அறிவு இருக்கிற‌தா உன‌க்கு?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:42 | Best Blogger Tips

விதிக‌ள்

விதி 2. எப்பொருளில் இருப்பதும் ஏனைய எதிலேனும் இருக்கும்.
விதி 3. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளோடு இணைந்து தொட‌ர்பில் இருக்கும்.
விதி 4. எப்பொருளும் ஏனைய‌வைக‌ளால் பாதி‌ப்ப‌டையும். அதுவும் ஏனைய‌வைகளைப் பாதிக்கும்.
விதி 5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொடரும்.
விதி 6. எப்பொருளுக்கும் ப‌திலாக‌ மாற்றுகள் இருக்கும்.
விதி 7. எப்பொருளுக்கும் பயன் இருக்கும்.
  1. எப்பொருளும் பாகம் பாகமாகப் பகுபடக்கூடியது’ என்பது விதி. பகுக்கமுடியாத பொருள் என்று எதுவும் இல்லை. பகுக்கமுடியாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  2. எப்பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்’ என்பது விதி. இணையற்ற பொருள் என்று எதுவும் இல்லை. இப் பிரபஞ்சத்திலிருக்கும் கூறுகளைக் கொண்டே பொருட்கள் படைக்கப்படுவதால், ஒரு பொருளில் இருப்பது மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும். இணையற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  3. எப்பொருளும் மற்ற பொருட்களுடன் தொடர்பிலிருக்கும்’ என்பது விதி. எதனோடும் தொடர்பில்லாத பொருள் என்று எதுவும் இல்லை. உன் மனதால் தொடர்புகொள்ள முடியாத பொருளை உன்னால் எண்ணமுடியாது. எதனோடும் தொடர்பு இல்லாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  4. எப்பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி. எதனாலும் பாதிக்கப்படாத பொருள் என்று எதுவும் இல்லை. எதனாலும் பாதிக்கப்படாத ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  5. எப்பொருளும் ஒரே உருவில் நிலையாக‌ நில்லாமல் அத‌ன் பிற‌ உருக்க‌ளுக்குத் தொட‌ர‌க்கூடிய‌து’ என்பது விதி. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருள் என்று எதுவும் இல்லை. ஒரே ஒரு உருவில் மட்டுமே இருக்கும் பொருளை மனிதனால் படைக்க முடியாது. அதாவது, எப்பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்.  உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் உன்னால் அசைய முடியாது. நீ அசையும்போது, நீ ஒரு உருவில் இருந்து மற்றொரு உருவிற்கு மாறுகிறாய். உனக்கு ஒரே ஒரு உருதான் எனும் பட்சத்தில் மாற்றம் என்பதை ஒருபோதும் உன்னில் காணமுடியாது.
  6. எப்பொருளுக்கும் மாற்றுப்பொருட்கள் இருக்கும்’ என்பது விதி. மாற்றற்ற பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு பொருள் மறையும்போது மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும். மாற்றற்ற ஒரு பொருளை மனிதனால் படைக்க முடியாது.
  7. எப்பொருளுக்கும் பயன் உண்டு’ என்பது விதி. பயனற்ற பொருள் என்று எதுவும் இல்லை. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
‘விதியை ம‌தியால் வெல்ல‌ முடியும்’ என‌க்கூவும் அறிவிலிக‌ளே, இவ்விதிக‌ளை உங்க‌ளால் அழிக்க முடியுமா? அறிவிருந்தால் அழித்துக் காட்டுங்க‌ள்!

4 + 2 = 6
நாலுட‌ன் இர‌ண்டைக் கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ஆறு.
6 + 2 = 8.
ஆறுட‌ன் இர‌ண்டைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து எட்டு.
6 + 6 = 12.
ஆறுட‌ன் ஆறைக்கூட்ட‌ விதிப்ப‌டி வ‌ருவ‌து ப‌ன்னிரெண்டு.
எதை எப்படிச் செய்தால் எது வரும், எது வராது என்பதை நிர்ணயிப்பது விதி. விதியைக் காண்பதுதான் மதி (அறிவு). எது வருகிறதோ அது கதி.



அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
ஆவது = வருவது. அதாவது, விதியை அறியாதவன் அறிவில்லாதன். விதியை அறியாதவனால் வருவதைச் சரியாகக் கணிக்க முடியாது. அறிவியலின் அனைத்துப் பிரிவுகளும் விதியைத்தான் முன்னிறுத்துகின்றன. எது வரும்? எது வராது? What would be the outcome? What will happen? What will not happen? [விதியை வகுத்தது யார்? விதியை வகுத்தவன் கடவுள் என்கின்றன மதக் கோட்பாடுகள்.] 4 + 2 = 6
நாலுடன் இரண்டைக் கூட்டினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது கணிதம்.
What would be the outcome if four is added to two?
H2O + CO2 → H2CO3
நீருடன் கார்பன் டைஆக்ஸைடு கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது வேதியியல்.
What would be the outcome if water reacts carbon dioxide?
ஆண் + பெண் → ஆணா/பெண்ணா?
ஆணுடன் பெண் கூடினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது உயிரியல்.
உனக்கு நாளை விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது ஜோதிடம்.
இதே ரீதியில்,
உன்னை நோய்க்கிருமிகள் தாக்கினால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது pathology.
எருமைச்சாணியையும் கழுதை மூத்திரத்தையும் கலந்து வைத்தால் விதிப்படி வருவது என்னவென்பதை அறிவது biotechnology. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

பொருளுக்குப் பொருள் விதி மாறுமா?

விதிப்ப‌டி பொருளா? பொருட்ப‌டி விதியா? எதுவும் விதிப்ப‌டிதான் என்கிறது அறிவிய‌ல். விதிப்ப‌டிதான் விமான‌ங்க‌ள் உருவாக்கப்ப‌டுகின்ற‌ன‌. விதிப்ப‌டிதான் ஏவுக‌ணைக‌ளும், ராக்கெட்டுக‌ளும் உருவாக்க‌ப்ப‌டுகின்ற‌ன. விதிப்ப‌டிதான் ர‌யில் என்ஜினும், உன் இத‌ய‌மும் இய‌ங்குகிற‌து. நீ உண்ணுவ‌து செரிப்ப‌தும் விதிப்ப‌டிதான். விதிப்படிதான் நீயும், நீ அறிவதும். பூமி சூரிய‌னைச் சுற்றுவ‌தும் விதிப்ப‌டிதான். கணினிகள் இயங்குவதும் விதிப்படிதான். எதுவும் விதிப்ப‌டிதான் இய‌ங்குகிற‌து. விதிப்ப‌டிதான் எதுவும் தோன்றி ம‌றைகிற‌து. விதிப்ப‌டிதான் உன் பிற‌ப்பும், இற‌ப்பும். விதிப்ப‌டிதான் திட்ட‌ங்க‌ள் உருவாக்க‌ப்படுகின்ற‌ன‌. விதிய‌றியாத‌வ‌ன் திட்ட‌மிட்டு ஏவுக‌ணைக‌ளையும், விமானங்க‌ளையும், ராக்கெட்டுக‌ளையும், ர‌யில் என்ஜின்க‌ளையும், க‌ணிணிக‌ளையும் உருவாக்குவ‌தில்லை. பொருளுக்குப் பொருள் விதி மாறாது. நேரத்திற்கு நேரம் விதி மாறக்கூடிதல்ல. இடத்திற்கு இடம் விதி மாறக்கூடிதல்ல. விதியில் புதிய விதி என்றும், பழைய விதி என்ற பாகுபாடில்லை. விதியில் புதுமையைப் புகுத்த முடியாது. புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும். விதிக்குப் பொருந்தாது. தோன்றி மறைவது பொருள். விதி என்பது அப்படி தோன்றி மறையும் பொருளல்ல. விதியில், உன் விதி என் விதி என்ற பாகுபாடு கிடையாது. விதிப்படிதான் நீயும் நானும் தோன்றி மறைகிறோம். விதிப்படி தான் பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன என்கிறது இயற்பியல்.
பொருளுக்குப் பொருள் நியூட்டன் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் கூலூம் விதி மாறக்கூடியதல்ல. பொருளுக்குப் பொருள் வெப்பவியலின் விதிகள் மாறக்கூடியதல்ல. விதி பற்றி அறியாத மூதேவிகள் தான் தங்களால் அனைத்தையும் மாற்ற முடியும் என்று கூவுகின்ற‌ன‌. பல மேடைகளில் நமது மேதகு முட்டாள் துணைவேந்தர்கள் கூறும் அறிவுரைகளில் ஒன்று: நம்மால் எதையும் மாற்ற முடியும். அரசியல்வாதிகள் தான் ஏதோ அறியாமல் உளறுகிறார்கள் என்றால், இந்த மூதேவிகளுக்கு அறிவிருக்கிறதா என்ற மிகப்பெரிய சந்தேகம் ஏற்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் அறிவு இந்த நிலை என்றால், இந்த முட்டாள்களுக்கு கீழுள்ள ஆசிரியர்கள், பேராசிரியர்களின் மற்றும் அவர்களிடம் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறன் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவே தேவையில்லை. இத்தகைய முட்டாள் மூதேவிகள் எப்படிப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமனம் பெறுகிறார்கள் என்பது உலகறிந்த விஷயம்.
1. ‘எந்த ஒரு பொருளும் பகுதிகளைக் கொண்டது’ என்பது விதி.
பகுதிகளாகப் பிரிக்க முடியாத எந்த ஒரு பொருளையும் மனிதன் படைக்க முடியாது. பகுதிகளாகப் பிரிக்க முடியாத பொருள் எது? எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் எந்த செயலையும் ஒருவனால் செய்ய முடியாது. எந்தப் பொருளையும் பகுதிகளாகப் பிரிக்க முடியாத பட்சத்தில் உண்ண முடியாது, சுவாசிக்க முடியாது. பகுதிகளாகப் பிரியக்கூடிய பொருளைத்தான் உண்ண முடியும். நீ சுவாசிக்கும் காற்றும் அதன் பகுதிகளாகப் பிரியவில்லையெனில் நீ உயிர் வாழ முடியாது.
2. ‘எந்த ஒரு பொருளில் இருப்பதும் மற்ற ஏதாவது ஒரு பொருளிலும் இருக்கும்’ என்பது விதி.
இணையற்ற பொருளை எவனாலும் படைக்க முடியாது. படைக்கப்படும் பொருட்களின் கூறுகள் இவ்வுலகத்திலிருந்தே எடுக்கப்படுவதால், எந்த ஒரு பொருளில் உள்ளதும் மற்ற ஏதாவது ஒரு பொருளில் இருக்கும்.
3. ‘எந்த ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுடன் தொடர்பு இருக்கும்’ என்பது விதி.
உன் மனதால் தொடர்பு கொள்ள முடியாத எந்த ஒரு பொருளையும் உன்னால் எண்ண முடியாது.
4. ‘எந்த ஒரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிக்கப்படும்’ என்பது விதி.
எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அதே ரீதியில், எவ்வொரு பொருளும் மற்ற பொருட்களால் பாதிப்பிற்கு உள்ளாகும்.
5. ‘எந்த ஒரு பொருளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட உருக்கள் இருக்கும்’ என்பது விதி.
‘ஒரே ஒரு உருவத்தில் மட்டுமே அது இருக்கும்’ என இருக்கும் பொருளுக்கு உருமாற்றம் என்பது கிடையாது. பிறப்பு முதல் இறப்பு வரை உனக்கு பல உருக்கள். குழந்தையாக, வாலிபனாக, முதியவனாக… உனக்கு ஒரே ஒரு உருவம்தான் எனில், நீ என்றும் குழந்தையாகவே இருந்திருப்பாய். நீ என்றும் வாலிபனாக ஆகவே முடியாது.
6. ‘எந்த ஒரு பொருளுக்கும் மாற்றுப் பொருள் இருக்கும்’ என்பது விதி.
தோன்றிய எதுவும் மறைந்தே ஆக வேண்டும். தோன்றிய எதுவும் மறையவில்லையெனில், மாற்றம் என்ற ஒன்று இருக்காது. ஒரு பொருள் மறையும்போது அப்பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருள் தோன்றியே ஆக வேண்டும்.
7. ‘எந்த ஒரு பொருளுக்கும் பயன் இருக்கும்’ என்பது விதி.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.          (குறள் எண் : 423)
மெய்ப்பொருள் = அழியாப்பொருள் = விதி. விதியைக் காண்பதுதான் அறிவு.
அறிவுடையார் ஆவது அறிவார். [ஆவது = விதிப்படி வருவது] விதியைக் காணும் முறைதான் அறிவியல். The laws of nature let you to expand your knowledge about anything. You cannot expand your knowledge if the laws of nature do not let you to expand it.
• Divisibility lets you know the parts of that which is under study. Anything which has no divisibility will never let you to know what it has in it. What is that which has nothing in it? What will you do if nothing has divisibility? What would your knowledge be if nothing has divisibility?
• Comparability lets you compare and find the abundance of that which is under study. Do you have that which I have? How many of them have that? How many times it is? How frequent it is? How often it is? No quantification can be done without a unit of comparison. The multiplicity, numerosity, relative distribution or the relative abundance of a thing cannot be found in the absence of comparability.
• Connectivity lets you know those which are connected to that which is under study. Anything which has no connections has no bounds.
• Sensitivity lets you know those which can affect that which is under study. Sensitivity allows you to know the cause of an effect and the effect of a cause. No cause can have an effect on that which has no sensitivity.
• Transformability lets you know the forms of that which is under study. You can never transform that which can exist only in one form.
• Substitutability lets you know ‘what can’ instead of ‘that which is under study’.
• Satisfiability lets you to know the conditions that can be satisfied by that which is under study.
The laws of nature which constitute and let you expand your knowledge are discoverable in anything and everything.
அழிவ‌து பொருள். அழியாத‌து விதி. அழியா விதியை வ‌குத்த‌வ‌ன் க‌ட‌வுள். There is a difference between a thing and its properties. The failure to distinguish the difference between a thing and its properties is the prime cause of many human confusions.

Thanks & Copy  from arivuu.wordpress.com