என்ன பெயர் ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips


உங்கள் மதத்தின் பெயர் என்ன என்று என்னிடம் கேட்பவர்களுக்கு நான் கொடுக்கும் நேரடியான பதில் "தர்மம்" என்பது.

அது என்ன தர்மம்? அதையும் பார்ப்போம்.

வேதங்களை அடிப்படையாக கொண்ட இந்த சமய கோட்பாட்டிற்கு பெயர் தர்மம் என்பதே இதை வேதமே சொல்கிறது.

क्विमग्निमुप्स्तुहि सत्यधर्माणमध्वरे | देवममीवचातनम् || (( ऋग् 1.12.7)
kavim agnim upasthuhi satya dharmaanaam adhvare devam amivachaadanam (Rig 1.12.7)
கவிம் அக்னிம் உபஸ்துஹி சத்ய தர்மானாம் அத்வரே | தேவம் அமிவச்சாதனம் || (ரிக் 1:12:7)

ஹிம்சையற்ற சத்ய தர்மத்தை கொடுத்து நம் மருள் நீக்கி ஒளியேற்றிய முற்றுணர்வும், தன்னொளியும் கொண்ட இறைவனை போற்றுவாய்.

இங்கு தர்மம் என்ற சொல் இறைவனால் கொடுக்கப்பட்ட என்று மிக தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த தர்மம் என்ற சொல் என் அறிவிற்கு எட்டிய வரையில் குறைந்த அளவு நூறு இடங்களுக்கு மேலாவது வேதங்களில் வருகிறது. அப்போது தர்மம் என்றால் என்ன?


"தரதி இதி தர்ம:" (தாங்குவது/அடிப்படியாக இருப்பது தர்மம்) இந்த சொல் "தர" என்ற சம்ஸ்க்ருத வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. "தர" என்றால் ஆதாரம். இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக இருக்கும் நெறி என்பது சிறப்பு பொருள்.தரணி,வசுந்தரா/வசுதா/தர்தி (பூமி) போன்ற சொற்களும் ஆதாரம் என்பது போன்ற இன்னும் பல சொற்களும் இந்த தர என்ற சொல்லில் இருந்து தோன்றியது தான். இதற்க்கு இணையான தமிழ் சொல் அறம் என்பதாகும். மற்றபடி Law, Rules, Duty போன்ற ஆங்கில சொற்கள் எல்லாம் இதற்க்கு இணை இல்லை. இந்த தர்மத்தை பின் பற்றுபவன் பொதுவாக ஆண் பெண் என்று இரு பாலரையும் தர்மி என்றும் சிறப்பாக பெண் பாலில் சொல்ல வேண்டும் என்றால் தர்மினி என்று அழைப்பது மரபு.

இன்றும் மங்கோலியா கொரியா முதல் இலங்கை வரையும் பாரதம் முதல் ஜப்பான் தேசம் வரையும் இந்த சொல் தர்மம் என்றோ தம்மம் என்றோ வழக்கில் இருந்து தான் வருகிறது. அது மட்டும் இன்றி பாரசீகம், இலத்தீன் மற்றும் ஐரோப்பிய மொழிகளிலும் தர, தேரீதி, தேர்மி, தர்ன, தேர்மொஸ் என்று இதே சொல் இதே பொருளை கொடுப்பதும் கூர்ந்து நோக்கத்தக்கது.

பௌத்த மற்றும் சமண மதங்கள் தோன்றிய பின் அவைகளும் தங்கள் மதத்தின் பெயருக்கு பின்னால் இந்த தர்மம் என்ற சொல்லை சேர்த்து பௌத்த தர்மம், ஜைன தர்மம் என்று சொல்ல தொடங்கிய பின் அதில் இருந்து இந்த தொன் தர்மத்தை வேறுப்படுத்தி காட்ட பிற்காலத்தில் சனாதன தர்மம் (என்றும் இருக்கும் தர்மம்) சொல்ல தொடங்கி பின் மிக உயர்ந்த தர்மம் என்று பொருள் பட ஆர்யா தர்மம் என்று சொல்லி வந்ததும் பிற்கால வரலாறு.

வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் "ஸப்த சிந்து" என்ற சொல்லையும் அதில் வரும் கங்கா, சரஸ்வதி போன்ற வேறு சில மறை சொற்களையும் அடிப்படையாக கொண்டு பாரதா நாட்டில் பாயும் நதிகளுக்கும் கங்கை, சிந்து, சரஸ்வதி என்று பெயர் வந்தது. இப்படி இறைவனால் கொடுக்கப்பட்ட வேதங்கள் பின்பற்றியவர்கள் அதன் மேல் தங்களுக்கு இருக்கும் அபிமானத்தால் தங்கள் இருக்கும் நிலபரப்புக்கும் சப்த சிந்து என்ற பெயரும் வைத்து அழைத்தனர்.

வேத நெறியில் இருந்து தோன்றிய பண்டய பாரசீக ஜோராஸ்த்ர சமயத்தை சார்ந்தவர்களும் இந்த சப்த சிந்துவை தங்கள் மொழியில் ச, சா, சி, போன்ற எழுத்துக்கள் இல்லாத காரணத்தால் ஹப்த ஹிந்து என்று அழைத்தனர். இப்படி இந்த நிலத்தில் பண்பாடு, சமயம், மொழி போன்ற எதையும் குறிக்க அவர்கள் ஹிந்து என்ற சொல்லை பயன் படுத்த அதுவே மேற்கு நாடுகளிலும் இந்து என்றும் இந்தியா என்றும் ஆனது.

பண்டைய பாரசீக பேரரசர்களும் அறிஞர்களும், சாமான்ய மக்களும் இந்த ஹிந்து என்ற சொல்லை மிக உயர்ந்த சொல்லாகவே கருதி வந்தனர். இதன் அடிப்படியிலே பாரசீகத்தை அடுத்து இருந்த அரபு தேச மக்களும் தங்கள் பெண்களுக்கு "ஹிந்த்" என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர்.

ஹிந்து என்றால் திருடன், பன்றி என்ற பொருள் எல்லாம் பாரசீக மொழியிலோ வேறு எந்த மொழியிலோ மொழியியல் அடிப்படையில இல்லை அதனால் தான் ஒரு முன்னால் முதல் அமைச்சார் பாரசீக மொழியில் இருந்தும் ஆதாரம் கொடுக்க முடியாமல் நீதி மன்றத்தில் வழக்கை சந்தித்து கொண்டு இருக்கிறார். இந்த திருடன், பன்றி போன்ற பொருள் எல்லாம் முகமதியர்கள் மாற்று மதங்களின் மேல் கொண்ட வெறுப்பால் அவர்களாகவே செய்த திரிபுகள். ஹிந்து என்றால் திருடன், பன்றி என்றால் முகமதின் ஒரு மனைவியின் பெயரும் "ஹிந்த் பின்த் அபி உமாயா" என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முடிவாக ஹிந்து என்றால் இழி சொல் இல்லை, மாறாக ஒரு நிலபரப்பையும் அதன் கலாச்சாரத்தையும் குறிக்கும், அனால் வேத நெறியில் இருக்கும் சமய கோட்ப்பாட்டை குறிக்க தர்மம் என்ற சொல் சிறந்தது.
 
Via FB Dharmaagni தர்மாக்னி