சிவனாடியார் - தமிழ் மாதங்களில் இறைவன் 21- 30

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips
திருச்சிற் றம்பலத்து ஒளிருஞ் சிவனை
நினைமின் மனனே! நினைமின் மனனே!
சிவபெரு மானைச் செம்பொன்னம் பலவனை!
நினைமின் மனனே! நினைமின் மனனே!
பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணையைத்
திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்.
அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக்
கால்எடுத் தடக்கிய கடவுள்நின் அடைக்கலம் !
உலகுஅடங் கலும்படைத்து உடையவன் தலைபறித்து
இடக்கையில் அடக்கிய இறைவா ! நின் அடைக்கலம் !
செய்யபொன் னம்பலச் செல்வா ! நின் அடைக்கலம் !
ஐயா ! நின் அடைக்கலம் ! அடியன்நின் அடைக்கலம் !
அடியார்க்கு எளியாய் ! அடைக்கலம் !அடைக்கலம் !
நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுளதோ ? கச்சிஏகம்பனே !
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால் என்னால்இங் காவதுண்டோ ? இறைவா கச்சி ஏகம்பனே!
அடியார்க்கு எளியவர் அம்பல வாணர் அடிபணிந்தால் மடியாமல் செல்வ வரம்பெறலாம்.

Via FB சிவனடியார்கள்