உயிர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
Photo: படைத்தவன் எதையும் அழிக்க நினைப்பதில்லை. படைக்கப்பட்டவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதோடு, தன்னோடு சார்ந்துள்ள விஷயங்களையும் அழிக்கிறான். ஊறுகாய் நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு எவ்வளவு அவசியமோ, அது போல உடலைப் பாதுகாக்க நாண்ட நாள் அழியாமல் வைத்திருக்க உயிர் அவசியம். அதற்கு உயிர் பொருள் அவசியம். அது எதுவெனில் சுக்கில,  சுரோணிதமே. எந்த ஒரு மனிதனுக்கு சுக்கிலத்தில் பலமில்லையோ, அவன் எப்போதும் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகிக் கொண்டே இருப்பான். எவன் ஒருவனுக்கு விந்து நீர்த்து போய் இருக்கிறதோ, அவன் உடல் பலவீனமாகவே இருக்கும். தண்ணீர் இல்லாமல் பூமியே வறண்டு வெடிப்பு விட்டு ஊரே உருக்குலைந்து காணப்படுவது போல,சுக்கிலம் குறையக் குறைய உடல் வறண்டு, தோல் சுருங்கி, தேகம் உருக்குலைந்து போய் விடுகிறது. நமக்கு ஒரு உயிர் அணுவைக் கூட உற்பத்தி செய்யத் தெரியாது. நமக்காக நம் உடல் உயிர் அணுக்களை உற்பத்தி செய்து தருகிறது. நாமோ அதையெல்லாம் வீணே செலவு செய்வதோடு, பலமில்லாத அடுத்த தலைமுறையையும் உருவாக்கி விடுகிறோம். அவர்களுக்கு நாம் சேர்த்து வைத்த ஒரே சொத்து வியாதிகள்தான். தண்ணீர் வளத்தை ஒத்துதான் நிலத்தின் வளம் அமையும். ஏனைய எல்லா சத்துக்களும் இருந்தாலும் நீர் வளம் இல்லாத நிலம் தரிசே. சில சித்தர்களின் பாடலைக் கேட்கும் போது, இவர்கள் ஏன் இப்படி உடலையும், பெண்களையும், காம உணர்வுகளையும் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அது ஒரு கலை. வெறுப்பை உண்டாக்கி ஒரு விஷயத்தில் இருந்து மனதை மடைமாற்றும் முயற்சி. அவ்வளவுதான். மழையே இல்லாமல் தண்ணீர் கிடைக்காத தேசத்தில் ஏரித் தண்ணீர் இருக்கும் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதுவும் வறண்டு போனால், அவ்வளவுதான் பஞ்சம், பசி, பட்டினி, நோய், களவு எல்லாம் ஏற்பட்டுவிடும். பயிர்கள் பஞ்சத்தில் வாடுவது போல், தலையில் உள்ள மயிர்கள் நரைத்துப் போய்விடுகிறது. அதன் மினுமினுப்பு மாறி விடுகிறது. மனிதனைத் தவிர எந்த இனமும் சுய இன்பம் அனுபவிப்பதில்லை. கருவுற்ற பெண் இனத்தோடு கூடுவதில்லை. தன்னுடைய உயிர் பொருளை வீணாக்குவதில்லை. தன்னால் இயலாத நிலையில் முயற்சிப்பதில்லை. எந்நேரமும் அதே சிந்தனையிலேயே இருப்பதில்லை. வாடிய பயிர்களைக் கண்டு மட்டுமல்ல இவ்வாறு உயிர் பொருளை இழந்து தவிக்கும் மனிதர்களையும் கண்டு வாடினார் வள்ளல் பெருமான். ஆகவேதான் சாகாக் கலையை கடை விரித்தார். ஆனால் கொள்வார் இல்லையே என்பதுதான் அவர் வருத்தம். 
நாம் எல்லோரும் நினைப்பது போல் உடலுக்குள் உயிர் இல்லை. உயிருக்குள்தான் உடல் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு உடலை உயிரோடு சேர்த்தே பல காலம் இருத்துவதே தவம். இப்படி உயிரை உணர்ந்து, உயிரோடு உடலை இணைத்துப் பழக்கப்பட்டவர்கள், இதையே பேரின்பம் என்கின்றனர். இந்த இன்பத்தை விட சிறந்த இன்பம் வேறில்லை என்று நம்மை விட்டு ஒதுங்கிப் போய் வாழ்கிறார்கள். காரணம் நமது எந்த கருத்துக்களிலும், செயல்களிலும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை.படைத்தவன் எதையும் அழிக்க நினைப்பதில்லை. படைக்கப்பட்டவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதோடு, தன்னோடு சார்ந்துள்ள விஷயங்களையும் அழிக்கிறான். ஊறுகாய் நீண்ட நாள் கெடாமல் இருக்க உப்பு எவ்வளவு அவசியமோ, அது போல உடலைப் பாதுகாக்க நாண்ட நாள் அழியாமல் வைத்திருக்க உயிர் அவசியம். அதற்கு உயிர் பொருள் அவசியம். அது எதுவெனில் சுக்கில, சுரோணிதமே. எந்த ஒரு மனிதனுக்கு சுக்கிலத்தில் பலமில்லையோ, அவன் எப்போதும் ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகிக் கொண்டே இருப்பான். எவன் ஒருவனுக்கு விந்து நீர்த்து போய் இருக்கிறதோ, அவன் உடல் பலவீனமாகவே இருக்கும். தண்ணீர் இல்லாமல் பூமியே வறண்டு வெடிப்பு விட்டு ஊரே உருக்குலைந்து காணப்படுவது போல,சுக்கிலம் குறையக் குறைய உடல் வறண்டு, தோல் சுருங்கி, தேகம் உருக்குலைந்து போய் விடுகிறது. நமக்கு ஒரு உயிர் அணுவைக் கூட உற்பத்தி செய்யத் தெரியாது. நமக்காக நம் உடல் உயிர் அணுக்களை உற்பத்தி செய்து தருகிறது. நாமோ அதையெல்லாம் வீணே செலவு செய்வதோடு, பலமில்லாத அடுத்த தலைமுறையையும் உருவாக்கி விடுகிறோம். அவர்களுக்கு நாம் சேர்த்து வைத்த ஒரே சொத்து வியாதிகள்தான். தண்ணீர் வளத்தை ஒத்துதான் நிலத்தின் வளம் அமையும். ஏனைய எல்லா சத்துக்களும் இருந்தாலும் நீர் வளம் இல்லாத நிலம் தரிசே. சில சித்தர்களின் பாடலைக் கேட்கும் போது, இவர்கள் ஏன் இப்படி உடலையும், பெண்களையும், காம உணர்வுகளையும் கொச்சைப் படுத்துகிறார்கள் என்று தோன்றும். அது ஒரு கலை. வெறுப்பை உண்டாக்கி ஒரு விஷயத்தில் இருந்து மனதை மடைமாற்றும் முயற்சி. அவ்வளவுதான். மழையே இல்லாமல் தண்ணீர் கிடைக்காத தேசத்தில் ஏரித் தண்ணீர் இருக்கும் வரைதான் தாக்குப் பிடிக்க முடியும். அதுவும் வறண்டு போனால், அவ்வளவுதான் பஞ்சம், பசி, பட்டினி, நோய், களவு எல்லாம் ஏற்பட்டுவிடும். பயிர்கள் பஞ்சத்தில் வாடுவது போல், தலையில் உள்ள மயிர்கள் நரைத்துப் போய்விடுகிறது. அதன் மினுமினுப்பு மாறி விடுகிறது. மனிதனைத் தவிர எந்த இனமும் சுய இன்பம் அனுபவிப்பதில்லை. கருவுற்ற பெண் இனத்தோடு கூடுவதில்லை. தன்னுடைய உயிர் பொருளை வீணாக்குவதில்லை. தன்னால் இயலாத நிலையில் முயற்சிப்பதில்லை. எந்நேரமும் அதே சிந்தனையிலேயே இருப்பதில்லை. வாடிய பயிர்களைக் கண்டு மட்டுமல்ல இவ்வாறு உயிர் பொருளை இழந்து தவிக்கும் மனிதர்களையும் கண்டு வாடினார் வள்ளல் பெருமான். ஆகவேதான் சாகாக் கலையை கடை விரித்தார். ஆனால் கொள்வார் இல்லையே என்பதுதான் அவர் வருத்தம்.
நாம் எல்லோரும் நினைப்பது போல் உடலுக்குள் உயிர் இல்லை. உயிருக்குள்தான் உடல் இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு உடலை உயிரோடு சேர்த்தே பல காலம் இருத்துவதே தவம். இப்படி உயிரை உணர்ந்து, உயிரோடு உடலை இணைத்துப் பழக்கப்பட்டவர்கள், இதையே பேரின்பம் என்கின்றனர். இந்த இன்பத்தை விட சிறந்த இன்பம் வேறில்லை என்று நம்மை விட்டு ஒதுங்கிப் போய் வாழ்கிறார்கள். காரணம் நமது எந்த கருத்துக்களிலும், செயல்களிலும் இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
 
Via FB மௌனத்தின் குரல்