சிங்கக்
கூட்டமே எதிரே வந்தாலும் சிதறி ஓட வைப்பான். மதம் கொண்ட யானையையும்
அடக்கிடும் வலிமை கொண்டவன். எவ்வளவு பெரிய படையாக இருந்தாலும் தன் போர்த்
திறமையாலும், வீரத்தாலும் வென்று காட்டுவான். அவன்தான் உலகப் புகழ் பெற்ற
வீரன் நெப்போலியன்.
ஆனால் அன்று அவன் முகம் மிகவும் கவலையுடனும், பயத்துடனும், சோர்வாகவும் காணப்பட்டது. உள்ளே போகாதீர்கள் என்று அவனது உடன் இருக்கும் படைத் தலைவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அந்த இடத்தில் தனியாகப் போய் ஒரு முழு இரவும் இருந்து விட்டு வந்த நெப்போலியன் மிகவும் வெளிரிப் போயிருந்தது. காரணத்தை யார் கேட்டாலும் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தான். சில முக்கியமானவர்களிடம் நான் சொல்வதை நீங்கள் நம்பமாட்டீர்கள் எனவே பேசாமல் போய்விடுங்கள் என்று விரட்டினான்.
அந்த இடம் வேறெதுவுமல்ல, தி கிரேட் பிரமீடு என்றழைக்கப்படும் கெய்ஸா பிரமீடுதான். 1798 ல் எகிப்துக்குச் சென்ற நெப்போலியன் அதன் வடிவத்தையும், பிரம்மாண்டத்தையும் கண்டு ஆச்சர்யப்பட்டு அதன் உள்ளே சென்று ராஜா அறை என்ற ராஜாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த அறையில் தங்கினான். அதிலிருந்து மறுநாள் காலை வெளியே வந்தவனிடம் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. அடுத்த 5 மாதங்கள் வரை இது குறித்த மர்மம் நீடித்தது. இறுதியாக அவனின் மிக நெருங்கிய பெரிய அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அங்கே என்ன நடந்தது என்று சொன்னான். அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
அப்படி என்னதான் சொன்னான் ?
''நான் பிரமீடு உள்ளே சென்று ராஜா அறையில் போய் அமர்ந்திருந்தேன். அங்கு மிகவும் அமைதியாக இருந்தது. நான் வெளியே வரவேண்டும் என்று நினைத்தேனே தவிர, என்னால் வர முடியவில்லை. என் உடலும் மனமும் அதற்கு ஒத்துழைக்கவில்லை. அங்கிருந்த அமைதியை இது வரை நான் எங்கும் கண்டதில்லை. அமைதியின் ஆழம் என்பது அதுவாகத்தான் இருக்கும். இப்படியே நேரம் போய்க் கொண்டிருக்கையில் நடுநிசி வேளையில் ஓர் வெள்ளை ஆடை அணிந்த உருவம் ஒன்று என் முன்னே தோன்றியது.
எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமாகவும் இருந்தது. எனினும் பயப்படாமல் தைரியமாக இருந்தேன். அது என்னிடம் இங்கே இருக்காதே வெளியே போய்விடு என்று பல முறை சொன்னது. நான் ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தேன். பிறகு அது மறைந்துவிட்டது. சிறிது நேரம் கழித்து மற்றொரு உருவம் வந்தது. அது என்னைப் பார்த்து கோபமாகப் பேசியது. நீ நல்லவன் இல்லை. நாடு பிடிக்கும் ஆசையால் பல உயிர்களைக் கொன்றவன். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என்று பல உயிர்களைக் கொன்றவன். இன்றிலிருந்து சரியாக 265 வது நாளில் உன் உயிர் பிரிந்துவிடும். அதிலிருந்து நீ தப்பமுடியாது என்று கூறி மறைந்து விட்டது. நான் அப்போது தன்னை மறந்த நிலையில் இருந்தேன். உணர்வு வந்த போது விடிந்திருந்தது. அப்போதுதான் நான் வெளியே வந்தேன்.
அந்த உருவம் சொன்ன காலம் நெருங்கிவிட்டது என்று சோகத்துடன் சொன்னான். இந்த நெப்போலியன் பானாபட் என்கிற மாவீரன் தைரியசாலி மட்டுமல்ல சிறந்த ஆன்மிகவாதியும் கூட. இந்த விபரங்களை அவனது மெய்காப்பாளர் கர்னல் ஜோன் ஹெர்செல் என்பவர் விளக்கமாகக் குறிப்பு எழுதி வைத்துள்ளார். அவர் எழுதிய இந்த விபரங்களைத் தெரிந்து கொண்ட பிறகுதான் பிரமீடுகள் பற்றிய ஆராய்ச்சியே துவங்கியது எனலாம். 1803 க்குப் பிறகுதான் பிரமீடு பற்றிய ஆராய்ச்சி தொடங்கியது. அதற்கு முன்பு வரை இந்த பிரமீடுகள் அருகில் யாரும் போனதில்லை. ஏனென்றால் அது அரசர்கள் மற்றும் அவர்களது நெருங்கியவர்களின் பிரேதங்களை பாதுகாக்கும் இடமாகவே கருதப்பட்டிருந்தது. பயம் காரணமாகவே அதனருகில் யாரும் போகாமல் இருந்திருக்கிறார்கள். ஆனால் பிரமிடு என்பது வெறும் கல்லறை மட்டுமல்ல கட்டிடக் கலையின் அதிசயம். இந்த மாபெரும் பிரமீடுகளைக் கட்ட அதுவும் கிரேட் பிரமீடைக் கட்டும் அளவிற்கு வானியல் மற்றும் அறிவியல் அறிவு அந்த காலத்து அறிஞர்களுக்கு எவ்வாறு வாய்த்தது என்று வாயைப் பிளக்கிறார்கள் இன்றைய பிரமீடு ஆராய்ச்சியாளர்கள். எந்த விதமான தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தியிருப்பார்கள் ? அருகில் மலைகளே இல்லை. சுற்றிலும் 10 மைல் சுற்றளவுக்கு பாலைவனப் பகுதி. இந்த கற்களை எல்லாம் எங்கிருந்து, எப்படிக் கொண்டு வந்தார்கள் ? 6000 ஆண்டுகளுக்கு முன்னால் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 27 லட்சம் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லும் 2 டன்னிலிருந்து 50 டன் எடை வரை இருக்கின்றன. எகிப்துக்கு மேற்கே 500 மைல் தொலைவில் உள்ள அஸ்வான் மலையிலிருந்து சமுத்திரத்தின் வழியாக கட்டுமரங்களில் கொண்டுவந்து, அங்கிருந்து பாலைவனப்பகுதியில் 10 மைல் தூரம் கொண்டு வந்துதான் கட்டியிருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இது ஒரு கற்பனைக்கும் எட்டாத மாபெரும் சாதனையாகும். சாதனை மட்டுமல்ல மனித சக்திக்கு அப்பாற்பட்ட அமானுஷ்ய செயலாகும் என்று கருதப்படுகிறது. சிதிலமடைந்த சில பகுதியில் உள்ள கற்களைப் புரட்டிப் போட இயந்திரங்களே திணறுகின்றன என்கிற போது ஆச்சர்யம் ஏற்படத்தானே செய்யும்.
எத்தனையோ நிலநடுக்கங்கள், பூகம்பங்களை எல்லாம் கடந்த இந்த கிரேட் பிரமீடு மேல் உச்சியில் கொஞ்சம் சிதிலமடைந்துள்ளதே தவிர வேறு எந்த விதமான சிதிலமும் இல்லாமல் அப்படியே கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. இதன் உயரம் 480 அடி. அகலம் பக்கத்திற்கு 760 அடி. அதிகபட்சமாக அதில் உள்ள பெரிய கற்கள் ஒவ்வொன்றும் 25 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 4.5 அடி கடமும் கொண்டவைகளாக உள்ளன. இதைப் போல சிறிதும் பெரிதுமான கற்களைக் கொண்டுதான் கட்டியிருக்கிறார்கள். உள்பகுதியில் 160 அடி உயரத்தில் மன்னருக்கு 21 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட ஒரு அறை. அதற்கு நேரே கீழே ராணிக்கு 15 அடி அகலம் 6.5 அடி உயரம் கொண்ட அறை. இரண்டு அறைகளும் முழுவதும் நல்ல கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளன. அங்குதான் அவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ள கற்களாலான பெட்டிகளும் உள்ளன. வெளியே பாலைவனத்தில் எவ்வளவுதான் வெயில் தகித்தாலும், உள்ளே 68 டிகிரி குளுமையாவே இருக்கிறது. கட்டிடக்கலை ஆச்சரியங்களோடு பல மர்மங்களைச் சுமந்து நிற்கும் பிரமீடுகள் பற்றி இன்னும் வரும் பகுதிகளில் தொடர்ந்து காணலாம்.
தொடரும்.............................