தக்ஷிணாமூர்த்தி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:37 PM | Best Blogger Tips
Photo: ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் - ஓம் அ; நம; சிவாய அ;ஓம் தக்ஷிணாமூர்த்தியே பாதுகாம் பூஜயாமி நமஹ.

பேரறிவை உணர்ந்த இறைநிலையாளர்களுக்கும், அறிவில் சிறந்த எத்தனையோ குருமார்களுக்கும் கூட சில நேரங்களில் மனதில் சலனமும், தெளிவற்ற நிலையும் ஏற்பட்டு விடுகிறது. சமுத்திரம் மிகவும் பிரம்மாண்டமாகவும், பெரியதாகவும் இருந்தாலும் அதன் கரையோரங்களில் அலைகள் அடித்துக் கொண்டே இருப்பது போல, அறிவானது நிரம்பியிருந்தாலும், ஞானிகளான அவர்களுக்கும் அதில் சலனங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். அந்த சலனங்களே சில வேளைகளில் புத்தி தெளிவின்மையையும், காரியத் தடைகளையும் உண்டு பண்ணிவிடும். அந்த சமயங்களிலெல்லாம் ஞானமாகிய குருவே ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து அவர்களைக் காக்கும் பொருட்டு தத்துவங்களை உபதேஷிக்கிறார்.
அறிவுடையவர்கள் அந்த உபதேஷத்தை பெற்று, உணர்ந்து தம் அறிவை தக்க வைத்துக் கொள்வதோடு மேலும் தெளிவுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். சிவபெருமானாகிய ஆதி ஈசனும் பிரணவப் பொருளை ஏற்கும் பொருட்டு சுவாமிநாதனிடம் சிஷ்யபாவமாக அமர்ந்து உபதேஷத்தை ஏற்றார். அதிலிருந்து அவர் நமக்குத் தந்தருளிய உபதேஷம் என்னவென்றால், ''உபதேஷம்தான் முக்கியமே தவிர, உபதேஷத்தை உணர்த்தும் உருவமோ அல்லது உபதேஷிப்பவரது வயதோ முக்கியமில்லை '' என்பதே. எனவே ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தாலும், சிஷ்ய தத்துவத்தாலுமே உபதேஷம் சித்திக்கும் என்பதை உணர வேண்டும்.
சலனமடைந்த நிலையில் குழம்பிப் போயிருந்த அர்ஜுனனுக்கு பகவான் ஶ்ரீகிருஷ்ணர் கீதையை உபதேஷித்தார். அர்ஜுனனும் அதை எற்றுக் கொண்டு மனம் தெளிவடைந்து பின் போரில் வென்றார். அறிவில் சிறந்த தமிழ் மூதாட்டியான ஔவைக்கு சுட்டபழம் வேண்டுமா ? சுடாதபழம் வேண்டுமா ? என்று கேட்டு முருகப் பெருமானே தத்துவ உபதேஷம் செய்வித்தார். ஔவையும் மனமுருக அதை ஏற்று, உணர்ந்து தெளிந்தார். எதை விலகச் சொல்கிறாய் ? என்ற கேள்வியால் ஆதி சங்கரருக்கு சிவபெருமானே பஞ்சமர் வடிவத்தில் வந்து உபதேஷித்தார். அவரும் அந்த வார்த்தைகளையே உபதேஷமாக ஏற்று, புத்தி தெளிந்து சித்தியடைந்தார். எனவே பேரறிவாளர்களும் சமயத்தில் தெளிவின்மையாக இருக்கும் போது இறைவனே குருவாக ஏதோ ஒரு வடிவத்தில் வந்து உபதேஷம் செய்கிறார். அப்படி உபதேஷிப்பதால் அவரே குரு தக்ஷிணாமூர்த்தி. இன்று நாம் கற்கின்ற ஒவ்வொரு நூல்களும் ஒரு உபதேஷ நூல்களே. அவற்றுள் மெய்ப்பொருளை உணர்த்தும் உபதேஷ நூல்கள் சிறப்பாகப் பேசப் படுகின்றன. அவ்வாறு உண்மையான மெய்யை ஆதியில் சனகாதி முனிவர்களுக்கு சிவபெருமானே தக்ஷிணாமூர்த்தி வடிவத்தில் உபதேஷம் செய்தார். எனவே குருவருளும், திருவருளும் வேண்டி நாமும் ஆதிகுருவான ஶ்ரீதக்ஷிணாமூர்த்தியை சரண்டைவோமாக. அறியாமையாகிய அஞ்ஞானத்தை விலக்கிக் காப்பவரே குரு. அவ்வாறு அஞ்ஞானம் விலகும் போது மெய்ஞானம் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. ஜீவன்களின் சிரசே அஞ்ஞானமாகிய தரை. அந்த அஞ்ஞானமாகிய தரையில் குருவாகிய பரமாத்மாவின் பாதம் படும் போது ஜீவன் ஞானத்தில் ஜொலிக்கிறான். குருவை வணங்க வணங்க சீடன் தெளிவடைவதோடு, ஞானமடைந்து உய்கிறான்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் - ஓம் அ; நம; சிவாய அ;ஓம் தக்ஷிணாமூர்த்தியே பாதுகாம் பூஜயாமி நமஹ.

Via FB மௌனத்தின் குரல்