தமிழ் மொழி !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:11 | Best Blogger Tips
Photo: எது முந்தியது ? எதிலிருந்து எது வந்தது ? என்றெல்லாம் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த சிவ பெருமானே வந்து தமிழ்தான் உலகம் தோன்றிய போது தோன்றிய முதல் மொழி என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இருக்கக் கூடும். ஏனென்றால் சிவன்தான் ஆதி என்பதை ஏற்றுக் கொண்டால் தானே இதனை ஏற்றுக் கொள்ள முடியும். தமிழை விட சமஸ்கிருதமே அதிர்வுகள் கொண்ட மொழி. எனவே எங்கள் ஆசிரமத்தில் நாங்கள் உணவுக்கூடத்தில் கூட சமஸ்கிருத ஸ்லோகங்களைத்தான் பாடி விட்டு உணவு உட்கொள்கிறோம் என்று சொல்லி, வேறு மாகாணத்தில் இருந்து தமிழ் நாட்டுக்குள் வந்து அமர்ந்து கொண்டு அரைகுறைத் தமிழில் ஆன்மீகம் பேசுகின்ற குருநாதர்கள் வாழும் காலம் இது. அவர்கள் தமிழனை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழைப் பற்றி அவர்கள் ஏதும் அறியவில்லை என்பதே உண்மை. உலகில் முதன் முதலில் ஆதிமொழி தோன்றிய இடம் நம் குமரிக்கு தெற்கே இருந்த லெமூரிய கண்டம் ஆகும். அதில்தான் நம் சித்தர்கள் வாழ்ந்து வந்தார்கள். அது கடல் கொண்ட போது நிறைய சுவடிகள் கடலுக்குள் மறைந்து விட்டன என்றும், கடலில் மிதந்து கரை ஒதுங்கிய ஒரு சில ஏடுகளை அகத்தியர் எடுத்து பத்திரப் படுத்தி தொகுத்தளித்தார் என்று அவர்தம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. ப்ராகிருதி என்றால் இயற்கை. அந்த ப்ராகிருதி உண்டாகும் போது எழுந்த ப்ரணவ சப்தமே ப்ராகிருதம் எனப்பட்டது. அந்த அண்டத்தின் சப்தம் நம் பிண்டத்தில் சக்கரங்களின் ஒவ்வொரு இதழ்களிலும் ஒலிப்பதை ஞானத்தால் கண்டு, அவை 51 அட்சரங்கள் என்பதையும் கண்டு அதில் இருந்து மொழியை வடிவமைத்தார்கள் நம் சித்தர்கள். தமிழ் மூலக்ரந்தம் அ முதல் க்ஷ வரை 51 அட்சரங்களைக் கொண்டது. அதில் உயிர் 16, மெய் 35ம் ஆக 51 அட்சரங்களாய், இறைவனின் மூல மொழியாய், மந்திர மொழியாய் திகழ்கிறது. பாரதத்தின் அனைந்து மொழிகளுக்கும் இந்த க்ரந்தமே தாய். எல்லா மொழிகளையும் தாண்டி கடைசியாக மிஞ்சி ஆராய்ச்சியில் இருப்பது சமஸ்கிருதமும், தமிழும்தான். ஆனால் தமிழ் பல மொழிகளாகப் பிரிந்து கடைசியில் தமிழ் பேசும் இடத்தில் மட்டும் தொல் காப்பியர் இலக்கணமாக தொகுத்தளித்த தமிழாக வாழ்ந்து வருகிறது. ஆனால் வடக்கே உள்ள ரிஷிகள் சமஸ்க்ருதத்தில் வேதங்களைச் செய்த காரணத்தினால், அதுதான் பழமையானது என்றும், இறைவனுக்கு உகந்தது என்றும் ஒரு மாயாவாதம் பரவிவிட்டது. உண்மை எம் ஈசன் சிவனுக்கு மட்டுமே தெரியும். மேலும் இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் சித்தர் பெருமக்களுக்கும் தெரியும். கலியுகத்திற்கு பிறகு அவர்கள் வரும் போது மீண்டும் செழிக்கும் எம் தமிழ். 
தமிழைப் போலவே சித்தர்களின் காலத்தைக் குறித்த சர்ச்சையும் முடிவு இல்லாதது. நமது திருமூல நாயனார் தலைச்சங்க காலத்தவர் என்று சொல்கிறார்கள். அவர் அதற்கும் முற்பட்டவராக இருந்திருக்கலாமே அல்லாது, அதற்கு பிற்பட்டவரல்ல என்பது தெளிவு. 
''என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே.''
மேலும்,
''சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே. ''
''அரண் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே''
என்று சொல்கிறார். அதாவது திருமூலர் அகத்தியரைக் காணவே பூமிக்கு வந்தார். அகத்தியரோடு சேர்ந்து சிவ ஆகமங்களைச் செய்து பூமியில் பரப்பவே வந்துள்ளார் என்பது இப்பாடல்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். இது வேத காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் காலத்திற்கு முன்பு நடந்தது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த தமிழ் குழந்தைகள் பேசும் போதோ, கிராமத்துப் பாமர மக்கள் பேசும் போதோ கொச்சைத் தமிழாகி விடுகிறது. அது ரசிப்பதற்கு மிகவும் உகந்தது. இந்த கொச்சைத் தமிழை பாமர மக்கள் பேசும் போது அடுக்குச் சொற்களாகப் பேசுவார்கள். அதாவது பல்லு கில்லு, காப்பி கீப்பி, வீடு கீடு, மழை கிழை என்று வரும். இதில் முதல் சொல்லுக்கு பொருள் இருக்கும். இரண்டாவது எதுகையாக வரும் ககர வர்க்கத்தில் வரும் சொற்களுக்கு பொருள் இருக்காது. மற்றொரு வகை உண்டு. இதில் எதுகை ககர வர்க்கத்தில் வராது. அதாவது, வம்பு தும்பு, தக்கு புக்கு, தண்டா முண்டா, காச்சு பீச்சு இப்படி வரும். இதையே பாடல்களிலும், உரையிலும் வேறுமாதிரியாகக் கையாளுவார்கள். அதாவது வாட்ட சாட்டம், திட்ட வட்டம், கொஞ்ச நஞ்சம், பாக்கி சாக்கி, சால மாலம் என்று . எதுகை மோனை என்பது பாட்டுக்கு மட்டுமல்ல பேச்சுக்கும் இனிமை சேர்க்கும் என்று பாமர மக்கள் கருதியிருப்பார்கள் போலும். இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த எதுகை மோனை என்கிற பதத்தைக் கூட, எகனைக்கு மொகனை என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி பாமர மக்கள் பேசும் ஒரு அடுக்குச் சொல் நன்மை தின்மை என்பது. நன்மைக்கு மாறானது தீமை. இது இலக்கியம் சொல்வ து. ஆனால் பாமரனுக்கு இதில் எதுகை நயம் இல்லையே என்று தோன்றியதன் விளைவு, நன்மை தின்மை. ஆனால் இந்த வார்த்தையையே இலக்கியவாதியான கம்பரும் எடுத்து கையாண்டிருக்கிறார் என்றால், அவர் தமிழை மட்டுமல் பாமரத் தமிழனையும் நேசித்திருக்கிறார் என்பது புரியும். ''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே.''
எது முந்தியது ? எதிலிருந்து எது வந்தது ? என்றெல்லாம் சர்ச்சைகள் இருந்து கொண்டே இருக்கும். அந்த சிவ பெருமானே வந்து தமிழ்தான் உலகம் தோன்றிய போது தோன்றிய முதல் மொழி என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் இருக்கக் கூடும். ஏனென்றால் சிவன்தான் ஆதி என்பதை ஏற்றுக் கொண்டால் தானே இதனை ஏற்றுக் கொள்ள முடியும். தமிழை விட சமஸ்கிருதமே அதிர்வுகள் கொண்ட மொழி. எனவே எங்கள் ஆசிரமத்தில் நாங்கள் உணவுக்கூடத்தில் கூட சமஸ்கிருத ஸ்லோகங்களைத்தான் பாடி விட்டு உணவு உட்கொள்கிறோம் என்று சொல்லி, வேறு மாகாணத்தில் இருந்து தமிழ் நாட்டுக்குள் வந்து அமர்ந்து கொண்டு அரைகுறைத் தமிழில் ஆன்மீகம் பேசுகின்ற குருநாதர்கள் வாழும் காலம் இது. அவர்கள் தமிழனை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழைப் பற்றி அவர்கள் ஏதும் அறியவில்லை என்பதே உண்மை. உலகில் முதன் முதலில் ஆதிமொழி தோன்றிய இடம் நம் குமரிக்கு தெற்கே இருந்த லெமூரிய கண்டம் ஆகும். அதில்தான் நம் சித்தர்கள் வாழ்ந்து வந்தார்கள். அது கடல் கொண்ட போது நிறைய சுவடிகள் கடலுக்குள் மறைந்து விட்டன என்றும், கடலில் மிதந்து கரை ஒதுங்கிய ஒரு சில ஏடுகளை அகத்தியர் எடுத்து பத்திரப் படுத்தி தொகுத்தளித்தார் என்று அவர்தம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. ப்ராகிருதி என்றால் இயற்கை. அந்த ப்ராகிருதி உண்டாகும் போது எழுந்த ப்ரணவ சப்தமே ப்ராகிருதம் எனப்பட்டது. அந்த அண்டத்தின் சப்தம் நம் பிண்டத்தில் சக்கரங்களின் ஒவ்வொரு இதழ்களிலும் ஒலிப்பதை ஞானத்தால் கண்டு, அவை 51 அட்சரங்கள் என்பதையும் கண்டு அதில் இருந்து மொழியை வடிவமைத்தார்கள் நம் சித்தர்கள். தமிழ் மூலக்ரந்தம் அ முதல் க்ஷ வரை 51 அட்சரங்களைக் கொண்டது. அதில் உயிர் 16, மெய் 35ம் ஆக 51 அட்சரங்களாய், இறைவனின் மூல மொழியாய், மந்திர மொழியாய் திகழ்கிறது. பாரதத்தின் அனைந்து மொழிகளுக்கும் இந்த க்ரந்தமே தாய். எல்லா மொழிகளையும் தாண்டி கடைசியாக மிஞ்சி ஆராய்ச்சியில் இருப்பது சமஸ்கிருதமும், தமிழும்தான். ஆனால் தமிழ் பல மொழிகளாகப் பிரிந்து கடைசியில் தமிழ் பேசும் இடத்தில் மட்டும் தொல் காப்பியர் இலக்கணமாக தொகுத்தளித்த தமிழாக வாழ்ந்து வருகிறது. ஆனால் வடக்கே உள்ள ரிஷிகள் சமஸ்க்ருதத்தில் வேதங்களைச் செய்த காரணத்தினால், அதுதான் பழமையானது என்றும், இறைவனுக்கு உகந்தது என்றும் ஒரு மாயாவாதம் பரவிவிட்டது. உண்மை எம் ஈசன் சிவனுக்கு மட்டுமே தெரியும். மேலும் இமயத்தில் நிஷ்டையில் இருக்கும் சித்தர் பெருமக்களுக்கும் தெரியும். கலியுகத்திற்கு பிறகு அவர்கள் வரும் போது மீண்டும் செழிக்கும் எம் தமிழ்.
தமிழைப் போலவே சித்தர்களின் காலத்தைக் குறித்த சர்ச்சையும் முடிவு இல்லாதது. நமது திருமூல நாயனார் தலைச்சங்க காலத்தவர் என்று சொல்கிறார்கள். அவர் அதற்கும் முற்பட்டவராக இருந்திருக்கலாமே அல்லாது, அதற்கு பிற்பட்டவரல்ல என்பது தெளிவு.
''என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே.''
மேலும்,
''சீலாங்க வேதத்தை செப்ப வந்தேனே. ''
''அரண் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே''
என்று சொல்கிறார். அதாவது திருமூலர் அகத்தியரைக் காணவே பூமிக்கு வந்தார். அகத்தியரோடு சேர்ந்து சிவ ஆகமங்களைச் செய்து பூமியில் பரப்பவே வந்துள்ளார் என்பது இப்பாடல்களின் மூலம் புரிந்து கொள்ளலாம். இது வேத காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும் காலத்திற்கு முன்பு நடந்தது.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த தமிழ் குழந்தைகள் பேசும் போதோ, கிராமத்துப் பாமர மக்கள் பேசும் போதோ கொச்சைத் தமிழாகி விடுகிறது. அது ரசிப்பதற்கு மிகவும் உகந்தது. இந்த கொச்சைத் தமிழை பாமர மக்கள் பேசும் போது அடுக்குச் சொற்களாகப் பேசுவார்கள். அதாவது பல்லு கில்லு, காப்பி கீப்பி, வீடு கீடு, மழை கிழை என்று வரும். இதில் முதல் சொல்லுக்கு பொருள் இருக்கும். இரண்டாவது எதுகையாக வரும் ககர வர்க்கத்தில் வரும் சொற்களுக்கு பொருள் இருக்காது. மற்றொரு வகை உண்டு. இதில் எதுகை ககர வர்க்கத்தில் வராது. அதாவது, வம்பு தும்பு, தக்கு புக்கு, தண்டா முண்டா, காச்சு பீச்சு இப்படி வரும். இதையே பாடல்களிலும், உரையிலும் வேறுமாதிரியாகக் கையாளுவார்கள். அதாவது வாட்ட சாட்டம், திட்ட வட்டம், கொஞ்ச நஞ்சம், பாக்கி சாக்கி, சால மாலம் என்று . எதுகை மோனை என்பது பாட்டுக்கு மட்டுமல்ல பேச்சுக்கும் இனிமை சேர்க்கும் என்று பாமர மக்கள் கருதியிருப்பார்கள் போலும். இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த எதுகை மோனை என்கிற பதத்தைக் கூட, எகனைக்கு மொகனை என்று ஆக்கிவிட்டார்கள். இப்படி பாமர மக்கள் பேசும் ஒரு அடுக்குச் சொல் நன்மை தின்மை என்பது. நன்மைக்கு மாறானது தீமை. இது இலக்கியம் சொல்வ து. ஆனால் பாமரனுக்கு இதில் எதுகை நயம் இல்லையே என்று தோன்றியதன் விளைவு, நன்மை தின்மை. ஆனால் இந்த வார்த்தையையே இலக்கியவாதியான கம்பரும் எடுத்து கையாண்டிருக்கிறார் என்றால், அவர் தமிழை மட்டுமல் பாமரத் தமிழனையும் நேசித்திருக்கிறார் என்பது புரியும். ''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே.''
  1. Via FB மௌனத்தின் குரல்