நாகரிகங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும், மொழிகளுக்கும் பிறப்பிடமான தமிழ் ! தமிழன்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:07 | Best Blogger Tips
Photo: தன்னிடமிருந்துதான் கஸ்தூரியின் மனம் பரவுகிறது என்று அறியாமலேயே கஸ்தூரி மான் வாழ்ந்திருக்குமாம். அதைப் போலவே ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத்  தமிழனும் தன் பெருமைகளை, தன் இனத்துக்கான தனிச் சிறப்பை உணராமலும், உணர்ந்தாலும் அதை பிறரிடம் துணிந்து கூறாமலும் அடங்கியே இருந்து விட்டான். உலகிலுள்ள அனைத்து நாகரிகங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும், மொழிகளுக்கும் பிறப்பிடமான தமிழ் நாகரிகத்தின் பிள்ளைகள் இன்று கடைக் கோடித் தமிழனாகத் தத்தளிப்பும், தவிப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாதியற்ற ஒரு இனமாகத் தமிழினம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. அப்படி எல்லாம் கிடையாது என்று மார்தட்டிக்கொண்டு யாரேனும் வந்தால் அவன் நிச்சயமாகத் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ் நாடு இந்தியாவைச் சேர்ந்ததுதானா ? என்கிற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. ஈழத்தில் தமிழன் நிலையும், தமிழக மீனவர்களின் நிலையும், தஞ்சை விவசாயிகளின் நிலைமையையும் பார்க்கிற போது இந்த உண்மை புலனாகும். இவ்வளவு பெருமை வாய்ந்த இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம், அவனுடைய நல்லபண்புகள்தான் என்று சொன்னால் அது தவறில்லை. விருந்தோம்பல், தன்னடக்கம், போதும் என்கிற பரந்த நோக்கு, அறிவின் கூர்மை, பரந்த மனப்பான்மை, நன்றி மறவாமை போன்ற எல்லா பண்புகளிலும் தமிழனுக்கு ஈடு சொல்ல உலகில் யாருமில்லை. ஆனால் இவையே அவனுக்கு, அவனுடைய இனத்தின் மேம்பாடுக்குத் தடையாகப் போய்விட்டது என்பதை அவன் அறியாமலேயே போய்விட்டான். இதை நான் சொல்லவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தமிழனின் இத்தகைய உயர்ந்த பண்புகள் குறித்துப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. மற்ற பிற மாகாணங்களிலும், ஏன் உலகெங்கிலும் தோன்றிய சான்றோர்களையும், ஞானிகளையும் பற்றி முழங்கிய தமிழன் தன் இனத்தில் பிறந்த பெரியோர்களைப் பற்றி பேசாமல் தன்னடக்கமாகவே இருந்து விட்டான். அதையும் மீறி சில தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் பரவியுள்ளது விந்தைதான். பாரதியை விட்டு விடுவான் தாகூரைப் போற்றிக் கொண்டிருப்பான். இராமலிங்க அடிகளாரை மறந்து விடுவான் ராம கிருஷ்ணரைப்பற்றி பாடிக் கொண்டிருப்பான். வான்மீகியைப்பற்றி முழங்குவான் கம்பனை கை விட்டுவிடுவான். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழனின் பெருமை குடத்திலிட்ட விளக்காகவே இருந்து விட்டது. இதையெல்லாம் மீறி தமிழனின் பெருமையை ஒருசிலர் உணர்ந்து பாராட்டிப் பேசியிருப்பது நம் புண்ணிய பலனே. அதில் சுவாமி விவேகானந்தர் சொன்ன சில கருத்துக்களை சமீபத்தில் படிக்க நேர்ந்த போது கண்ணில் நீர் துளிர்த்தது. மனதுக்குள் பெருமையாகவும் இருந்தது.
''இந்திய நாட்டின் பிற பகுதிகளில் தோன்றிய பெரியோர்களைப் பற்றி வடநாட்டினர் அறியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. முகமதியர் ஆட்சி காலத்தில் சைதன்யர் நீங்கலாக ஏனைய ஞானிகள் அனைவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்களே. தென்னாட்டு அறிவுதான் தற்போது உண்மையில் இந்தியாவில் அரசு செலுத்துகிறது. இந்த சைதன்யரும் கூட தென்னிந்தியாவில் உள்ள ஒரு பிரிவான மத்வ வகுப்பைச் சார்ந்தவரே.'' என்கிறார். மேலும் ஆரியரும் தமிழரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறுவது......
''வேதங்களில் காணும் தஸ்யுக்களது அழகற்ற உடல் உறுப்பு அமைப்புகளை , பழிப்பதற்காகப் பயிலப்பட்டிருக்கும் அடைமொழிகளில் ஒன்று கூட, பெருமை வாய்ந்த தமிழ் இனத்துக்குப் பொருந்தவே பொருந்தாது.'' - ஞான தீபம் 8. 400.
''ஆரியர்களைப்பற்றி கூறப்படுகின்ற கொள்கையிலே இருக்கின்ற குற்றங்களையும், அந்தக் கொள்கையால் விளைந்துள்ள தீமைகளையும் அமைதியோடு அறவே நீக்க வேண்டியது தென் இந்தியாவின் நலத்துக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அவ்வாறு நீக்கி ஆரிய இனமே தோன்றுவதற்குக் காரணமான மிகச் சிறந்த தாய் இனமான புகழ் படைத்த தமிழர்களின் பழம் பெருமையை அறிவதால் விளையும் நியாயமான நன்மதிப்பை  ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.'' - ஞானதீபம் 8. 403.
'' எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாய் விளங்கிய பெரிய நாகரிகத்தின் இரத்தம் நம் உடம்பில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் பெருமைப்படுகிறோம். அந்த தமிழ் நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆரியர்களும், செமிட்டியர்களும் வெறும் குழந்தைகளே.'' - ஞானதீபம் 8. 405.
வங்க தேசத்தில் பிறந்த ஒரு ஞானி தமிழ் இனத்தின் பெருமையையும், தொன்மையையும் மேற்கண்டவாறு போற்றிப் பேசியிருக்கிறார். தமிழ் இனம் ஆரியர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகங்களுக்கெல்லாம் தாய் இனம் என்கிறார்.
 தாய் இனம் இன்று முதியோர் இல்லத்தில் கிடந்து வாடுவது நாம் காண்பதுதானே. நம் பெருமையை நாமே உணர்ந்து எழும் நாள் என்று வருமோ ? இந்த அவல நிலை அகல வேண்டுமாயின் தமிழ் மக்கள் தம்மிடையே தோன்றிய பெரியோர்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். போற்ற வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதிப் பித்து, சமய இறுமாப்பு, மொழிப் பித்து முதலியன சமய நிறுவனங்களிலும், இலக்கியத் துறைகளிலும் ஊடாடி அரசியல் வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும், சமுதாய வாழ்விலும் தீய விளைவுகளை விளைவித்து வருகின்றன. சமய நிறுவனங்களிலே, துறவற நிறுவனங்களிலே சாதியத் தலைமை; இலக்கிய மேடைகளிலே சாதிய உணர்வு ஆகியன இலைமறை காய் போல், தமிழ் நாட்டில் சமயங்களின் பெயராலும், மொழியின் பெயராலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவை அகலாத வரை தமிழனுக்கு விமோசனமே இல்லை. தகுதி இருந்தும், ஆற்றல் இருந்தும் இவைகளால் தலமைப் பதவி அவனை விட்டு நழுவி விடுகிறது.தன்னிடமிருந்துதான் கஸ்தூரியின் மனம் பரவுகிறது என்று அறியாமலேயே கஸ்தூரி மான் வாழ்ந்திருக்குமாம். அதைப் போலவே ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழனும் தன் பெருமைகளை, தன் இனத்துக்கான தனிச் சிறப்பை உணராமலும், உணர்ந்தாலும் அதை பிறரிடம் துணிந்து கூறாமலும் அடங்கியே இருந்து விட்டான். உலகிலுள்ள அனைத்து நாகரிகங்களுக்கும், கலாச்சாரங்களுக்கும், மொழிகளுக்கும் பிறப்பிடமான தமிழ் நாகரிகத்தின் பிள்ளைகள் இன்று கடைக் கோடித் தமிழனாகத் தத்தளிப்பும், தவிப்புமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாதியற்ற ஒரு இனமாகத் தமிழினம் இன்று வீழ்ந்து கிடக்கிறது. அப்படி எல்லாம் கிடையாது என்று மார்தட்டிக்கொண்டு யாரேனும் வந்தால் அவன் நிச்சயமாகத் தமிழனாக இருக்க வாய்ப்பில்லை. தமிழ் நாடு இந்தியாவைச் சேர்ந்ததுதானா ? என்கிற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறது. ஈழத்தில் தமிழன் நிலையும், தமிழக மீனவர்களின் நிலையும், தஞ்சை விவசாயிகளின் நிலைமையையும் பார்க்கிற போது இந்த உண்மை புலனாகும். இவ்வளவு பெருமை வாய்ந்த இனத்தின் வீழ்ச்சிக்குக் காரணம், அவனுடைய நல்லபண்புகள்தான் என்று சொன்னால் அது தவறில்லை. விருந்தோம்பல், தன்னடக்கம், போதும் என்கிற பரந்த நோக்கு, அறிவின் கூர்மை, பரந்த மனப்பான்மை, நன்றி மறவாமை போன்ற எல்லா பண்புகளிலும் தமிழனுக்கு ஈடு சொல்ல உலகில் யாருமில்லை. ஆனால் இவையே அவனுக்கு, அவனுடைய இனத்தின் மேம்பாடுக்குத் தடையாகப் போய்விட்டது என்பதை அவன் அறியாமலேயே போய்விட்டான். இதை நான் சொல்லவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தமிழனின் இத்தகைய உயர்ந்த பண்புகள் குறித்துப் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. மற்ற பிற மாகாணங்களிலும், ஏன் உலகெங்கிலும் தோன்றிய சான்றோர்களையும், ஞானிகளையும் பற்றி முழங்கிய தமிழன் தன் இனத்தில் பிறந்த பெரியோர்களைப் பற்றி பேசாமல் தன்னடக்கமாகவே இருந்து விட்டான். அதையும் மீறி சில தமிழர்களின் புகழ் உலகெங்கிலும் பரவியுள்ளது விந்தைதான். பாரதியை விட்டு விடுவான் தாகூரைப் போற்றிக் கொண்டிருப்பான். இராமலிங்க அடிகளாரை மறந்து விடுவான் ராம கிருஷ்ணரைப்பற்றி பாடிக் கொண்டிருப்பான். வான்மீகியைப்பற்றி முழங்குவான் கம்பனை கை விட்டுவிடுவான். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். தமிழனின் பெருமை குடத்திலிட்ட விளக்காகவே இருந்து விட்டது. இதையெல்லாம் மீறி தமிழனின் பெருமையை ஒருசிலர் உணர்ந்து பாராட்டிப் பேசியிருப்பது நம் புண்ணிய பலனே. அதில் சுவாமி விவேகானந்தர் சொன்ன சில கருத்துக்களை சமீபத்தில் படிக்க நேர்ந்த போது கண்ணில் நீர் துளிர்த்தது. மனதுக்குள் பெருமையாகவும் இருந்தது.
''இந்திய நாட்டின் பிற பகுதிகளில் தோன்றிய பெரியோர்களைப் பற்றி வடநாட்டினர் அறியாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. முகமதியர் ஆட்சி காலத்தில் சைதன்யர் நீங்கலாக ஏனைய ஞானிகள் அனைவரும் தென்னிந்தியாவில் தோன்றியவர்களே. தென்னாட்டு அறிவுதான் தற்போது உண்மையில் இந்தியாவில் அரசு செலுத்துகிறது. இந்த சைதன்யரும் கூட தென்னிந்தியாவில் உள்ள ஒரு பிரிவான மத்வ வகுப்பைச் சார்ந்தவரே.'' என்கிறார். மேலும் ஆரியரும் தமிழரும் என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறுவது......
''வேதங்களில் காணும் தஸ்யுக்களது அழகற்ற உடல் உறுப்பு அமைப்புகளை , பழிப்பதற்காகப் பயிலப்பட்டிருக்கும் அடைமொழிகளில் ஒன்று கூட, பெருமை வாய்ந்த தமிழ் இனத்துக்குப் பொருந்தவே பொருந்தாது.'' - ஞான தீபம் 8. 400.
''ஆரியர்களைப்பற்றி கூறப்படுகின்ற கொள்கையிலே இருக்கின்ற குற்றங்களையும், அந்தக் கொள்கையால் விளைந்துள்ள தீமைகளையும் அமைதியோடு அறவே நீக்க வேண்டியது தென் இந்தியாவின் நலத்துக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. அவ்வாறு நீக்கி ஆரிய இனமே தோன்றுவதற்குக் காரணமான மிகச் சிறந்த தாய் இனமான புகழ் படைத்த தமிழர்களின் பழம் பெருமையை அறிவதால் விளையும் நியாயமான நன்மதிப்பை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகிறது.'' - ஞானதீபம் 8. 403.
'' எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாய் விளங்கிய பெரிய நாகரிகத்தின் இரத்தம் நம் உடம்பில் ஓடிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் பெருமைப்படுகிறோம். அந்த தமிழ் நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆரியர்களும், செமிட்டியர்களும் வெறும் குழந்தைகளே.'' - ஞானதீபம் 8. 405.
வங்க தேசத்தில் பிறந்த ஒரு ஞானி தமிழ் இனத்தின் பெருமையையும், தொன்மையையும் மேற்கண்டவாறு போற்றிப் பேசியிருக்கிறார். தமிழ் இனம் ஆரியர்களுக்கு மட்டுமல்ல உலக நாகரிகங்களுக்கெல்லாம் தாய் இனம் என்கிறார்.
தாய் இனம் இன்று முதியோர் இல்லத்தில் கிடந்து வாடுவது நாம் காண்பதுதானே. நம் பெருமையை நாமே உணர்ந்து எழும் நாள் என்று வருமோ ? இந்த அவல நிலை அகல வேண்டுமாயின் தமிழ் மக்கள் தம்மிடையே தோன்றிய பெரியோர்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். போற்ற வேண்டும்.எல்லாவற்றிற்கும் மேலாக சாதிப் பித்து, சமய இறுமாப்பு, மொழிப் பித்து முதலியன சமய நிறுவனங்களிலும், இலக்கியத் துறைகளிலும் ஊடாடி அரசியல் வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும், சமுதாய வாழ்விலும் தீய விளைவுகளை விளைவித்து வருகின்றன. சமய நிறுவனங்களிலே, துறவற நிறுவனங்களிலே சாதியத் தலைமை; இலக்கிய மேடைகளிலே சாதிய உணர்வு ஆகியன இலைமறை காய் போல், தமிழ் நாட்டில் சமயங்களின் பெயராலும், மொழியின் பெயராலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவை அகலாத வரை தமிழனுக்கு விமோசனமே இல்லை. தகுதி இருந்தும், ஆற்றல் இருந்தும் இவைகளால் தலமைப் பதவி அவனை விட்டு நழுவி விடுகிறது.
 
Via FB மௌனத்தின் குரல்