தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலே கொசுக்களை ஒழிப்பதற்கு, வீடுகளில் நொச்சி செடிகளை வளர்க்க அறிவுரை சொல்லி இருக்கிறார்கள் மேயர் அவர்கள். கம்ப்யூட்டர் யுகம் என்று மார்தட்டிப் பேசும் நவீன மோகவாதிகள் இதைக் குறித்து கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். எங்கே போயிற்று உங்கள் அறிவியல். மனிதர்களை கொசுபோல அழிக்கத்தான் உங்களால் முடியுமே தவிர, கொசுவை அழிக்க முடியாது. அந்த கொசு ஒழிப்பான்களின் புகையை விடாமல் சுவாசிப்பவர்கள் நுரையீரல் புற்றுநோய், மற்றும் இதய நோயால் கடுமையாக பாதிக்கப் படுவார்கள் என்று மேல் நாட்டுக்காரன் சொல்லி விட்டான். எனவேதான் மாண்புமிகு மேயர் அவர்கள் அருமையாக சித்தர்களின் நடைமுறையை வழிமொழிகிறார்கள்.
இவ்வளவு ஏன் சித்தர்கள் காடுகளிலும் மலைகளிலும், குகைகளிலும் போய் ஒளிந்து கொண்டார்கள், என்று கேலி பேசுபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மகாகவி பாரதி கூட அவ்வாறு சித்தர்களை கிண்டல் செய்திருக்கிறார். ஆனால் அதற்கு உள்ளே ஒளிந்துள்ள சூட்சுமத்தை அறிந்தார்கள் இல்லை.ஒளியில் மனிதன் அதிகமாக சஞ்சாரம் செய்தால் உடல் நலமும், மனநலமும் பாதிப்படையும். இதை இன்றைய நவீன விஞ்ஞானம் ஒத்துக் கொள்கிறது. அது எதனால் என்றால் மூளைச் செல்களுக்கு தேவையான ''மெலோடோனின்'' என்ற சுரப்பு நீரின் சுரப்பை ஒளி தடுக்கிறது. இதனால் மூளை செல்கள் பாதிப்படைந்து மனிதன் மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, மனநோய்கள் போன்ற இவை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் ஆளாகிவிடுவான். இதைத் தெரிந்து வைத்திருந்த நம் சித்தர்கள் பகலில் சந்திர கலையில் சுவாசத்தை ஓட விட்டு தவத்தில் அமர்ந்து விடுவார்கள். சூரியன் மறைந்த உடன் வெளியே வந்து சூரியகலையில் சுவாசத்தை ஓடவிட்டு சஞ்சாரம் செய்வார்கள். அவர்கள் காலையில் மட்டுமே சிறிது நேரம் சூரிய ஒளியை பெற்றுக் கொள்வார்கள். இன்னும் நம்பிக்கையோடும், பனிவோடும் அவர்கள் இராஜ்ஜியத்திற்குள் நுழைந்து பார்த்தீர்களானால் நிறைய சூக்குமங்களை திறந்து விடுவார்கள். அறிவியல் தேவைதான் என்றாலும், அதன் நிறை குறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு அளவாகப் பயன்படுத்தி பாதிப்பில்லாமல் வாழ வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
Via FB மௌனத்தின்
குரல்