மனம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:32 | Best Blogger Tips
Photo: சில விஷயங்களை நம் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் அல்லது விரும்பாது. ஏனென்றால் அதற்கு மாறுபாடான கொள்கைகளை உடையவர்களோடு நாம் பிறந்ததிலிருந்து வாழ்ந்திருப்போம் அல்லது அத்தகைய கருத்துக்கள் நமக்குக் கற்பிக்கப்பட்டு நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கும். எனவே நமக்குக் கற்றுத் தரப்பட்ட விஷயத்துக்கு முரணான அல்லது கற்றுத்தரப்படாத விஷயங்களை நம் மனம் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. உதாரணமாக நாம் தீவிரவாதிகள் என்று சொல்கிறவர்களைக் கேட்டுப் பாருங்கள் அவர்கள் தரப்பிலிருந்து மிக உறுதியான நியாயம் ஒன்றையோ பலவற்றையோ சொல்வார்கள். ஆனால் அந்த நியாயத்தை அடைய அவர்கள் வழிமுறைகள் தவறாக இருக்கிறதே அல்லாமல் அவர்களிடத்திலிருந்து பார்க்கும் போது அவர்கள் கூறும் நியாயம் சரியாகவே இருக்கும். அது போல நாம் இங்கே சில கருத்துக்களை முன் வைக்கிறோம். அதைப் பாராட்டும் நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும் வசைபாடும் நண்பர்கள் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பார்கள். அது அவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது நமது கருத்துக்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. சிலர் கேள்விகளாகக் கேட்பார்கள். நாமும் பதில் சொல்லிவிடுகிறோம். சிலர் கேள்வியெல்லாம் கேட்பதில்லை. மூடனே என்றும், பைத்தியம் என்றும், இது போன்ற பதிவுகளையெல்லாம் நிறுத்திவிடு என்றும் பலவாறாக வசைபாடுகிறார்கள். இசைபாடும் போது மகிழ்கிற நாம் வசைபாடும் போது கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். வசை மொழி கேட்காமல் வெற்றியடைந்தவர்கள் யாருமில்லை. ஆனாலும் கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் இவர்கள் வசைபாடுவதைக் கேட்டு செலவழிப்பதை தவிர்ப்பதற்காக அவர்களைவிட்டு விலகவே முயற்சிக்கிறேன். ஒரு வகையில் அது தவறுதான். நம் கருத்துகள் அவர்கள் மனதைப் புண்படுத்துவதால் தானே வசைபாடுகிறார்கள். வசை மொழிகளைக் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும், ஆனால் அந்த வசை மொழிகள் நம் எண்ணப் போக்கை மாற்றி சிந்தனையைச் சிதறடித்து விடுவதால் அவற்றைத் தவிர்க்கவே விருப்பம் மேலோங்குகிறது. நாம் இன்னும் பக்குவப்படவில்லை என்பது நமக்கே புரிகிறது. என்ன செய்ய இதில் வீணாகும் நேரத்தையும் சக்தியையும் விருப்பமுள்ளவர்களுக்கு நல்ல பகிர்வுகளைத் தருவதற்கு செலவிடலாம். எனவே வசைபாடும் நண்பர்களை Block செய்து விடுகிறேன். எனவே அந்த நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.
சில விஷயங்களை நம் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் அல்லது விரும்பாது. ஏனென்றால் அதற்கு மாறுபாடான கொள்கைகளை உடையவர்களோடு நாம் பிறந்ததிலிருந்து வாழ்ந்திருப்போம் அல்லது அத்தகைய கருத்துக்கள் நமக்குக் கற்பிக்கப்பட்டு நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டிருக்கும். எனவே நமக்குக் கற்றுத் தரப்பட்ட விஷயத்துக்கு முரணான அல்லது கற்றுத்தரப்படாத விஷயங்களை நம் மனம் எளிதில் ஏற்றுக் கொள்ளாது. உதாரணமாக நாம் தீவிரவாதிகள் என்று சொல்கிறவர்களைக் கேட்டுப் பாருங்கள் அவர்கள் தரப்பிலிருந்து மிக உறுதியான நியாயம் ஒன்றையோ பலவற்றையோ சொல்வார்கள். ஆனால் அந்த நியாயத்தை அடைய அவர்கள் வழிமுறைகள் தவறாக இருக்கிறதே அல்லாமல் அவர்களிடத்திலிருந்து பார்க்கும் போது அவர்கள் கூறும் நியாயம் சரியாகவே இருக்கும். அது போல நாம் இங்கே சில கருத்துக்களை முன் வைக்கிறோம். அதைப் பாராட்டும் நண்பர்கள் நிறைய பேர் இருந்தாலும் வசைபாடும் நண்பர்கள் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இருப்பார்கள். அது அவர்கள் நிலையில் இருந்து பார்க்கும் போது நமது கருத்துக்கள் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. சிலர் கேள்விகளாகக் கேட்பார்கள். நாமும் பதில் சொல்லிவிடுகிறோம். சிலர் கேள்வியெல்லாம் கேட்பதில்லை. மூடனே என்றும், பைத்தியம் என்றும், இது போன்ற பதிவுகளையெல்லாம் நிறுத்திவிடு என்றும் பலவாறாக வசைபாடுகிறார்கள். இசைபாடும் போது மகிழ்கிற நாம் வசைபாடும் போது கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும். வசை மொழி கேட்காமல் வெற்றியடைந்தவர்கள் யாருமில்லை. ஆனாலும் கிடைக்கிற கொஞ்ச நேரத்தையும் இவர்கள் வசைபாடுவதைக் கேட்டு செலவழிப்பதை தவிர்ப்பதற்காக அவர்களைவிட்டு விலகவே முயற்சிக்கிறேன். ஒரு வகையில் அது தவறுதான். நம் கருத்துகள் அவர்கள் மனதைப் புண்படுத்துவதால் தானே வசைபாடுகிறார்கள். வசை மொழிகளைக் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும், ஆனால் அந்த வசை மொழிகள் நம் எண்ணப் போக்கை மாற்றி சிந்தனையைச் சிதறடித்து விடுவதால் அவற்றைத் தவிர்க்கவே விருப்பம் மேலோங்குகிறது. நாம் இன்னும் பக்குவப்படவில்லை என்பது நமக்கே புரிகிறது. என்ன செய்ய இதில் வீணாகும் நேரத்தையும் சக்தியையும் விருப்பமுள்ளவர்களுக்கு நல்ல பகிர்வுகளைத் தருவதற்கு செலவிடலாம். எனவே வசைபாடும் நண்பர்களை Block செய்து விடுகிறேன். எனவே அந்த நண்பர்கள் என்னை மன்னிப்பார்களாக.
 
Via FB மௌனத்தின் குரல்