பிறப்பதற்கு
முன்பே போராட்டம் ஆரம்பித்து விட்டது. மில்லியன் கணக்கில் உயிர் அணுக்கள்,
அதில் ஒன்று மட்டுமே ஜெயிக்கிறது. இதில் போராடிய அணுக்கள் ஏராளம்.
வேண்டாம் போராட்டம் என்று ஒதுங்கி போன அணுக்கள் வேறு. இயலாமை காரணம்
முடிந்து போன அணுக்களும் உண்டு. வெற்றி
ஒரு அணுவுக்குத்தான் அதுபோல இந்த உலகில் தினமும் கோடானு கோடி போராட்டங்கள்
நடந்து கொண்டே இருக்கின்றன. எல்லாம் அணுக்களின் போராட்டமே. நம் கண்களில்
தென்படுகின்ற, தென்படாத அனைத்து விஷயங்களிலும் இந்தப் போராட்டம் இருந்து
கொண்டே இருக்கிறது. ஆனால் நம் கண்களுக்கு அவை தெரிவதில்லை. தென்படவில்லையே
என்பதற்காக அவைகள் நடக்கவில்லை என்றாகிவிடுமா ? இப்படி பல சூக்குமமான
விஷயங்களை நம் முன்னோர்கள் தவத்தால் பெற்ற அறிவுத்திறனால், ஞானத்தால் கண்டு
சொல்லியிருக்கிறார்கள். இன்று மனிதன் தன் விஞ்ஞான அறிவால் அதில் சில
வற்றைக் கண்டுபிடித்து விட்டான். ஆனால் அதனினும் சூக்குமமான இரகசியங்களைக்
கண்டுபிடிக்க இன்னும் உபகரணங்களை அவன் கண்டுபிடிக்கவில்லை. வரும்
காலங்களில் ஒவ்வொன்றாக அவன் கண்டுபிடிக்கக் கூடும். ஆனால் நம் முன்னோர்கள்
எவ்வாறு இவ்வளவு தெளிவாக இவைகளைப் பற்றி விளக்குகிறதோடு, உறுதியாகச்
சொல்கிறார்கள் ? என்றால் அதைத்தான் மெய்ஞானம் என்கிறார்கள். அதாவது
மெய்யாகிய உண்மையை அடையும் போது எல்லா கண்களும் திறக்கின்றன. எல்லா
வாசல்களும் திறக்கின்றன. நம் உடலில் நாம் பயன்படுத்தாமலேயே போய்விடுகின்ற
எத்தனையோ சக்திகள் இருக்கின்றன. அவை எல்லாம் வேலை செய்தன. மூளையின்
எல்லாபகுதிகளும் முழுமையாக வேலை செய்தன. எனவே அவர்களுக்கு அடைப்பு என்பதோ,
மூடம் என்பதோ, (மூடம் என்றால் மறைப்பு. ஒரு விஷயம் மறைக்கப்பட்டதால், அது
தெரியாதவன் அந்த விஷயத்தைப் பொறுத்த வரை மூடப்பட்டவன். எனவே முட்டாள்.)
கிடையாது. எனவே அவர்களுக்குத் தெரியாத எதுவும் உலகில் இல்லை. ஏனென்றால்
மொத்த உலகமாகவே அவர்கள் ஆகிவிடுகிறார்கள். இன்று விஞ்ஞானிகளின்
கண்டுபிடிப்பில் ஒரு வேதனையான விஷயம் என்னவென்றால், உலகிலேயே சிறந்த
அறிவாளியான ஒருவர் கூட வெறும் 6% மூளைத் திறனை தன் வாழ்நாளில்
பயன்படுத்துகிறார் என்பதுதான். இன்று கல்வி என்று நீங்கள் எடுத்துக்
கொண்டீர்கள் என்றால் ஒரு மனிதன் சிறந்த மேதையாக விளங்க அவனை ஒரு
குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் அவன் மூளையில் பதியவைத்து, அதில் அவனை
பெரிய மேதை ஆக்கி விடுகிறார்கள். எல்லாத்துறைகளும் அப்படித்தான். ஒரு
துறையில் வல்லுனருக்கு மற்ற துறையைப் கற்றி அனா, ஆவன்னா கூடத் தெரியாது.
நம் முன்னோர்கள் கலாச்சாரம் இதை விட மேம் பட்டது. எவ்வாறெனில் இளம் வயதில்
குரு குல வாசத்தில் நுழைகிற மாணவன் ஆயக்கலைகள் 64 லும் தேர்ச்சி பெற்றுதான்
வெளியே வருவான் அதில் இல்லாத விஷயங்களே உலகில் கிடையாது. எனவே அவர்களின்
மூளையின் பயன்பாடு அதிகமாக இருந்தது. அதனாலேயே அவர்களுக்கு பல சூக்குமங்களை
உணர முடிந்தது. உதாரணம் காட்ட இப்போது இருப்பது போல உபகரணங்களோ, மற்ற
பொருள்களோ இல்லாத காரணத்தால், புரிந்து கொள்ளத்தக்க வகையில் கதைகளாக்கி
மனதில் பதிய வைத்தார்கள். உதாரணமாக, காந்தம், மின்சாரம் மற்றும் ஏனைய
விஞ்ஞான வளர்ச்சியினால் உருவான உபகரணங்கள். பொதுவாகச் சொன்னால் விஞ்ஞானம்
என்பது அறிவால் புற விஷயங்களின் உள்ளே நடக்கும் இயக்கங்களை ஆராய்வது.
எனவேதான் அது அறிவியல். ஆனால் மெய்ஞானம் என்பது அந்த அறிவாக இருப்பது எது
என்று அறிந்து அதை அடைவது. எனவே மெய்ஞானம் இந்த பிரபஞ்சம் என்றால்,
விஞ்ஞானம் அதில் ஒரு கடுகுதான்.
Via FB மௌனத்தின்
குரல்