தில்லுமுல்லு - கரன்சி கல்லுாரி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:05 | Best Blogger Tips
சில தினங்களுக்கு முன், கல்வி ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது, 1014 மதிப்பெண்கள் வாங்கிய தங்கள் மகனுடன் அவரைச் சந்திக்க வந்திருந்தனர் கரூரைச் சேர்ந்த பெற்றோர். 'திண்டுக்கல் பக்கத்துல ஒரு காலேஜ்ல 100 சதவிகிதம் பிளேஸ்மென்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்தக் காலேஜ்ல எங்க பையனை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்க்கலாமா சார்? படிச்சு முடிச்சதும் வேலையோட வெளியில வருவான் இல்லையா?’ என்று கேட்டனர் அந்தப் பெற்றோர். அதற்குக் கல்வி ஆலோசகர், '100 சதவிகித பிளேஸ்மென்ட் என்பது ஏமாற்று வேலை. அது சாத்தியமே இல்லை. ஃபைனல் இயரில் 250 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அதில், அரியர் இல்லாமல் இருப்பவர்கள் 200 பேர் இருப்பார்கள். அந்த 200 பேரில் மேற்படிப்புத் தொடர இருப்பவர்கள் 75 பேர்தான் இருப்பார்கள். மீதி இருக்கும் 125 பேருக்கு வேலை வாங்கித் தருவார்கள். அதுவும் அவர்கள் படித்த படிப்புக்கான வேலையாக இருக்காது. சாதாரண பி.பி.ஓ. கம்பெனிகளிலோ, மார்கெட்டிங் வேலையோ 5,000 ரூபாய் சம்பளத்துக்கு வாங்கித் தருகிறார்கள். கல்லூரிகளுக்கு இதுபோன்ற வேலைகளை வாங்கித் தரும் ஏஜென்ஸிகள் ஏராளமாக உள்ளன. அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள்.

நீங்கள் அந்தக் கல்லூரிக்குச் செல்லுங்கள். கடந்த ஆண்டு எத்தனை பேருக்கு பிளேஸ்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். எந்தக் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? என்பதைத் தெளிவாகக் கேளுங்கள். முடிந்தால் பிளேஸ்மென்ட் ஆன மாணவர்களின் செல்போன் எண்களை கேட்டுவாங்கி அவர்களிடமும் விசாரியுங்கள். குறைந்தது 20 ஆயிரம் சம்பளம், படிப்புக்கு ஏற்ற வேலையாக இருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, கல்லூரியில் லேப் வசதி, முன்அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் முக்கியம். ஒவ்வொரு துறையின் தலைவரும் பி.ஹெச்.டி. முடித்தவராக இருக்க வேண்டும். இதை எல்லாம் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அந்தக் கல்லூரியில் சேர்ப்பது பற்றி முடிவுக்கு வாருங்கள்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். நிஜம் இதுதான்!Junior Vikatanசில தினங்களுக்கு முன், கல்வி ஆலோசகர் ஒருவரைச் சந்திக்க அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது, 1014 மதிப்பெண்கள் வாங்கிய தங்கள் மகனுடன் அவரைச் சந்திக்க வந்திருந்தனர் கரூரைச் சேர்ந்த பெற்றோர். 'திண்டுக்கல் பக்கத்துல ஒரு காலேஜ்ல 100 சதவிகிதம் பிளேஸ்மென்ட் என்று விளம்பரம் வந்திருக்கிறது. அந்தக் காலேஜ்ல எங்க பையனை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் சேர்க்கலாமா சார்? படிச்சு முடிச்சதும் வேலையோட வெளியில வருவான் இல்லையா?’ என்று கேட்டனர் அந்தப் பெற்றோர். அதற்குக் கல்வி ஆலோசகர், '100 சதவிகித பிளேஸ்மென்ட் என்பது ஏமாற்று வேலை. அது சாத்தியமே இல்லை. ஃபைனல் இயரில் 250 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால் அதில், அரியர் இல்லாமல் இருப்பவர்கள் 200 பேர் இருப்பார்கள். அந்த 200 பேரில் மேற்படிப்புத் தொடர இருப்பவர்கள் 75 பேர்தான் இருப்பார்கள். மீதி இருக்கும் 125 பேருக்கு வேலை வாங்கித் தருவார்கள். அதுவும் அவர்கள் படித்த படிப்புக்கான வேலையாக இருக்காது. சாதாரண பி.பி.ஓ. கம்பெனிகளிலோ, மார்கெட்டிங் வேலையோ 5,000 ரூபாய் சம்பளத்துக்கு வாங்கித் தருகிறார்கள். கல்லூரிகளுக்கு இதுபோன்ற வேலைகளை வாங்கித் தரும் ஏஜென்ஸிகள் ஏராளமாக உள்ளன. அவர்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறார்கள்.

நீங்கள் அந்தக் கல்லூரிக்குச் செல்லுங்கள். கடந்த ஆண்டு எத்தனை பேருக்கு பிளேஸ்மென்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பதை விசாரியுங்கள். எந்தக் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்து இருக்கிறார்கள்? எவ்வளவு சம்பளம்? என்பதைத் தெளிவாகக் கேளுங்கள். முடிந்தால் பிளேஸ்மென்ட் ஆன மாணவர்களின் செல்போன் எண்களை கேட்டுவாங்கி அவர்களிடமும் விசாரியுங்கள். குறைந்தது 20 ஆயிரம் சம்பளம், படிப்புக்கு ஏற்ற வேலையாக இருக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, கல்லூரியில் லேப் வசதி, முன்அனுபவம் மிக்க பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதும் முக்கியம். ஒவ்வொரு துறையின் தலைவரும் பி.ஹெச்.டி. முடித்தவராக இருக்க வேண்டும். இதை எல்லாம் விசாரித்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அந்தக் கல்லூரியில் சேர்ப்பது பற்றி முடிவுக்கு வாருங்கள்’ என்று அறிவுரை சொல்லி அனுப்பினார். நிஜம் இதுதான்!
 
Via Junior Vikatan