தியானம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:53 | Best Blogger Tips
Photo: தியானம் பற்றி பல செய்திகளைத் தொகுத்து வழங்கினாலும், சந்தேகம் தொடர்கிறது. தியானம் என்றால் என்ன ? நான் நீண்ட நாட்கள் தியானம் செய்கிறேன் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதே ? அவர் ஒரு மாதிரியாகச் சொல்கிறார். இவர் வேறு மாதிரியாகச் சொல்கிறார். யார் சொல்வது சரி ? என்னால் நீண்ட நேரம் உட்கார முடியவில்லையே ? என்று பல விதமான கேள்விகள், கேட்கப்படுகின்றன. கேலியும், கிண்டல்களும், நக்கலும், நையாண்டியும் செய்பவர்களும் உண்டு. ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நினைவுகளைக் கட்டுப்படுத்தி, ஒரு நிலையில் நிறுத்துவதற்கான வழி தியானம். ஊரெல்லாம் சுற்றும் தேரை நிலையில் நிறுத்துவது. உலகெங்கிலும் தியானம் மிகப் பிரபலமாகி விட்டது. பக்குவம் பெற்ற சிலர் செய்து வந்த ஆன்மிகப் பயிற்சி இப்போது பலரும் பின்பற்றக்கூடிய பயிற்சியாக இருக்கிறது. பதஞ்சலி மகான் இதை ஏழாவது படியாகத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது நீங்கள் உள்ளே சென்று அமர்ந்த உடன் உங்களுக்கு தீட்சை வழங்கப்பட்டு நீங்கள் தியானம் செய்யும் தகுதி அடைந்து விட்டீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தியானம் செய்யலாம் என்று செல்வார்கள். நீங்களும் கண்களை மூடி அமர்ந்திருப்பீர்கள். என்மனைவியும் தியானம் செய்கிறேன் என்று சுவரோரமாக அமர்ந்து, சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கி விழுந்து கொண்டிருப்பார். என்ன இப்படி தூங்கி விழுகிறாய் ? என்று கேட்டால், ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதைப் பயிற்சி தருபவரிடம் சொல்லி, சிரித்துக் கொண்ட போது அவர் சொன்னார், இதுவும் ஒரு வகையான தியானம்தான் என்று. விஞ்ஞான யுகத்திற்கு தகுந்தவாறு தியானம் கூட நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நவீனமயமான தியானங்கள், தியானமல்ல, மன ஒருமைப்பாட்டுப் பயிற்சிகள். உலகில் பல விதமான தியானங்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு வகையாகக் கூறலாம். உலகியல் தியானம், ஆன்மிக தியானம். உலகியல் தியானம் என்றால், தேக ஆரோக்யம், மன நலம் மற்றும் மன ஒருமைப் பாட்டிற்கானப் பயிற்சி ஆகும். இந்த தியானங்களால் ஆரோக்யம் மேம்படுகிறது, இரத்த அழுத்தம் சீராகிறது, மன அழுத்தம் ஏற்படாத அளவு மனவலிமை  கிடைக்கிறது என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தற்போது நிரூபித்திருக்கிறார்கள். நகர வாழ்க்கை அது நரக வாழ்க்கை என்று அலுத்துக் கொள்பவர்களுகெல்லாம் இந்த தியான முறைகள் மிகவும் பயனுள்ளவை. மேலை நாடுகளில் இந்த தியான முறைகள் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றன. ஆனால் ஆன்மிக தியானம் என்பதன் கோணமே வேறு. ஆன்மிக ஒளி அல்லது ஆன்மிக விழிப்புணர்வு பெறுவதே அதன் நோக்கம். இதற்கு உயர்ந்த மனப்பக்குவமும், தீவிரமான மன ஒருமைப்பாடும் அவசியமாகும். ஏதாவது ஒரு பொருளில் மனதை குவிப்பது மன ஒருமைப்பாடு. அது புறப் பொருளிலோ அல்லது புறப் பொருளைக் குறித்த மனக் காட்சியிலோ மனதைக் குவிப்பது. உண்மையில் தியானம் என்பது வேறுபட்டது. அதாவது வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அதன் பிறப்பிடத்தை நாடச் செய்வது. உதாரணமாக ஒரு டார்ச் லைட்டை முன் புறமாக அடிக்கும் போது, முன்னால் இருப்பவர்களை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்களுக்கு நம் முகம் தெரியாது. அதே ஒளியை நம் முகத்தை நோக்கி திருப்பினால், எதிரில் உள்ளவர்களுக்கு நம் முகம் தெரியும். அதைப் போலவே ஆன்மாவின் ஒளியால் புறப் பொருளைக் காண்கிற நாம், அந்த ஒளியை உள்முகமாகத் திருப்பி ஆன்மாவையே அல்லது ஆன்மாவாகத் திகழும் இறைவனையே காண விழைவது. ஒருமைப்படுத்தத் தெரிந்து கொள்கிற நாம் அந்த பிறப்பிடத்தை, அந்த மையத்தை உணரவேண்டும். ஆனால் அந்த மையத்தை உணர ஜபம், பிரார்த்தனை, பிரம்மச்சரியம் போன்றவை அவசியமாகும். அதையெல்லாம் கடைபிடித்து ஒவ்வொரு நிலையாக மேலேறி வந்தால் ஒளிய ஆன்மிக தியானம் என்பது எட்டாப் பழமே. நீங்கள் கேட்கலாம் இதையெல்லாம், கடைபிடிக்காமல் சித்தர்கள் எவ்வாறு சாதனையில் வென்றார்கள் என்று. அவர்கள் தாந்திரிக முறையில் இதைச் சாதித்தார்கள். அந்த வழி இன்னும் கடினமானது. உடலைபக்குவப்படுத்தி, மனதை பக்குவப்படுத்தி, விந்துவை வலுப்படுத்தி மேலேற்றி சாதித்தார்கள். உடலை கற்ப தேகமாக்குவதற்கு கடின முயற்சி தேவை. நாம் மேலோட்டமாக நூல்களைப் படித்துவிட்டு அதை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. சித்தர்கள் கடைபிடித்த வழி மிகவும் கடினமானது. முதலில் ஆன்மிக நம்பிக்கை பிறகு ஒழுக்கம் பிறகு உடல் வலிமை பிறகு பிராண சக்தி பிறகு புலனடக்கம் பிறகு மன ஒருமைப்பாடு என்ற நிலைகளையெல்லாம் கடந்தவனே தியானத்தில் நிலைக்க முடியும். தியானத்தில் நீடித்து, நிலைத்தவர்களுக்கே சமாதி சித்திக்கும். வரும் பதிவுகளில் இது குறித்து விரிவாகக் காண்போம்.
தியானம் பற்றி பல செய்திகளைத் தொகுத்து வழங்கினாலும், சந்தேகம் தொடர்கிறது. தியானம் என்றால் என்ன ? நான் நீண்ட நாட்கள் தியானம் செய்கிறேன் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறதே ? அவர் ஒரு மாதிரியாகச் சொல்கிறார். இவர் வேறு மாதிரியாகச் சொல்கிறார். யார் சொல்வது சரி ? என்னால் நீண்ட நேரம் உட்கார முடியவில்லையே ? என்று பல விதமான கேள்விகள், கேட்கப்படுகின்றன. கேலியும், கிண்டல்களும், நக்கலும், நையாண்டியும் செய்பவர்களும் உண்டு. ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நினைவுகளைக் கட்டுப்படுத்தி, ஒரு நிலையில் நிறுத்துவதற்கான வழி தியானம். ஊரெல்லாம் சுற்றும் தேரை நிலையில் நிறுத்துவது. உலகெங்கிலும் தியானம் மிகப் பிரபலமாகி விட்டது. பக்குவம் பெற்ற சிலர் செய்து வந்த ஆன்மிகப் பயிற்சி இப்போது பலரும் பின்பற்றக்கூடிய பயிற்சியாக இருக்கிறது. பதஞ்சலி மகான் இதை ஏழாவது படியாகத்தான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இப்போது நீங்கள் உள்ளே சென்று அமர்ந்த உடன் உங்களுக்கு தீட்சை வழங்கப்பட்டு நீங்கள் தியானம் செய்யும் தகுதி அடைந்து விட்டீர்கள். இன்றிலிருந்து நீங்கள் தியானம் செய்யலாம் என்று செல்வார்கள். நீங்களும் கண்களை மூடி அமர்ந்திருப்பீர்கள். என்மனைவியும் தியானம் செய்கிறேன் என்று சுவரோரமாக அமர்ந்து, சிறிது நேரத்திற்கெல்லாம் தூங்கி விழுந்து கொண்டிருப்பார். என்ன இப்படி தூங்கி விழுகிறாய் ? என்று கேட்டால், ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இதைப் பயிற்சி தருபவரிடம் சொல்லி, சிரித்துக் கொண்ட போது அவர் சொன்னார், இதுவும் ஒரு வகையான தியானம்தான் என்று. விஞ்ஞான யுகத்திற்கு தகுந்தவாறு தியானம் கூட நவீன மயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நவீனமயமான தியானங்கள், தியானமல்ல, மன ஒருமைப்பாட்டுப் பயிற்சிகள். உலகில் பல விதமான தியானங்கள் இருந்தாலும், அவற்றை இரண்டு வகையாகக் கூறலாம். உலகியல் தியானம், ஆன்மிக தியானம். உலகியல் தியானம் என்றால், தேக ஆரோக்யம், மன நலம் மற்றும் மன ஒருமைப் பாட்டிற்கானப் பயிற்சி ஆகும். இந்த தியானங்களால் ஆரோக்யம் மேம்படுகிறது, இரத்த அழுத்தம் சீராகிறது, மன அழுத்தம் ஏற்படாத அளவு மனவலிமை கிடைக்கிறது என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தற்போது நிரூபித்திருக்கிறார்கள். நகர வாழ்க்கை அது நரக வாழ்க்கை என்று அலுத்துக் கொள்பவர்களுகெல்லாம் இந்த தியான முறைகள் மிகவும் பயனுள்ளவை. மேலை நாடுகளில் இந்த தியான முறைகள் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றன. ஆனால் ஆன்மிக தியானம் என்பதன் கோணமே வேறு. ஆன்மிக ஒளி அல்லது ஆன்மிக விழிப்புணர்வு பெறுவதே அதன் நோக்கம். இதற்கு உயர்ந்த மனப்பக்குவமும், தீவிரமான மன ஒருமைப்பாடும் அவசியமாகும். ஏதாவது ஒரு பொருளில் மனதை குவிப்பது மன ஒருமைப்பாடு. அது புறப் பொருளிலோ அல்லது புறப் பொருளைக் குறித்த மனக் காட்சியிலோ மனதைக் குவிப்பது. உண்மையில் தியானம் என்பது வேறுபட்டது. அதாவது வெளிமுகமாக ஓடும் மனதை உள்முகமாகத் திருப்பி, அதன் பிறப்பிடத்தை நாடச் செய்வது. உதாரணமாக ஒரு டார்ச் லைட்டை முன் புறமாக அடிக்கும் போது, முன்னால் இருப்பவர்களை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் அவர்களுக்கு நம் முகம் தெரியாது. அதே ஒளியை நம் முகத்தை நோக்கி திருப்பினால், எதிரில் உள்ளவர்களுக்கு நம் முகம் தெரியும். அதைப் போலவே ஆன்மாவின் ஒளியால் புறப் பொருளைக் காண்கிற நாம், அந்த ஒளியை உள்முகமாகத் திருப்பி ஆன்மாவையே அல்லது ஆன்மாவாகத் திகழும் இறைவனையே காண விழைவது. ஒருமைப்படுத்தத் தெரிந்து கொள்கிற நாம் அந்த பிறப்பிடத்தை, அந்த மையத்தை உணரவேண்டும். ஆனால் அந்த மையத்தை உணர ஜபம், பிரார்த்தனை, பிரம்மச்சரியம் போன்றவை அவசியமாகும். அதையெல்லாம் கடைபிடித்து ஒவ்வொரு நிலையாக மேலேறி வந்தால் ஒளிய ஆன்மிக தியானம் என்பது எட்டாப் பழமே. நீங்கள் கேட்கலாம் இதையெல்லாம், கடைபிடிக்காமல் சித்தர்கள் எவ்வாறு சாதனையில் வென்றார்கள் என்று. அவர்கள் தாந்திரிக முறையில் இதைச் சாதித்தார்கள். அந்த வழி இன்னும் கடினமானது. உடலைபக்குவப்படுத்தி, மனதை பக்குவப்படுத்தி, விந்துவை வலுப்படுத்தி மேலேற்றி சாதித்தார்கள். உடலை கற்ப தேகமாக்குவதற்கு கடின முயற்சி தேவை. நாம் மேலோட்டமாக நூல்களைப் படித்துவிட்டு அதை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. சித்தர்கள் கடைபிடித்த வழி மிகவும் கடினமானது. முதலில் ஆன்மிக நம்பிக்கை பிறகு ஒழுக்கம் பிறகு உடல் வலிமை பிறகு பிராண சக்தி பிறகு புலனடக்கம் பிறகு மன ஒருமைப்பாடு என்ற நிலைகளையெல்லாம் கடந்தவனே தியானத்தில் நிலைக்க முடியும். தியானத்தில் நீடித்து, நிலைத்தவர்களுக்கே சமாதி சித்திக்கும். வரும் பதிவுகளில் இது குறித்து விரிவாகக் காண்போம்.
 
Via FB மௌனத்தின் குரல்