தியானம் 2

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:22 | Best Blogger Tips
Photo: நமது சிந்தனை அதிகமாகும் அளவிற்கு, காலச் சக்கரத்தில் நாம் சுழல்கின்ற அளவிற்கு, நாம் இடையீடின்றி பாய்ந்து செல்லும் வாழ்க்கை நதியில் நாம் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். காலம் என்று எடுத்துக் கொண்டால் இரு வகையான காலங்கள் உள்ளன. ஒன்று அகக் காலம். மற்றொன்று புறக் காலம். அதாவது சூரியன், பூமி இவற்றின் சுழற்சியைக் கொண்டு நாம் கணக்கிடும் காலம் புறக் காலம். நமக்குள்ளே ஓடுகின்ற எண்ச அலைகளால் நிர்ணயிக்கப்படுகின்ற காலம் அகக் காலம். குழந்தைகளுக்கு இந்த இரண்டு காலங்களும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. வளரும்போது இரண்டும் இணைந்து விடுகின்றன. ஆனால் இந்த இணைப்பு ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அப்போது நாம் முற்றிலும் மாறுபட்ட கால நிலையில் உள்ள ஒர் உலகில் வாழ்கிறோம். விழித்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு காலங்களும் குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இணைந்து செயல்படுகின்றன. இந்த விகிதம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது. உதாரணமாகச் சொன்னால் ஒருவனுக்கு நேரம் பறக்கிறது. வேறொருவனுக்கோ நேரமே போகாமல் போர் அடித்து உயிரை வாங்குகிறது. 

இந்த காலத்தின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழ்வதாலும், அதன் சுழற்சியோடு இணைந்து சுழல்வதாலும் நம் நரம்பு மண்டலங்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. எப்படியாவது இந்தக் காலத்தின் பிடியில் இருந்து விடுபட மனிதன் விரும்புகிறான். எனவேதான் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என்று பல முயற்சிகளைச் செய்து தன்னை மறக்க முயற்சிக்கிறான். ஆனால் இந்த உத்தி எப்போதும் அவனுக்குக் கை கொடுப்பதில்லை. அவன் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் காலம் அவனை நிழல் போலப் பின் தொடர்ந்து செல்கிறது. 
அகக் காலத்தின் பிடியை மெல்ல மெல்லத் தளர்த்தி, மனதை படிப்படியாக உயர்த்தி, காலமற்ற நிலைக்கு எடுத்துச் சென்று, காலத்தின் கொடுமையிலிருந்து மனிதனை விடுவிக்கின்ற முயற்சியே தியானம்.  இதிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது காலத்தின் ஆதிக்கத்தில் செய்யப்படுவது மன ஒருமைப்பாடு. காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம்.நமது சிந்தனை அதிகமாகும் அளவிற்கு, காலச் சக்கரத்தில் நாம் சுழல்கின்ற அளவிற்கு, நாம் இடையீடின்றி பாய்ந்து செல்லும் வாழ்க்கை நதியில் நாம் மேலும் மேலும் சிக்கிக் கொள்கிறோம். காலம் என்று எடுத்துக் கொண்டால் இரு வகையான காலங்கள் உள்ளன. ஒன்று அகக் காலம். மற்றொன்று புறக் காலம். அதாவது சூரியன், பூமி இவற்றின் சுழற்சியைக் கொண்டு நாம் கணக்கிடும் காலம் புறக் காலம். நமக்குள்ளே ஓடுகின்ற எண்ச அலைகளால் நிர்ணயிக்கப்படுகின்ற காலம் அகக் காலம். குழந்தைகளுக்கு இந்த இரண்டு காலங்களும் தனித்தனியாகச் செயல்படுகின்றன. வளரும்போது இரண்டும் இணைந்து விடுகின்றன. ஆனால் இந்த இணைப்பு ஆழ்ந்த தூக்கத்திலும், கனவிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. அப்போது நாம் முற்றிலும் மாறுபட்ட கால நிலையில் உள்ள ஒர் உலகில் வாழ்கிறோம். விழித்துக் கொண்டிருக்கும் போது இந்த இரு காலங்களும் குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இணைந்து செயல்படுகின்றன. இந்த விகிதம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகின்றது. உதாரணமாகச் சொன்னால் ஒருவனுக்கு நேரம் பறக்கிறது. வேறொருவனுக்கோ நேரமே போகாமல் போர் அடித்து உயிரை வாங்குகிறது.

இந்த காலத்தின் ஆதிக்கத்தில் தொடர்ந்து வாழ்வதாலும், அதன் சுழற்சியோடு இணைந்து சுழல்வதாலும் நம் நரம்பு மண்டலங்கள் பெரிதும் பாதிப்படைகின்றன. எப்படியாவது இந்தக் காலத்தின் பிடியில் இருந்து விடுபட மனிதன் விரும்புகிறான். எனவேதான் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். திரைப்படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது என்று பல முயற்சிகளைச் செய்து தன்னை மறக்க முயற்சிக்கிறான். ஆனால் இந்த உத்தி எப்போதும் அவனுக்குக் கை கொடுப்பதில்லை. அவன் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் காலம் அவனை நிழல் போலப் பின் தொடர்ந்து செல்கிறது.
அகக் காலத்தின் பிடியை மெல்ல மெல்லத் தளர்த்தி, மனதை படிப்படியாக உயர்த்தி, காலமற்ற நிலைக்கு எடுத்துச் சென்று, காலத்தின் கொடுமையிலிருந்து மனிதனை விடுவிக்கின்ற முயற்சியே தியானம். இதிலிருந்து ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அதாவது காலத்தின் ஆதிக்கத்தில் செய்யப்படுவது மன ஒருமைப்பாடு. காலமற்ற நிலையில் செய்யப்படுவது தியானம்.
 
Via FB மௌனத்தின் குரல்