ஆன்மீகத் தத்துவஞானி - தாயுமானவர்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 PM | Best Blogger Tips
Photo: ''கால்பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே.'' -தாயுமானவர்.
ஆன்மீகத் தத்துவஞானி தாயுமானவ சுவாமிகளின் வைரவரிகள் இவை. இவரின் தமிழ் பாடல்கள் ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள். வரிகளை விரித்துத் தேடினால் விரிந்து கொண்டே போகும் தத்துவங்கள். ஒரு பாடலை விவரித்து எழுத ஒரு தனி நூலே தேவைப்படும். அனைத்தும் சூக்கும வரிகள். கால் என்றால் காற்று. பிடித்து என்றால் கும்பகம் பண்ணி உள்ளடக்கி வைத்துக் கொள்வது. அவ்வாறு செய்யும் போது உடலில் உஷ்ணம் ஏறும். அந்த உஷ்ணத்தினால் மூலக்கனலாகிய உஷ்ணம் பொருந்திய மகாசக்தியை தண்டுவடம் வழியாக மேலே நரம்பு மண்டலங்களின் தலைமை பீடமாகிய மூளை என்னும் மதி மண்டலத்துக்குள் செலுத்தினால் மரணம் என்பது கனவே. மூளை, மகா சக்தியோடு சேரும் போது அதோடு தொடர்புடைய அனைத்து நரம்புகளையும், இரத்த நாளங்களையும், இதர மண்டலங்களையும், உடலுறுப்புகளையும் வலுவடையச் செய்கிறது. எனவே மனிதனுக்கு எல்லையில்லாத சகல வல்லமைகளும், சித்திகளும் கூடி, மரணம் இல்லா பெரு வாழ்வு சித்திக்கும். இதையே தேகம் விழுமோ ? என்று கேட்கிறார்.
இதையே சிவ வாக்கியர் இன்னும் சற்று விளக்கமாகச் சொல்கிறார். சிவ வாக்கியம் ஒவ்வொன்றும் ஜீவ வாக்கியம். ஒவ்வொரு வார்த்தைகளும் உயிர்ப்பு உள்ளவை. 
''வடிவு பத்மாசனந் திருத்தி மூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால்
முளரி யாலயங் கடந்து மூல நாடி யூடேபோய்''...
மகாசக்தியை மேலே ஏற்ற முதலில் பத்மாசனத்தில் இருக்க வேண்டும். பின் முத்திரைப் பயிற்சிகள் மூலம் இரண்டு கண்கள், இரண்டு காது, இரண்டு மூக்குத் துளை, வாய், குறி, குதம் ஆகிய ஒன்பது வாசல்களையும் அடைத்து, மூச்சையும் உள்ளடக்கி, முதுகுத் தண்டு வழியாக மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, அக்ஞை ஆகிய ஆறு ஆதரங்களையும் இயங்க வைத்து, கடந்து ஆயிரம் இதழ் கொண்ட சகஸராரத்துக்கு மகாசக்தியை  ஏற்றும் போது மரணமில்லா பெருவாழ்வு சித்திக்கும். என்கிறார். 
இதை நாம் அறிவியல் ரீதியாகவும் விளங்கிக் கொள்ளலாம். ஒரு பாத்திரத்தின் மேற்பகுதியில் மட்டும் வாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதையும் மூடி வைத்து விட்டோம் என்றால், வாயு பல பகுதியில் இருந்து அழுத்தம் பெறும் போது மேல் மூடியானது திறந்து கொள்ளும். நம் உடலிலும் ஒன்பது வாயிலையும் அடைத்து விடுகிறோம். கும்பகம் செய்து பிராணவாயு குண்டலினியுடன் கலக்கச் செய்கிறோம். உஷ்ணம் ஏறியதால் பிராண வாயுவுடன் கூடிய குண்டலினியான மகாசக்தியானது முதுகுத் தண்டு வழியாக மேல் நோக்கி ஏற ஆரம்பிக்கிறது.
அதன் காரணம் என்னவென்றால் வாயுவுடன் கலந்த சக்தியானது மேல் நோக்கி செல்லும் தன்மையை அடைகிறது. தலை உச்சியில் பிரம்மரந்திரத்தில் ஒரு சிறிய துளை உள்ளது.ஆகவே அத்துவாரம் நோக்கி சக்தியானது ஈர்க்கப் படுகிறது. ஆனால் அங்கே உள்ள சகஸ்ராரத்தின் சுழல் வேகத்தில் அங்கேயே சுழல வைக்கப்பட்டு  மற்ற பரிபாலனங்கள் நடந்தேறுகின்றன. அதாவது ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாக மூளை திகழ்கிறது. மூளைக்கு வந்து மகாசக்தியானது சேரும் போது ஹைப்போ தலாமஸ் என்னும் அடித்தள மூளை வழியாக பிட்யூட்டரி சுரப்பியை அழுத்துகிறது. அப்போது அங்கு உடல் வளர்ச்சிக்கு உரிய சுரப்பு நீராகிய அமிர்தம் சுரக்கிறது. அதை உண்ணும் சாதகன் அழியா தேகம் பெறுகிறான்.
''கால்பிடித்து மூலக் கனலை மதி மண்டலத்தின்

Via FB மௌனத்தின் குரல்