ரிஷிகளும், சித்தர்கள் - வேதியல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:23 | Best Blogger Tips
Photo: சித்தர்கள் வேதத்தை வெறும் குப்பை என்று சொல்கிறார்கள் என்று சிலர் தவறான கருத்துக்களை பரப்பிவிடுகிறார்கள். உண்மையில் ரிஷிகளும், சித்தர்களும்தான் வேதத்தின் இயல்புகளை மனிதனின் இயல்பான, ஆரோக்யமான, ஆனந்தமான ஆன்மிகம் கலந்த வாழ்வுக்கு வகுத்துத் தந்தார்கள். வேதியல் என்றால் விஞ்ஞானத்தில் இரசாயன சம்மந்தமான ஒரு விஷயம் என்றே நாம் கருதுகிறோம். 
உண்மையில் வேதம் + இயல்(இயல்பு) = வேதியல். அதாவது மனிதனாகப்பட்டவன் பிணி, மூப்பு, சாக்காடு என்ற மூன்று துன்பங்களை வென்று உயிர், உடல் இரண்டையும் நிலைநிறுத்தி இறவாத இறைநிலை பெற்று வாழ வேண்டும் என்பதற்காக, வேதங்களில் சொல்லப்பட்டுள்ள நமக்குப் புரியாமல் இருந்த இரகசியங்களை தொகுத்து ,இயல்பான வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு வாழ்வதற்கு வழிமுறைகளாக வகுத்துத் தந்தார்கள். இதுவே வேதம் தரும் இயல் வேதஇயல் = வேதியல். தவ வலிமையாலும் ஞானத்தாலும் நம் முன்னோர்களான சித்தர் பெருமக்கள் அறிந்து கொண்ட வேதியல் உண்மைகளை பல கோடிக்கணக்கான பணம் செலவு செய்தும் கூட இன்றைய விஞ்ஞானிகள் நெருங்கவே முடியவில்லை என்பதே அழுத்தமான உண்மை. 
இந்த வேதியல் முறைகளை சித்தர்கள் ஆறு வகைகளாகக் கண்டார்கள். அதாவது தவம், மருத்துவம், கற்பம், இரசவாதம்,கெவுனம், சமாதி என்பவைகளாம். மேற்கூறிய ஆறு வகைகளையும் கடைபிடிக்கும் மனிதனால் மட்டுமே மரணமற்றப் பெருவாழ்வு நிலையான சித்தியடைய முடியும். மற்ற ஆன்மிகப் பெரியோர்கள் அடையும் நிலையானது பிறாவா நிலை. அதாவது முக்தி. இரண்டு நிலைகளிலும் இறுதி நிலையாக இருந்து அருள் செய்வது இறையாற்றலே. நம்மில் பெரும்பாலானவர்கள் தியானம், யோகா, பிராணாயாமம் போன்ற சித்தர்களின் நிலைகளை மட்டும் அறிந்திருக்கிறோம். அவர்களின் மருத்துவ நூல்களை நாம் படிப்பதில்லை. ஏனென்றால் நாம் மருத்துவர்கள் அல்ல என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் சித்தர்கள் மருத்துவத்தில் நுழைந்ததே இந்த தேகத்தை கற்பமாக்கவும், அற்புத சித்திகளை மூலிகைகள் மூலமாக அடையவும்தான். அதன் பயனாகவே மனிதகுலம் நோயற்று வாழ சித்த மருத்துவம் விளைந்தது. 
கொடிய விஷமான பாஷானங்கள் 64 உண்டு என்றும். அவற்றில் இயற்கையாய் விளைபவை முப்பத்தி இரண்டு என்றும், செயற்கையாய் நாம் உருவாக்குவது முப்பத்தி இரண்டு என்றும் கண்டறிந்தவர்கள் சித்தர்கள். தனிமங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான மூலிகைகளையும், அவற்றின் தன்மைகளையும் கண்டறிந்து குறிப்புகள் எழுதி வைத்தவர்கள் சித்தர்கள்தாம். பாதரசத்தைப் பற்றியும் அதன் குணங்களைப்பற்றியும் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர். திரவ நிலையில் உள்ள பாதரசத்தை திடநிலைக்கு மாற்றும் கலையையும் கண்டறிந்தனர். இந்த கலையையே உலோகத்தில் மட்டுமல்ல நம் உடலிலும் விந்துவைக் கட்டிப்படுத்தி தவத்தில் மேன்மையடையவும் கடைபிடித்தனர். 64 வகையான பாஷாணங்கள், 120 உபரசங்கள், 25 வகை உப்புகள், 1008 வகையான மூலிகைகள் எடுத்து அவற்றில் உள்ள கழிவுகளை நீக்கி அவற்றில் உள்ள சத்துக்களை மட்டும் எடுத்து திரவநிலையில் உள்ள பாதரசத்தோடு சேர்த்து கட்டிப்படுத்தி மணியாக்கி அதைக் கொண்டு பல அற்புதங்களைச் செய்துள்ளனர். எடுத்துக்காட்டாக உருவத்தை மறைக்கும் சொரூபக் குளிகை, நினைத்ததைக் கொடுக்கும் காமதேனுக் குளிகை, துண்டாகிய உடல் உறுப்புகளை நொடியில் ஒன்று சேர்க்கும் சந்தானக் குளிகை, எடுக்க எடுக்கக் குறையாத தன, தானியங்களை அளிக்கும் அட்சயக் குளிகை, வானசஞ்சாரம் செய்ய ககனக் குளிகை, தங்கத்தை உருவாக்கும் சகடு, சப்தபேதி, பரிசபேதி போன்ற குளிகைகள் என்று பல வகையான குளிகைகளைச் செய்து அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். 
நித்ய சுத்தி, தந்த சுத்தி, நேந்திர சுத்தி, கப சுத்தி, குடல் சுத்தி, உடல் சுத்தி என்று எல்லாவகையான சுத்திகளும் செய்தால்தான் காய சித்தி ஏற்படும் என்றும் அதற்கான உபாயம் மூலிகை மட்டுமே என்று கண்டறிந்தவர்கள் சித்தர்கள். இந்த காய சித்தி அடைந்தால்தான் மனதையும், சுவாசத்தையும் அழிவிலிருந்து மீட்டு யோக சித்தியை அடைய முடியும். அதன் பிறகு நினைவுகளை அழிவிலிருந்து மீட்டு நிர்மலமாக்குவதே ஞான சித்தியாகும். இவை எல்லாவற்றையும் கடந்து கர்ம வினை முற்றிலும் அழியப் பெற்றதே சமாதி சித்தியாகும் என்றும் சித்தர்கள் கூறியுள்ளனர். இதற்கு சித்தர்கள் கண்ட வேத இயல் மார்க்கம் இரசவாதம் ஆகும். இரசவாதம் என்றால் வெறும் உலோகத்தை தங்கமாக்குவது மட்டுமே என்று எண்ணி மடிந்தவர்கள் பல பேருண்டு. அதாவது அங்கம் தங்கமானால் வங்கம் தங்கமாகும் என்பார்கள். உடல் சித்தி அடைந்தால் இரசவாதம் சித்தியாகும் என்பது இதன் பொருளல்ல. இரசவாதத்தில் வெற்றியடைந்தால் நாம் காயசித்தி அடையலாம் என்பதே இதன் பொருள். மனிதனின் முதுமையும் அதற்கு பின் உள்ள நிலைகளும் என்ன ? என்றால், நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பனவே. அதாவது உடலில் உள்ள தனிமங்கள் அதாவது உலோகம் மற்றும் தாதுக்களின் உயிர் சக்தி குறைவால் நரை ஏற்படுகிறது. பிராண சக்தியின் நுண்ணிய மின் ஓட்டங்களின் குறைபாடு நாடிகளில் உண்டாவதால் திரை என்கிற கண்பார்வை மங்கிப் போவது நிகழ்கிறது. உயிர் அணுக்களுக்கு தேவையான சக்தி கிடைக்காத நிலையில் வளர் சிதை மாற்றத்தில் சிதைவு மட்டுமே அதிகமாக நிகழ்வதால் முதுமை ஏற்பட்டுவிடுகிறது. முடிவில் உயிர் சக்தியானது முழுவதுமாகக் குன்றிய நிலையில் மரணம் நிகழ்கிறது. இவற்றை எல்லாம் சரி செய்து நரை, திரை, மூப்பு, சாக்காடு ஏற்படாமல் தேகத்தை காத்துக் கொள்ளும் கலையே காய சித்தியாகும். இதற்கு நூறு வகையான கற்பங்களை சிவபெருமானாகிய ஆதி சித்தர் அருளியதாகச் சொல்லப்படுவதுண்டு.
இப்படி விஞ்ஞானத்துக்கும் அப்பால் வேத இயல் விந்தைகளை இந்த மனித இனத்திற்கு எந்த வித சுயநலமும் இன்றி தந்தருளிய சித்தர்களைப் போற்றி வணங்கி அவர்கள் நூல்களை பலமுறை படித்து சரியான பொருள் உணர்ந்து அவர்கள் கூறிய வேத இயல்போடு நம் வாழ்வை இணைத்தோமானால் நாமும் இறவா நிலை அடைந்து இறைநிலை உணர்ந்து, நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்.
சித்தர்கள் வேதத்தை வெறும் குப்பை என்று சொல்கிறார்கள் என்று சிலர் தவறான கருத்துக்களை பரப்பிவிடுகிறார்கள். உண்மையில் ரிஷிகளும், சித்தர்களும்தான் வேதத்தின் இயல்புகளை மனிதனின் இயல்பான, ஆரோக்யமான, ஆனந்தமான ஆன்மிகம் கலந்த வாழ்வுக்கு வகுத்துத் தந்தார்கள். வேதியல் என்றால் விஞ்ஞானத்தில் இரசாயன சம்மந்தமான ஒரு விஷயம் என்றே நாம் கருதுகிறோம்.

Via FB மௌனத்தின் குரல்