்மன் என்ற தேரோட்டி.முதுகுத் தண்டே மேருமலை.அதில் உள்ள ஸுஷும்ணா நாடியே வாசுகி. தர்மத்தின் வடிவான திருமாலே அம்பு. குண்டலினி சக்தியான ருத்ரனே அக்னி. இவை அனைத்தையும் கொண்டு செல்லும் தத்துவமே இறைவன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மெய்ஞானத்தைக் குறிப்பவை. மெய்ஞானம் என்பது உண்மைத் தத்துவம். இந்த உண்மைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கும் போது அதிலிருந்து வெளிப்படும் ஓஜஸே புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பாகிய ஓஜஸால் மும்மலங்களாகிய அசுரசக்திகள் எரிந்து போகின்றன. இத்தகைய அரிய குண்டலினி யோக தத்துவத்தைக் குறிக்கின்ற ஸ்தலமே திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் ஆலயம். எங்கள் ஊரிலும் இதே பெயரில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தத்துவத்தை உணர்ந்து, உள்வாங்கி இந்தத் திருத்தலங்களை வழிபடுபவர்களுக்கு குண்டலினி சக்தி இறையாற்றலை அடைவதற்கு அருள் புரிவாள்.
விஞ்ஞானகலர்,பிரளயகலர்,சகலர் என்ற மூன்றுவித ஆன்ம தத்துவ வடிங்களில் மனிதன் சகலர் என்ற தத்துவ வடிவமாகும். சகலர் என்ற ஆன்மாவிற்கே உரித்தான ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலக் குற்றங்களை உடையவன் மனிதன். இக்குற்றங்க்களை அகற்றி நிர்மலமான ஆன்மாவைப் பெற்று பரம்பொருளோடு ஒன்று சேர்வதற்கான தத்துவத்தைக் குறிக்கும் மூர்த்தியே திரிபுராந்தீஸ்வரர் என்ற முப்புறம் எரித்த ஈசனின் வடிவம். இந்த மூன்று மலங்களும் பொன், வெள்ளி, இரும்பாலாகிய கோட்டையில் வசிக்கும் தாருகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற அசுரர்களாக சித்தரிக்கப் பட்டுள்ளது. அசுர சக்தியாகிய மூன்று மலங்களும் ஜீவாத்மாவை கொடுமையாகத் துன்புறுத்துவதால் அதில் இருந்து விடுபட பரமாத்மாவை பணிகின்ற வேளையில், பரம்பொருளான இறையாற்றல் பூமியைத் தேராகவும், சூரிய சந்திரர்களைத் தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவைத் தேரோட்டியாகவும் நிறுத்தி, மேரு மலையை வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியை அக்னியாகவும் வைத்து தேரில் ஏறி புறப்படும் போது அச்சு தேரின் முறிகின்றது. அப்போது ஆதிமூலத்தை வணங்கி திரிபுராதியர்களான அசுரர்கள் மீது பாணத்தை பிரயோகிக்க நினைத்தவர், இது தேவையற்றது என்று தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அசுரர்களைப் பார்த்து புன்னகைத்த அடுத்த நொடியில் அசுரர்கள் எரிந்து சாம்பலானார்கள். இது புராணம்.

மூலாதாரமே பூமி. இந்த மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ளது. இது ப்ருத்வி தத்துவமாகும். இதுவே தேராக சொல்லப்பட்டது. அந்த தேருக்கு சூரியகலை, சந்திரகலை என்கிற மூச்சுக்களே சக்கரங்கள். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கும் குதிரைகள். தத்துவம் அசி என்ற உண்மை தத்துவமே பிரம்மன் என்ற தேரோட்டி.முதுகுத் தண்டே மேருமலை.அதில் உள்ள ஸுஷும்ணா நாடியே வாசுகி. தர்மத்தின் வடிவான திருமாலே அம்பு. குண்டலினி சக்தியான ருத்ரனே அக்னி. இவை அனைத்தையும் கொண்டு செல்லும் தத்துவமே இறைவன்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் மெய்ஞானத்தைக் குறிப்பவை. மெய்ஞானம் என்பது உண்மைத் தத்துவம். இந்த உண்மைத் தத்துவங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிற்கும் போது அதிலிருந்து வெளிப்படும் ஓஜஸே புன்சிரிப்பு. அந்த புன்சிரிப்பாகிய ஓஜஸால் மும்மலங்களாகிய அசுரசக்திகள் எரிந்து போகின்றன. இத்தகைய அரிய குண்டலினி யோக தத்துவத்தைக் குறிக்கின்ற ஸ்தலமே திருவதிகை திருவீரட்டானேஸ்வரர் ஆலயம். எங்கள் ஊரிலும் இதே பெயரில் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த தத்துவத்தை உணர்ந்து, உள்வாங்கி இந்தத் திருத்தலங்களை வழிபடுபவர்களுக்கு குண்டலினி சக்தி இறையாற்றலை அடைவதற்கு அருள் புரிவாள்.
 
Via FB மௌனத்தின் குரல்