நாளிருமுறை, வாரமிருமுறை, மாதமிருமுறை, வருடமிருமுறை என்ற பொன்மொழியை ஆண், பெண் இருபாலினரும் கடைபிடிக்க வேண்டும். இத்தத் திரு முறைகளான இருமுறைகள் நான்கும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை. ஆண், பெண் இனக்கலப்பில், ஆண் தன் சக்தித் துளிகளை வெளியேற்றுகிறான். இந்த சக்தித் துளிகள் இலட்சக் கணக்கான இரத்தத்துளிகளால் உருவானவை. எனவே இந்தச் சக்தித் துளிகள் இரத்தத்தை விட மிகமிக மதிப்பு வாய்ந்தவை ஆகும். இரத்தத்தில் இருந்து உருவாகும் சக்தித் துளிகளின் பெருமையை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். வீரியம் நிறைந்த சக்தித் துளிகளைப் பெற விரும்புபவன், தன் உடலில் நல்ல சுத்தமான இரத்தத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். உடலில் சுத்தமான இரத்தம் பெருக வேண்டும் என்றால், நல்ல சத்தான உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். உட்கொள்ளும் சத்துப் பொருள்கள் ஜீரணமாக முறையான உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொண்டால் நல்ல பசி எடுக்கும். பசியறிந்து உண்ணும் உணவுப் பொருள்கள் நன்கு ஜீரணமாகும். ஜீரணமான உணவின் சக்கைகள் கழிவாக வெளியேறும். நல்ல ஜீரண சக்தியைப் பெற்றவன் நாளிரு முறை மலம் கழிப்பவனாக இருப்பான். எனவே அவன் சுத்தமான இரத்தத்தைப் பெற்றவனாகவும் இருப்பான். மனித உடலும் ஒரு இயந்திரமே. ஆழ்ந்து கவனித்தால் மனித உடலை அடிப்படையாகக் கொண்டே இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது புரியும். இயந்திரத்துக்கு அடிக்கடி எண்ணெய் இடுவது அவசியமாகும். இது தேய்மானத்தை குறைத்து, அதனால் ஏற்படும் உஷணத்தைக் குறைக்கும். மனித உடலும் பல வேலைகளின் நிமித்தமாகச் சூட்டை அடைகிறது. அதன் காரணமாக உடல் பல விதமான கேடுகளை அடைகிறது. கண் பொங்குதல், வாய்புண், கொப்புளங்கள் என உஷ்ண சம்மந்தமான அனைத்து நோய்களும் உஷ்ணம் அதிகமானால் உடலைத் தாக்கும். இதனால் இரத்தம் கெடும். எனவே உடலின் சூட்டை சம்ப்படுத்துவது அவசியமாகும். இதற்கு வாரமிருமுறை எண்ணெய் குளியல் அவசியமாகும். எனவேதான் வைத்தியனுக்குக் கொடுப்பதை வணகனுக்குக் கொடு என்ற பழமொழியைச் சொல்லி வைத்தார்கள். என்னதான் தினமிரு முறை மலம் கழிந்தாலும் சில பொருள்கள் மலக்குடலில் தங்கிவிட வாய்ப்பு உண்டு. எனவே தேவையில்லாத கிருமிகளும் அதனால் வியாதிகளும் வர வாய்ப்பு உள்ளது. வாயுவும் உற்பத்தியாகி இடையூறுகளைச் செய்யும். மேலும் உடலில் நீர் தங்கி பலவிதமான வியாதிகளை உண்டாக்கும். எனவே வருடமிருமுறை பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனால் இரத்தமும் சுத்தமாகும். குடல் சுத்தமாக இருந்தால்தான் ஜீரண சக்தியும் நன்றாக இருக்கும். சுத்த இரத்தம் பெருகும். இதனால் சக்தித் துளிகளும் பெருகுவதோடு, வீரிநமுள்ளவைகளாகத் திகழும். இப்படி பல இலட்சக் கணக்கான இரத்தத் துளிகளால் உருவாகும் சக்தித் துளிகளை கண்மூடித்தனமாக விரையம் செய்வது மடமையாகும். அப்படி விரையம் செய்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, விந்து முந்துதல், இடுப்பு வலி, மார்பு வலி, முதுகு வலி, எலும்புத் தேய்மானம், ஞாபக மறதி போன்ற பலவிதமான வியாதிகள் உருவாகுவதுடன், சரீர வளம் குன்றி, கண்களில் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப் போய் முகம் வசீகரத்தை இழக்கும். விரைவில் நரை, திரை, மூப்பு ஏற்படும். சுருங்கச் சொன்னால் நடைபிணமாகி அலைய வேண்டிய அவல நிலைக்கு ஆளாவான். எனவே தினம் இரு முறை, வாரம் இருமுறை, வருடம் இரு முறையை குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். பருவ வயதில் திருமணம் ஆனவர்கள் மாதமிருமுறை இன்பம் துய்த்தால், இன்பம் மிகுந்ததாக விளங்குவதோடு உடல் நலமும் காக்கப்படும். மாதமிருமுறை இன்பம் துய்ப்பவன் இல்லறத்தில் வாழ்ந்தாலும், பிரம்மச்சாரியே ஆவான் என்று ஆதி மனுவே சொல்லி இருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே இந்த நான்கு இருமுறைகளையும் திருமுறைகள் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
Via FB மௌனத்தின்
குரல்