பிரபஞ்சம் பற்றி உன் அறிவை வளர்த்துக்கொள்ள அறியப்பட வேண்டியவைகள்:
1. அதன் பாகங்கள் எவை?
2. அதிலிருப்பது, மற்ற எதிலிருக்கிறது?
3. அதனோடு இணைந்திருப்பவைகள் எவை?
4. அதைப் பாதிப்பவைகள் எவை?
5. அதன் உருக்கள் எவை?
6. அதற்குப் பதிலாக இருக்கும் மாற்றுகள் எவை?
7. அதனால் ஏற்படும் பயன்கள் எவை?
இவைகளிலெதையும் அறிந்திருக்காதவன் பிரபஞ்சம் பற்றி அறிவேதுமில்லாதவன்.
[The Expected Knowledge ஞானசூத்திரம்]
பிரபஞ்சம் பற்றி ஒருவன் கூறவிருப்பவை: |
•அது பாகம் பாகமாகப் பகுபடக்கூடிய ஒன்றாகும். •அதிலிருப்பது ஏனையவைகளிலும் இருக்கிறது. •அது ஏனையவைகளோடு இணைந்து தொடர்பில் இருக்கிறது. •அது ஏனையவைகளால் பாதிப்படைகிறது. அதுவும் ஏனையவைகளைப் பாதிக்கிறது. •அது ஒரே உருவில் நிலையாக நில்லாமல் அதன் பிற உருக்களுக்குத் தொடரக்கூடியது. •அதற்குப் பதிலாக மாற்றுகள் இருக்கின்றன. •அது பயனற்ற ஒன்றல்ல, தேவையான ஒன்றாகும். |
மேற்கூறியவைகள்,
Thanks &* Copy arivuu.wordpress.com