புராணக்
கதைகளுக்குப் பின்னால் சூக்குமமான யோகத் தத்துவம் அடங்கியிருப்பது
பெரும்பாலனவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது. ஏன் அவ்வாறு மறை
பொருளாகச் சொல்ல வேண்டும் என்றால் உதாரணம் காட்ட இன்றைய நவீன காலத்தில்
உள்ளது போல காட்சிப் பொருள்கள் இல்லாததாலும்,
விஷயத்தை கிரகித்துக் கொள்கிற அளவுக்கான கல்வி அறிவு, மதி நுட்பம் குறைவு
படுவதாலும், எல்லா தரப்பினரும் பயனடையும் பொருட்டும் கதைகளாக்கி அதைச்
சொல்லி பரப்பி, கைகொள்கிறவர்கள் உடலாலும், மனதாலும் தேறி வரும் போது
சூக்குமமான தத்துவங்களை குருவானவர் விளக்கி அருளுவார். தற்போது குருகுலம்
என்பது மறைந்து போய்விட்ட காரணத்தினால் கதைகள் தெரிந்த எல்லோருக்கும்
சூக்குமம் தெரியும் என்று சொல்ல முடியாது. கதைகளின் பெருமையைப் பேசி,
நுட்பமான விஷயங்களை அறியாமலேயே போய்விடுகிறோம்.
திருமூலர் இந்தக் குறையை நிவர்த்தி செய்கிறார்.
மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்து அங்கியோகமாய்
ஞாலக்கடவூர் நலமாய் இருந்ததே. - 345.
மூலாதாரத்தில் எழும் குண்டலினியாம் அக்கினியை காற்றின் உதவியால் சுழுமுனைநாடியில் செலுத்தி
சகஸ்ராரம் வரை கொண்டு சொல்பவரைக் காலனாகிய எமன் ஒன்றும் செய்ய முடியாது. சிவனோடு கலந்து யோகியை எமனால் ஒன்றும் செய்ய முடியாது. என்றும் சிரஞ்சீவியாக வாழ்வார். காலால் உதைப்பது என்பது, காற்றின் உதவியால் வெல்வதைக் குறிக்கும்.
இருந்த மனத்தை இசைய இருத்தி
பொருத்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயல் அழித்து அங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்தே. - 346.
யோகத்தின் பால் பட்டவர்கள் மீது காமன் கணைகளைச் செலுத்த முடியாது. அவர்கள் காம உணர்வு தவநெருப்பால் எரிந்து விடும். மனத்தை அடக்குபவர்கள் அசையாமல் இருந்து பிராணவாயு சக்தியாகிய குண்டலினியை சுழுமுனையில் ஏற்றிவிட்டால், காம உணர்வு தலை தூக்காது அழிந்து போகும் என்பதே கருத்து. புருவ மத்தியில் திளைத்திருக்கும் குண்டலினியாகிய நெருப்பு காம உணர்வை எரித்துவிடும். இதுவே நெற்றிக் கண்ணால் காமனை எரிப்பது.
கொலையில் பிழைத்த பிரசாபதியை
தலையில் தடிந்திட்டு தான் அங்கு இட்டு
நிலை உலகுக்கு இவன்வேண்டும் என்று எண்ணித்
தலையை அறிந்திட்டுச் சந்தி செய்தானே. - 340.
மூலாதாரம் நான்கு இதழ்கள் கொண்ட தாமரையாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூலாதாரத்துக்கான தெய்வீக ஆற்றல் வரும் வழிகளைத் தலையாகக் கொண்டவன் பிரம்மன். ஒருவருக்கு பிரம்ம ஞானம் வரவேண்டும் என்றால் சூக்குமமாக உள்ள ஐந்தாவது இதழான வழியைத் திறக்க வேண்டும். அதாவது ஐந்து தலை உடைய பிரம்மனின் மேல் நோக்கிய தலையைக் கொய்தது புராணக் கதை. இந்த ஐந்தாவது தலையைக் கொய்ததால் பிரம்மன் நான்முகனானான். இந்த ஐந்தாவது தலை பைரவருக்கு ஆட்சியமைப்புடையது. ஆகவே பைரவராக பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார் என்பது ஐதீகம். அதாவது சந்தி செய்தான் என்றால் ஐந்தாம் தலையைக் கொய்து மூலாதாரத்து குண்டலினி மேலெழும்ப வழி செய்தான் என்று பொருள். பைரவர் என்றால் நிர்வாணமுள்ளவர், அதாவது எந்தவித பற்றும் துளியும் இல்லாதவர், குண்டலினியாகிய பாம்பை கையில் கொண்டவர், அதாவது குண்டலினியை மைலேற்ற வல்லவர். தலையில் எரியும் அக்கினி யோகத்தை குறிப்பது.
அதாவது பற்றுகளை அறுத்து, தவக் கனலை மேம்படுத்தி, வாசியின் துணை கொண்டு குண்டலினியை மேலேற்ற பிரம்மாவின் ஐந்தாவது தலையாகிய மூலாதாரத்து பிரம்ம கிராந்தியை கொய்து(திறந்து அல்லது கடந்து) விட்டால் சிவநிலை அடைய முடியும்.