தியானயோகத்தில்
மூன்று முக்கியமான விஷயங்கள் உண்டு. எல்லாமே முக்கியம்தான் என்றாலும், இவை
அதிமுக்கியம் வாய்ந்தவை எனக் கொள்ளலாம். ஒன்று சித்தத்தின் ஏகாக்ரதை,
இரண்டு அதற்கு உதவுமாறு நம்ம் வாழ்வை ஒரு வரம்புக்குள் அமைத்துக்
கொள்ளுதல், மூன்று சமநிலை அதாவது
சமநோக்கு. சித்தத்தின் ஏகாக்ரதை என்றால் சித்தத்தின் சஞ்சலத்தைக்
கட்டுப்பட்டுத்தி அதை ஒரு நிலைப்படுத்த்துவது. அதாவது ஒருமுனைப் பாங்கு.
இந்த மூன்று விஷயங்களுக்கும் உதவும் பிற விஷயம் வைராக்யம்.
சித்தத்தின் ஏகாக்ரதையை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு விஷயத்தில் ஈடுபடவும், உலகநடவடிக்கை அனைத்திற்குமே ஏகாக்ரதை தேவைப்படுகிறது. எந்த விஷயமானாலும் அதனால் வரும் புகழோ, அவமானமோ, வெற்றியோ, தோல்வியோ எதுவானாலும் ஏகாக்ரதையைப் பொறுத்தே அமைகிறது. ஆனால் அதைப் பெறுவது எவ்வாறு ? அது பேசிக்கொள்வது போன்று அவ்வளவு எளிதல்ல. வெளியே நம் புற உலகில் அப்பாலுக்கும் அப்பால் பரவி நிற்கும் நம் சம்சாரத்தை நிறுத்தாதவரை அது கைகூடாது. இந்த பயங்கரமான சம்சாரம் நம்மை எல்லா திசைகளில் இருந்தும் நம்மை தகித்துக் கொண்ட்டே இருக்கிறது. ஏனென்றால் இறைவனோடு பிரார்த்தனை செய்யக்கூட நமக்கு புறப்பயன்களே காரணமாய் அமைகின்றன. கடவுளிடம் தன்மயமாகி ஒரு கணநேரமாவது உலகாய விஷயங்களை மறந்திருப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதில்லை. பிரார்த்தனை கூட வெளி வேசமாகவே இருந்து வருகிறது. இது இவ்வாறு இருக்கையில், கண்ணை மூடி ஆசனத்தில் அமர்ந்தால் மனம் உள்முகமாகப் போவதே இல்லை. அது எங்கோ பரவெளியில் எதையெதையோ எண்ணியபடி பறந்து கொண்டிருக்கிறது. ஒரு புறம் சூன்ய அக்ரதை( ஒரு முன்னைப் பாங்கு இல்லாமை), மறுபுறம் அநேக அக்ரதை(பல விஷயங்களைப் பற்றி சிந்தித்தல்) ஒரு முனைப் பாங்கு என்கிற ஏகாக்ரதையைக் காணவே முடிவதில்லை.
வேறு வழிதான் என்ன ? எல்லா ஓட்டமும் பாடும், அல்லலும் அவதியும், எதற்காக ? நம் இறுதி காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே ? ஆயுள் முழுவதும் படும் கஷ்டங்கள் எதற்காக ? அந்தக் கடைசி கணம், மரணத்தின் நேரம் புனிதமாகவும் சுகமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகத்தானே ? பகலின் முடிவில் மாலை வருகிறது. இன்று பகல் பொழுதில் எல்லா காரியங்களையும் புனித பாவனையில் செய்திருந்தால், இரவில் பிரார்த்தனை இனிமையாக இருக்கும். அப்போது மனம் எளிதில் ஏகாக்ரதை அடையும். ஆக ஏகாக்ரதைக்கு இத்தகைய வாழ்க்கைத் தூய்மை அவசியமாகும். அதனால்தான் அதற்குத் தகுந்தாற் போல வரம்புக்குள் வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது ஏற்பட்டது. இரண்டு மனிதர்கள் இருக்கிறார்கள். இருவரும் அச்சு அசலாக ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்கிறார். ஆனால் ஒருவன் உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாக இருக்கிறான். மற்றவனோ மிருகத்தை விட கேவலமான நடத்தை கொண்டவனாக இருக்கிறான். ஏன் இப்படி ? இந்த வேற்றுமைக்கு காரணமென்ன ? எல்ல்லோரும் இறைவனின் பிள்ளைகள்தான். ஆனால் அவன் அரசன், இவன் ஆண்டி. அவன் வீரன் இவன் கோழை. இது ஏன் இவ்வாறு ? நம் முன்னோர்கள் தீவிரமாகச் சிந்தித்தார்கள். சில கயவர்கள் இது விதி என்றும், படைப்பின் இரகசியமென்றும் ஏதேதோ சொல்லி மேலும் தவறான வழிக்கே ஆளாக்கி விடுவார்கள். ஆனால் நம் முன்னோர்களில் பல மகான்கள் இருந்தார்கள்,அவர்கள் இதைக் குறித்து தீவிரமாக ஆராய்ந்து தெளிவு பெற்றார்கள். ஒருவன் உயர்வானவனாகவும் மற்றவன் தாழ்ந்த நிலையிலும் இருக்கக் காரணம் சித்தமே ஆகும். அது எப்போதும் புறத்தே ஓடிக் கொண்டே இருப்பதுவும், பிறர் காரியங்களை கூர்ந்து பார்த்துக் கொண்டே அதில் குற்றங்களை கண்டு கொண்டே இருந்துவிட்டு, தன் சித்தத்தின் பலத்தை இழந்து விடுவதே காரணமாகும். பிறர் காரியங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பவன் தன் சித்தத்தை ஏகாக்ரதையாக வைக்க முடியாது. இதற்கு சமநோக்கும் அவசியமாகும். இதுவே நன்னோக்கு. நல்ல நன்மை பயக்கும் நோக்கத்தை பெறாதவரை சித்தம் ஏகாக்ரதை அடையாது.
சிறு குழந்தையின் கண்களை கூர்ந்து நோக்குங்கள். அக்குழந்தை இமையைக் கொட்டாமல் கொட்டக் கொட்ட்ட விழித்துக் கொண்டிருக்கும். ஆனால் நாமோ பத்து தடவை கண்களை இமைத்து விடுவோம். காலணம்ம், குழந்தைகளின் சித்தமானது உடனேயே ஏகாக்ரதை அடைந்துவிடும். ஏனென்றால் குழந்தைகளுக்கு பெரிதான உலக விவகாரங்களோ, கவலைகளோ, சம்சாரங்களோ எதுவும் கிடையாது. அவைகள் எதையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. எனவேதான் அவர்கள் சித்தம் எளிதில் ஏகாக்ரதை அடைந்து விடுகிறது. இன்று மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், மூன்று, நான்கு வயதுக்குள் குழந்தைகள் பெறும் போதனையே உண்மையான போதனை என்றும்,அதற்குப் பிறகு நீங்கள் எவ்வளவு தரமான போதனைகளைத் தந்தாலும் தொடக்கத்தில் கிடைத்த போதனைகளுக்கு ஈடாக அவை நிற்பதில்லை. என்கிறார்கள். ஆரம்பத்தில் ஏற்பட்ட போதனைகள் இரும்புப் பூச்சு, பிறகு வருகின்ற போதனைகளெல்லாம் வெளியே வெறும் சாயப் பூச்சு. சுண்ணாம்புப் பூச்சு. சோப்பு போடுவதால் அழுக்கு வேண்டுமானால் போகும், தோலின் நிறம் எப்படி சிகப்பாக மாறும் ? அது போலவே ஆதி ஸம்ஸ்காரங்களை நீக்குதல் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. இந்த ஸம்ஸ்காரங்களே சித்தத்தின் ஏகாக்ரதைக்கு பெருந்தடையாக இருக்கின்றன. இந்த ஒரு வரியைச் சொல்லவே இவ்வளவு நீளப் பதிவு.
அந்த ஸம்ஸ்காரங்களை அடக்க்கியோ, நீக்கியோவிட்டால் சித்தம் ஒரு முனைப்ப் பாங்கு நிலையை அடையும். இந்த ஆதி ஸம்ஸ்காரம் இவ்வளவு உறுதியாக இருப்பது ஏன் ? ஏனென்றால் சிறு குழந்தைகளின் சித்தத்தின் ஏகாக்ரதை என்பது இயல்பாக இருக்கிறது. ஏகாக்ரதை இருப்பதால் அப்போது ஏற்படும் ஸம்ஸ்காரங்கள் அழிவதேயில்லை. இந்த ஏகாக்ரதைக்கு அவ்வளவு வலிமை உண்டு. இந்த ஏகாக்ரதை அடைந்தவனால் ஆகாதது எதுவுமில்லை. நம் வாழ்க்கை முழுமையும் இன்று செயற்கை மயமாகிவிட்டது. நம் பிள்ளைகள் மனமோ டீவி, கேம்ஸ் என்று பல விஷயங்களால் பாழாகிக் கிடக்கிறது. வாழ்வின் உண்மையான ரஸம், இனிமை இல்லை. வறண்ட மனங்களே எங்கும் காணப்படுகின்றன. எல்லாமே மேல் பூச்சுதான். சாயம்தான். வேசம்தான். ஏதோ கோணல்மாணலாக மனம் போன போக்கில் நடந்து வருகிறோம். டார்வினல்ல, நாம் தான் நம் செயல்களின் மூலம் மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தான் என்று நிருபித்து வருகிறோம்.
சிறு குழந்தைகள் எதையும் நம்பும் சுபாவம் கொண்டது. தாயோ, தகப்பனோ சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. சொல்லப்படும் கதைகளெல்லாம் பொய் என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. அப்படியே தகப்பனையும், தாயையும் நம்பிவிடுகின்றன. காக்கை பேசியது, குருவி பேசியது என்பதையெல்லாம் உண்மை என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த முழு நம்பிக்கையான போக்குதான் அவர்களின் சித்தத்தின் ஏகாக்ரதைக்குக் காரணம். இதில் மிகப் பெரிய விஷயத்தை நீங்கள் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அது என்னவென்றால் ஏகாக்ரதைக்கு குழந்தைகள் நல்ல உதாரணம். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல போதனையாளரா ? நல் அஸ்திவாரத்தைத் தருபவரா ? அதை நீங்கள் உங்கள் மனதோடு கேட்டு, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். ஏனென்றால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல, இந்த தேசத்தின் எதிர்காலமும் உங்கள் நற்போதனைகளிலும், வழிகாட்டுதலிலும்தான் இருக்கிறது.

Via FB மௌனத்தின்
குரல்