''நான்''

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:58 | Best Blogger Tips
Photo: ''நான்'' என்கிற இந்த முக மூடியை எடுத்து விட்டால்  இந்த உலகில் உள்ள எல்லாம் ஒன்று தான் என்பது தெரியும். ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துப் போட்டுவிட முடியாது. ஏனென்றால் ஆதியின் முதல் சலனமே இந்த நான் என்கிற உணர்வு என்று சொல்லப் படுகிறது. அதன் விளைவாக வந்த அனைத்து உயிர்களிலும் இந்த ''நான்'' இருப்பதை நீங்கள் காண முடியும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் '' குழந்தைகள்''  எதுவுமே தெரியாத போதும் அவர்களிடம் இந்த ''நான்'' என்கிற உணர்வு அதிகமாக இருக்கக் காணலாம். பகவத் கீதையில் கண்ணன் அடிக்கடி நான் நான் என்று சொல்வார். என்ன இது கண்ணனே இப்படிச் சொல்கிறாரே என்று கவனித்தால், இங்கு எல்லாம் நான்தான். ஆனால் நீ உன்னை நான் என்று நினைத்தால் என்னை வந்து அடைய முடியாது. இந்த நானை எடுத்து விடு நீயும் நானும் ஒன்றாகி விடுவோம், என்பதற்காகத்தான். நான் என்று நினைப்பு மனதில் இருந்தால் அது செயலிலும் பிரிதிபலிக்கும். எனவேதான் பாஞ்சாலி தன் கைகளால் மார்புக்குக் குறுக்காக சேலையைப் பிடித்தபடி போராடிக் கொண்டிருந்தாள். அவள் கைகளை எடுத்து தலைக்கு மேலே கூப்பிய போது அவளிடம் இருந்த நான் விலகிப்போனது. வந்தான் கண்ணன். அந்தக் கட்டத்தில் அவளுக்கு அந்த சராணாகதித் தத்துவத்தை மனதில் புகுத்தியது கண்ணனின் லீலைதான். இல்லை என்றால் போராடுபவள் கைகளை மேலே ஒருக்காலும் தூக்க மாட்டாள். அவள் மூலமாக மிகப் பெரிய சூக்குமத்தை உடைத்தெறிந்தான் கண்ணன். இந்த நான் என்கிற உணர்வு எப்போது நீங்கும். மனம் புலன் வழி செல்லாமல் உள்முகமாகத் திரும்பி அமைதி அடைந்து, ஆதி மூலத்தின் மௌனமான, சலனமில்லாத நிலைக்குப் போகும் போது நீங்கும். அந்த நிலை நிலைத்திருக்க வேண்டிதான் பல வகையான உளவியல் பயிற்சிகள் வற்புறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பயிற்சியாக மேலேறி களங்கங்களை சிறுகச் சிறுக நீக்கி அதியை அடையும் போதுதான் அதில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் அந்த நிலையில் நழுவல் ஏற்பட்டு, திரும்பவும் மேலேற போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். இதை புராணங்களில் நாம் படித்திருக்கிறோம், பல சமயங்களில் தவசீலர்கள் தங்கள் தவ வலிமையை இழந்து, மீண்டும் தவம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவதை. தெளிவான குருவின் மூலம் முறையான பயிற்சியை தளராத வைராக்யத்துடன் கடைபிடித்து வெற்றி கண்ட சாதகர்களே யோகத்தில் நிலைத்திருக்க முடியும்.''நான்'' என்கிற இந்த முக மூடியை எடுத்து விட்டால் இந்த உலகில் உள்ள எல்லாம் ஒன்று தான் என்பது தெரியும். ஆனால் அதை அவ்வளவு எளிதாக எடுத்துப் போட்டுவிட முடியாது. ஏனென்றால் ஆதியின் முதல் சலனமே இந்த நான் என்கிற உணர்வு என்று சொல்லப் படுகிறது. அதன் விளைவாக வந்த அனைத்து உயிர்களிலும் இந்த ''நான்'' இருப்பதை நீங்கள் காண முடியும். இதற்கு ஒரு நல்ல உதாரணம் '' குழந்தைகள்'' எதுவுமே தெரியாத போதும் அவர்களிடம் இந்த ''நான்'' என்கிற உணர்வு அதிகமாக இருக்கக் காணலாம். பகவத் கீதையில் கண்ணன் அடிக்கடி நான் நான் என்று சொல்வார். என்ன இது கண்ணனே இப்படிச் சொல்கிறாரே என்று கவனித்தால், இங்கு எல்லாம் நான்தான். ஆனால் நீ உன்னை நான் என்று நினைத்தால் என்னை வந்து அடைய முடியாது. இந்த நானை எடுத்து விடு நீயும் நானும் ஒன்றாகி விடுவோம், என்பதற்காகத்தான். நான் என்று நினைப்பு மனதில் இருந்தால் அது செயலிலும் பிரிதிபலிக்கும். எனவேதான் பாஞ்சாலி தன் கைகளால் மார்புக்குக் குறுக்காக சேலையைப் பிடித்தபடி போராடிக் கொண்டிருந்தாள். அவள் கைகளை எடுத்து தலைக்கு மேலே கூப்பிய போது அவளிடம் இருந்த நான் விலகிப்போனது. வந்தான் கண்ணன். அந்தக் கட்டத்தில் அவளுக்கு அந்த சராணாகதித் தத்துவத்தை மனதில் புகுத்தியது கண்ணனின் லீலைதான். இல்லை என்றால் போராடுபவள் கைகளை மேலே ஒருக்காலும் தூக்க மாட்டாள். அவள் மூலமாக மிகப் பெரிய சூக்குமத்தை உடைத்தெறிந்தான் கண்ணன். இந்த நான் என்கிற உணர்வு எப்போது நீங்கும். மனம் புலன் வழி செல்லாமல் உள்முகமாகத் திரும்பி அமைதி அடைந்து, ஆதி மூலத்தின் மௌனமான, சலனமில்லாத நிலைக்குப் போகும் போது நீங்கும். அந்த நிலை நிலைத்திருக்க வேண்டிதான் பல வகையான உளவியல் பயிற்சிகள் வற்புறுத்தப்படுகின்றன. ஒவ்வொரு பயிற்சியாக மேலேறி களங்கங்களை சிறுகச் சிறுக நீக்கி அதியை அடையும் போதுதான் அதில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் அந்த நிலையில் நழுவல் ஏற்பட்டு, திரும்பவும் மேலேற போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும். இதை புராணங்களில் நாம் படித்திருக்கிறோம், பல சமயங்களில் தவசீலர்கள் தங்கள் தவ வலிமையை இழந்து, மீண்டும் தவம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுவதை. தெளிவான குருவின் மூலம் முறையான பயிற்சியை தளராத வைராக்யத்துடன் கடைபிடித்து வெற்றி கண்ட சாதகர்களே யோகத்தில் நிலைத்திருக்க முடியும்.
 
Via FB மௌனத்தின் குரல்