
செடிகளின் அருகே அதை வளர்ப்பவரோ, அல்லது நல்ல அதிர்வுகள் கொணட மனிதர்களோ சென்றால் அவை மகிழ்ந்து தலையசைத்து வரவேற்கின்றன என்றும், அதோடு மட்டுமல்ல தன் மகிழ்ச்சியின் உணர்வுகளை அருகிலுள்ள செடிகளுக்கும் தெரிவிக்கின்றன என்றும், மலர்களை பறிக்கும் எண்ணத்தோடோ, செடியைப் பிடுங்கும் எண்ணத்தோடோ, மரங்களை வெட்டும் எண்ணத்தோடோ யாராவது சென்றால் அதை உணர்ந்து அந்தத் தாவரங்கள் பயந்து நடுங்கி தன் துக்கத்தை மற்ற தாவரங்களுக்கும் வெளிப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு இதையெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள்.
தாவரங்கள் மட்டுமல்ல விலங்குகளுமே இதே உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ஆட்டு மந்தைக்குள் ஆட்டை வளர்ப்பவர்கள் செல்லும் போது மகிழ்கின்றன என்றும், தங்களை வாங்கிச் செல்லும் வியாபாரி வரும் போது வித்தியாசமாக சத்தமிட்டு தங்கள் மனவருத்தத்தை ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்து வருந்துகின்றன என்றும், வெட்டுபவர்கள் வந்தால் அவர்கள் கையில் ஆயுதம் எதுவும் இல்லையென்றாலும் உணர்வுகளால் கண்டுபிடித்து பயந்து நடுங்கி தப்பிச் செல்ல முயற்சிக்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாட்டுத் தொழுவங்களிலும் இதே ஆராய்ச்சி நடத்தப்பட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.
தொட்டால் சிணுங்கி செடியை யாராவது தொட்டால் அது படக்கென்று தன் இலைகளைச் சுருக்கிக் கொண்டு தன் பயத்தை வெளிப்படுத்தும். இது நாம் அனைவருமே அறிந்த விஷயம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா ? இதை ஒருவர் தனியாகத் தொட்டியில் வைத்து அன்போடு வளர்த்து வரும் போது தினமும் அதைத் தடவிக் கொடுத்தால், அச்செடியானது சில நாட்களில் சுருங்குவதை நிறுத்திவிடும். ஆனால் வேறு யாராவது தொட்டால் படக்கென்று சுருங்கி விடுகிறது. இதையும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறார்கள்.
மிருகங்களும், தாவரங்களுமே மனிதனுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு தங்கள் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துகின்றன. மனிதனாகிய நாமோ சக மனிதர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதில்லை, மற்ற உயிரினங்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்வதில்லை. இத்தனைக்கும் நாம் அவற்றை விட அறிவுகளைக் கூடுதலாகப் பெற்றவர்கள். இது எல்லாவற்றையும் விட எனக்குத் தோன்றுவது என்னவென்றால் பிறரையோ, தாவரங்களையோ, விலங்குகளையோ துன்பப்படுத்தும் உணர்வுகளை விட்டுவிட்டு அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும். இந்த பிரபஞ்சமெங்கும் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் பொங்கிப் பெருகி வழியுமே.
Via FB மௌனத்தின்
குரல்