இந்திய அரசியலமைப்பு 1

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:37 | Best Blogger Tips

இந்திய அரசியலமைப்பு (இந்தி; भारतीय़ संविधान ) இந்தியாவின் தலைமைச் சட்டத் தொகுப்பாகும். இந்தியாவின் அடிப்படை அரசியல் கொள்கைகளை, கட்டமைப்பு, அதிகாரங்கள் மற்றும் அதன் கடமைகளை அதன் அரசுக்கும் அதன்மூலம் அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்குகின்ற வகையில் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தால் நவம்பர் 261949ல்அறிமுகப்படுத்தப்பட்டு சனவரி 261950 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இதுகாரும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக, தன்னாட்சி கொண்ட நாடாக, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா கடைப்பிடிக்கும் மூன்று கொள்கைகளாக பொதுவுடமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது.
இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் முன்னுரை (preamble), இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் (salient features) 'அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.

[தொகு]பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.
பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.
பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.
பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 5 ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.
பகுதி 6 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.
பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.
பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.
பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.
பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.
பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.
பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.
பகுதி 12( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.
பகுதி 13( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14 (உட்பிரிவு 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.
பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.
பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.
பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.
பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)
பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)
பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.
பகுதி 21 (உட்பிரிவு 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.
பகுதி 22 (உட்பிரிவு 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS.

Thanks & Copy from classle.net