பழங்கால உணவுமுறைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:39 PM | Best Blogger Tips
Photo: உணவைச் சாப்படுவதோடு நம் வேலை முடிந்துவிடுகிறது. மறுநாள் கழிவுகளையும் வெளியேற்றி விடுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் வேலை மிகவும் கடினமானது. கண்ட கண்ட உணவுப் பொருள்களை உண்டால் அத்தனை ஜீரண மண்டல உறுப்புகளும் கெடுவதுடன், எல்லா மண்டலங்களும் பாதிப்படைந்து உடலும் கெடும். உயிரும் கெடும். வனாந்திரங்களில் உணவாக சித்தர்கள் கஞ்சிகளையே பயன் படுத்தியுள்ளனர். அவ்வப்போது காய், கனி, சில கிழங்கு வகைகளை உட்கொண்டாலும், கஞ்சி அவர்களின் விருப்பமுள்ள, நல்ல எளிதில் ஜீரணமாகும் உணவாகவும், எளிதில் தயாரிக வசதியான உணவாகவும் திகழ்ந்திருக்கிறது. சதுரகிரியில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடி அமாவாசை அன்று வரும் பக்தர்களுக்கு கஞ்சி ஆன்னதானமாக வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கஞ்சி மடம் என்று ஒரு மடமே இருக்கிறது. மற்ற தற்போது உள்ள மடங்களெல்லாம் அதற்கு பிறகு வந்தவைகளே. 
நெல்லைக்கு அருகே உள்ள வல்லாநாடு என்ற ஸ்தலத்தில் சமாதி கொண்டிருக்கும் சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகளின் முயற்சிக்குப் பிறகே அரிசி சாதம் உணவாக வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த சித்தர் சதுரகிரி மலையில் மதம் கொண்ட ஒரு யானையை தன் தவ வலிமையால் அடக்கி, ஒரு பசுவைப் போல அமைதியாக மாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் மலைக்கு சென்றால், எப்படியோ தெரிந்து கொண்டு அந்த யானை கோவிலுக்கு வந்து விடுமாம். கீழிருந்து வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை அந்த யானைக்காக ஆட்களை வைத்து சுமந்து செல்வாராம். சில காலங்களுக்குப் பிறகு தந்தத்திற்காக யாரோ அந்த யானையைக் கொன்று விட, அதன் மண்டை ஓட்டை அரசு அனுமதியுடன் எடுத்து வந்து வல்லநாடு என்ற ஊரில் இருக்கும் பாறைக்காடு என்ற இடத்தில் உள்ள தன் குடிலில் பத்திரமாக வைத்து, அதனருகே ஒரு அனையா ஜோதியையும் ஏற்றி வைத்துள்ளார். 
சதுரகிரி மலையில் அவர் ஏற்றி வைத்த அனையா ஜோதி இன்றும் ராஜா மடம் என்கிற மடத்தில் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் சமாதியும் பாறைக்காடு என்ற இடத்தில் இருக்கிறது. அவர் ஒரு வள்ளலாரின் சன்மார்க்க பக்தர். எனவே ஒவ்வொரு பூச நட்சத்திரமன்றும் விஷேச பூஜைகள் நடக்கும். தினமும் அன்னதானம் சிறப்பாக நடக்கும். வருகிற பக்தர்களை உபசரிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும். சதுரகிரியில் வாழும் ஒரு முதியவர் தந்த தகவல் என்னவென்றால், இந்த மலையைப் பொருத்த வரை பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடி அமாவாசை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் மலைவாசிகள், சித்தர்கள், தவசிகளைத் தவிர யாரும் மலைக்கு வரமாட்டார்கள். ஆதிகாலம் தொட்டே மலையில் வாழ்பவர்கள் கஞ்சி, கூழ் போன்ற உணவுகளையே உணவாகக் கொண்டிருந்தார்கள். அதே நடைமுறை ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கும் கஞ்சியே அன்னதானமாக வழங்கப்பட்டு வந்தது என்பதுதான். 
இந்த கஞ்சியிலேயே மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம் போன்ற மருத்துவப் பொருள்களை தேவைக்கு ஏற்ப, தேவைப்படும் காலங்களில் கலந்து உண்பார்களாம். அவர் சொன்ன சில கஞ்சிகளையும் அவற்றின் பலன்களையும் உங்களுக்குத் தருகிறேன்.
இதை அந்த முதியவர் கஞ்சிவிதி என்று சொன்னார்.
பால் கஞ்சி - பச்சரிசியை உலையிலிட்டு பசும்பாலிட்டுக் காய்சப்படும் பால் கஞ்சியானது பித்த எரிச்சலைப் போக்கும், அறிவு, விந்து விருத்தியாகும். தேகம் பூரிக்கும்.
கோதுமைக் கஞ்சி - காய்ச்சல், ஜலதோஷம், சளி, சன்னி, வாத சுரம் இவற்றைப் போக்குவதோடு உடலுக்கு வலிமையைத் தரும்.
எவா அரிசிக் கஞ்சி - எவா அரிசி என்கிற ஒருவகை அரிசியில் கஞ்சி வைத்து குடிப்பவர்களுக்கு ஈளை நோய் குணமாகும். எலும்பும் தோலுமாகக் காணப்படுபவர்கள் நல்ல புஷ்டியாக மாறுவார்கள்.
பஞ்ச முஷ்டிக் கஞ்சி - அதாவது துவரம் பருப்பு, உளுந்து, கடலைப் பருப்பு, சிறு பயிறு பருப்பு, பச்சரிசி ஆகிய ஐந்து பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்தப் பெயர். இந்தக் கஞ்சியை அருந்தினால் சோர்வு நீங்கும், முக்குற்றம் தீரும். உண்ணா விரதம் இருந்து பின் உணவு உண்பவர்களுக்கு முதலில் இதைக் கொடுப்பார்கள். 
கொள்ளுக் கஞ்சி - கொள்ளுக் கஞ்சியை உண்டால் கிழவன் எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் எடுத்தநு விடுவான் என்பார்கள். இது பசியைப் போக்கும், அதிகப் பசியை உண்டு பண்ணும். வீரியத்தைத் தரும். 
வடி கஞ்சி - சோற்றிலிருந்து வடித்து எடுக்கப்படும் கஞ்சி. இதைக் குடிப்பதால் வாதம் நீங்கும், கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும். பித்தம் நீங்கும். ஆனால் மந்தத்தை உண்டு பண்ணும்.
கஞ்சிச் சோறு - சோற்றோடு கலந்த இந்தக் கஞ்சியை உண்டால் உடல் வனப்பும், வலிமையும் பெறும், பித்தம் நீங்கும். சளியை உண்டாக்கும். (எனவே இதில் மிளகு சேர்த்துக் கொள்வார்கள்.)
கொதி கஞ்சி - சோறு வேகும் போது எடுக்கப் படுகின்ற கொதி கஞ்சி நல்ல வீரியத்தைத் தரும்.
பொரி கஞ்சி - நெல்லைப் பொரித்து, அதன் அரிசியைத் தனியாக்கி, அதில் கஞ்சி வைத்து உண்பவர்களுக்கு பித்தம் நீங்கும்.
உளுந்து, பச்சரிசி இரண்டையும் சேர்த்து கஞ்சி வைத்து உண்டால் மிகு பித்தமும் நீங்கும்.
பலமுறை வடித்து , வடித்து இறக்கிய நீர்த்த சோற்றுக் கஞ்சியை மறு உலைக் கஞ்சி என்பார்கள். இது உஷ்ணத்தைப் போக்கும். உடல் வலிமையடையும்.
அரை ஆழாக்கு அரிசியில் இரண்டு படி தண்ணீர் ஊற்றி, ஒரு துண்டு சுக்கை இடித்து துனியில் முடிந்து போட்டு, அரைப்படியாக சுண்டும் வரை காய்ச்சும் கஞ்சியையே முடிச்சுக் கஞ்சி என்பார்கள். இது வாதத்தைப் போக்கும், உஷ்ணத்தைப் போக்கும். நீர்கடுப்பு நீங்கும். பித்தம் போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.நல்ல பசியை உண்டாக்கும். இன்னும் தேங்காய் பால் கஞ்சி, வரகுக் கஞ்சி, கூழ் வகைகள், காடி, இப்படி பல வகையான கஞ்சிகள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவைகள் மருந்தாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகவும் விளங்கியிருக்கின்றன.  குளிர்ந்த மலைப் பிரதேஷங்களில் இந்த கஞ்சியானது சுகமான உணவாகவும் இருந்திருக்கின்றன.
உணவைச் சாப்படுவதோடு நம் வேலை முடிந்துவிடுகிறது. மறுநாள் கழிவுகளையும் வெளியேற்றி விடுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் வேலை மிகவும் கடினமானது. கண்ட கண்ட உணவுப் பொருள்களை உண்டால் அத்தனை ஜீரண மண்டல உறுப்புகளும் கெடுவதுடன், எல்லா மண்டலங்களும் பாதிப்படைந்து உடலும் கெடும். உயிரும் கெடும். வனாந்திரங்களில் உணவாக சித்தர்கள் கஞ்சிகளையே பயன் படுத்தியுள்ளனர். அவ்வப்போது காய், கனி, சில கிழங்கு வகைகளை உட்கொண்டாலும், கஞ்சி அவர்களின் விருப்பமுள்ள, நல்ல எளிதில் ஜீரணமாகும் உணவாகவும், எளிதில் தயாரிக வசதியான உணவாகவும் திகழ்ந்திருக்கிறது. சதுரகிரியில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடி அமாவாசை அன்று வரும் பக்தர்களுக்கு கஞ்சி ஆன்னதானமாக வழங்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கஞ்சி மடம் என்று ஒரு மடமே இருக்கிறது. மற்ற தற்போது உள்ள மடங்களெல்லாம் அதற்கு பிறகு வந்தவைகளே.
நெல்லைக்கு அருகே உள்ள வல்லாநாடு என்ற ஸ்தலத்தில் சமாதி கொண்டிருக்கும் சித்தர் சாது சிதம்பரம் சுவாமிகளின் முயற்சிக்குப் பிறகே அரிசி சாதம் உணவாக வழங்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இந்த சித்தர் சதுரகிரி மலையில் மதம் கொண்ட ஒரு யானையை தன் தவ வலிமையால் அடக்கி, ஒரு பசுவைப் போல அமைதியாக மாற்றியுள்ளார். அதன் பிறகு அவர் மலைக்கு சென்றால், எப்படியோ தெரிந்து கொண்டு அந்த யானை கோவிலுக்கு வந்து விடுமாம். கீழிருந்து வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை அந்த யானைக்காக ஆட்களை வைத்து சுமந்து செல்வாராம். சில காலங்களுக்குப் பிறகு தந்தத்திற்காக யாரோ அந்த யானையைக் கொன்று விட, அதன் மண்டை ஓட்டை அரசு அனுமதியுடன் எடுத்து வந்து வல்லநாடு என்ற ஊரில் இருக்கும் பாறைக்காடு என்ற இடத்தில் உள்ள தன் குடிலில் பத்திரமாக வைத்து, அதனருகே ஒரு அனையா ஜோதியையும் ஏற்றி வைத்துள்ளார்.
சதுரகிரி மலையில் அவர் ஏற்றி வைத்த அனையா ஜோதி இன்றும் ராஜா மடம் என்கிற மடத்தில் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அவர் சமாதியும் பாறைக்காடு என்ற இடத்தில் இருக்கிறது. அவர் ஒரு வள்ளலாரின் சன்மார்க்க பக்தர். எனவே ஒவ்வொரு பூச நட்சத்திரமன்றும் விஷேச பூஜைகள் நடக்கும். தினமும் அன்னதானம் சிறப்பாக நடக்கும். வருகிற பக்தர்களை உபசரிக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும். சதுரகிரியில் வாழும் ஒரு முதியவர் தந்த தகவல் என்னவென்றால், இந்த மலையைப் பொருத்த வரை பல ஆயிரம் ஆண்டுகளாக ஆடி அமாவாசை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாட்களில் மலைவாசிகள், சித்தர்கள், தவசிகளைத் தவிர யாரும் மலைக்கு வரமாட்டார்கள். ஆதிகாலம் தொட்டே மலையில் வாழ்பவர்கள் கஞ்சி, கூழ் போன்ற உணவுகளையே உணவாகக் கொண்டிருந்தார்கள். அதே நடைமுறை ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கும் கஞ்சியே அன்னதானமாக வழங்கப்பட்டு வந்தது என்பதுதான்.
இந்த கஞ்சியிலேயே மிளகு, சீரகம், பூண்டு, வெந்தயம் போன்ற மருத்துவப் பொருள்களை தேவைக்கு ஏற்ப, தேவைப்படும் காலங்களில் கலந்து உண்பார்களாம். அவர் சொன்ன சில கஞ்சிகளையும் அவற்றின் பலன்களையும் உங்களுக்குத் தருகிறேன்.
இதை அந்த முதியவர் கஞ்சிவிதி என்று சொன்னார்.
பால் கஞ்சி - பச்சரிசியை உலையிலிட்டு பசும்பாலிட்டுக் காய்சப்படும் பால் கஞ்சியானது பித்த எரிச்சலைப் போக்கும், அறிவு, விந்து விருத்தியாகும். தேகம் பூரிக்கும்.
கோதுமைக் கஞ்சி - காய்ச்சல், ஜலதோஷம், சளி, சன்னி, வாத சுரம் இவற்றைப் போக்குவதோடு உடலுக்கு வலிமையைத் தரும்.
எவா அரிசிக் கஞ்சி - எவா அரிசி என்கிற ஒருவகை அரிசியில் கஞ்சி வைத்து குடிப்பவர்களுக்கு ஈளை நோய் குணமாகும். எலும்பும் தோலுமாகக் காணப்படுபவர்கள் நல்ல புஷ்டியாக மாறுவார்கள்.
பஞ்ச முஷ்டிக் கஞ்சி - அதாவது துவரம் பருப்பு, உளுந்து, கடலைப் பருப்பு, சிறு பயிறு பருப்பு, பச்சரிசி ஆகிய ஐந்து பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் இந்தப் பெயர். இந்தக் கஞ்சியை அருந்தினால் சோர்வு நீங்கும், முக்குற்றம் தீரும். உண்ணா விரதம் இருந்து பின் உணவு உண்பவர்களுக்கு முதலில் இதைக் கொடுப்பார்கள்.
கொள்ளுக் கஞ்சி - கொள்ளுக் கஞ்சியை உண்டால் கிழவன் எள்ளைக் கையால் பிழிந்து எண்ணெய் எடுத்தநு விடுவான் என்பார்கள். இது பசியைப் போக்கும், அதிகப் பசியை உண்டு பண்ணும். வீரியத்தைத் தரும்.
வடி கஞ்சி - சோற்றிலிருந்து வடித்து எடுக்கப்படும் கஞ்சி. இதைக் குடிப்பதால் வாதம் நீங்கும், கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும். பித்தம் நீங்கும். ஆனால் மந்தத்தை உண்டு பண்ணும்.
கஞ்சிச் சோறு - சோற்றோடு கலந்த இந்தக் கஞ்சியை உண்டால் உடல் வனப்பும், வலிமையும் பெறும், பித்தம் நீங்கும். சளியை உண்டாக்கும். (எனவே இதில் மிளகு சேர்த்துக் கொள்வார்கள்.)
கொதி கஞ்சி - சோறு வேகும் போது எடுக்கப் படுகின்ற கொதி கஞ்சி நல்ல வீரியத்தைத் தரும்.
பொரி கஞ்சி - நெல்லைப் பொரித்து, அதன் அரிசியைத் தனியாக்கி, அதில் கஞ்சி வைத்து உண்பவர்களுக்கு பித்தம் நீங்கும்.
உளுந்து, பச்சரிசி இரண்டையும் சேர்த்து கஞ்சி வைத்து உண்டால் மிகு பித்தமும் நீங்கும்.
பலமுறை வடித்து , வடித்து இறக்கிய நீர்த்த சோற்றுக் கஞ்சியை மறு உலைக் கஞ்சி என்பார்கள். இது உஷ்ணத்தைப் போக்கும். உடல் வலிமையடையும்.
அரை ஆழாக்கு அரிசியில் இரண்டு படி தண்ணீர் ஊற்றி, ஒரு துண்டு சுக்கை இடித்து துனியில் முடிந்து போட்டு, அரைப்படியாக சுண்டும் வரை காய்ச்சும் கஞ்சியையே முடிச்சுக் கஞ்சி என்பார்கள். இது வாதத்தைப் போக்கும், உஷ்ணத்தைப் போக்கும். நீர்கடுப்பு நீங்கும். பித்தம் போக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.நல்ல பசியை உண்டாக்கும். இன்னும் தேங்காய் பால் கஞ்சி, வரகுக் கஞ்சி, கூழ் வகைகள், காடி, இப்படி பல வகையான கஞ்சிகள் பழக்கத்தில் இருந்திருக்கின்றன. இவைகள் மருந்தாகவும், எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகவும் விளங்கியிருக்கின்றன. குளிர்ந்த மலைப் பிரதேஷங்களில் இந்த கஞ்சியானது சுகமான உணவாகவும் இருந்திருக்கின்றன.
 
Via FB மௌனத்தின் குரல்