கேள்வி கேட்பது

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:24 | Best Blogger Tips
Photo: கேள்வி கேட்பது என்பது திறமை. பதில் சொல்வது பொறுமை. என்றாலும், கேள்வியே வாழ்க்கை ஆகிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால் நம் அறிவுக்கு எதுவும் புலனாகாது. நம் ஆறாம் அறிவான பகுத்தறிவை உபயோகப்படுத்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, நம் மூளையில் மூடிக்கிடக்கும் ஒவ்வொரு செல்லாகத் தட்ட வேண்டும். மனதுக்குள் விடையைத் தேட வேண்டும். அதுவே கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பதன் பொருள். ஒரு மகானிடம் போய் ஒருவர் ஐயா என் துன்பங்கள்எல்லாம் போக ஒரு வழி சொல்லுங்கள் என்றார். அவரும் ''கடவுள் கண் திறக்கும் வரை காத்திரு'' என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்த மனிதரும் போய்விட்டார். வெகு காலம் ஆயிற்று மீண்டும் அந்த மனிதர் வந்தார். மிகவும் வாடிப் போனவராக துன்பத்தில் உழன்று துயருற்றவராக வந்தார். மகானிடம் போய் ஐயா எவ்வளவு காலம்தான் காத்திருப்பது ? கடவுள் கண் திறக்கவும் இல்லை. என் துன்பம் தீர்ந்த பாடும் இல்லை என்று வேதனையோடு சொன்னார்.  அந்த மகானும் நான் சொன்னதை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். கட, உள், கண், தீ, இறக்கும், வரை, காத்திரு என்றுதான் சொன்னேன். நீ வேறு விதமாகப் புரிந்து கொண்டாய். இனியாவது நான் சொன்னதைச் செய், துன்பங்கள் ஓடிப் போகும். பேரின்பம் அடைவாய் என்றார். அதாவது கடந்து உள்ளே செல். கண்களால் வெளி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் புலன்களால் ஏற்படும் மலக் குற்றங்கள் என்னும் கொடிய தீ இறக்கும் வரை காத்திரு. பேரின்பம் அடைவாய். 

வடக்கே இருப்பது இமய மலை. சித்தர்களுக்கோ அது நம் உடலாகவே இருக்கிறது. அதில் தாய் நீர் என்னும் அமிர்தம், குளுமை நீர் என்னும் சளி, உஷ்ண நீர் எனப்படும் பித்தம், தச நாடிகளுக்கு ஒப்பாக பத்து நதிகள், அக்னி காந்தத்திற்கு ஒப்பாக  கங்கை நதி, பெரும் கபாலத்திற்கு இணையாக ஜுவாலாமுகி, சிறு மூளைக்கு ஒப்பாக சிவன் கோவிலும் உள்ளது. ஏழாவது மலைக்கு மேலே ஞானிகள் எப்போதும் தவம் செய்தபடி இருக்கிறார்கள். இருபத்தோராவது மலையில் கற்ப மூலிகைகள் பலவும் உள்ளன. முப்பத்திரெண்டாவது மலையில் ஜுவாலாமுகி என்னும் அனையா விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த மலையில் சீனாவுக்கு அருகே சிவக்கட்டு என்னும் பாதரசம் ஊறும் ஊற்று இருக்கிறது. நம் உடலில் அதற்கு இணையாக நாதவிந்து உள்ளது.

எப்போதும் குளுமையாக இருக்கும் இந்த மலை உருகுவதற்கு காரணம் உண்டு. சித்திரை மாதம் முழு நிலவைக் கொண்ட ஜுவாலாமுகி மலை உச்சியில் சூரியனின் வெப்பம் படும் போது மலை உருகத் துவங்குகிறது. உருகி வரும் கங்கையானது ஏழு மாநிலங்களை சுத்தப்படுத்துகிறது. நம் உச்சியிலும் தவக்கனலால் தாய் நீர் சுரக்கும் போது, அது ஏழு ஆதாரங்களையும் சுத்தம் செய்கிறது. ஜுவாலாமுகி என்னும் அக்னி ஏழு ஆதாரங்களோடு கல்லீரலையும், நாபியையும் சுத்தப்படுத்தும்.இவையெல்லாம் சுத்தமடையும் போதுதான் குண்டலினி முழுமையாக சிவனோடு ஐக்கியமாகி யோகி பிரம்ம ஞானியாவான். இமய மலையில் உள்ள 63 மலைத்தொடர்களும் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும். 64 வதாக ஒரே ஒரு மலைமட்டும் கீழ் நோக்கி இருக்கும். இந்த மலைக்குப் பெயர் பிரம்ம கபால மலையாகும். இது போலவே நம் உடலில் பெருமூளையின் நடுப்பகுதி மட்டும் கீழ் நோக்கி உள்ளது. சித்தர்கள் அதைத்தான் முழுமதி என்பார்கள். இமயத்தில் இரண்டு நீர்க் குழிகள் உள்ளன. ஒன்று வெப்ப நீராகும் மற்றொன்று குளிர்ந்த நீராகும். அதாவது ஒன்று சிவநீர் மற்றது தாய் நீர். பித்தம் என்றால் சிவன். அதுவே பித்த நீர். மற்ற தாய் நீரானது ஞானிகளுக்கு நல்ல சக்தியைத் தருகிறது. ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதற்கு விளக்கமே இந்த மலைதான். பெண்ணென்ற உடலை நாயகன் உயிர் உள்ளவரை விடுவதில்லை. யார் அந்த நாயகன் ? அவனே பித்தமாகிய பித்தன். சித்தனுக்கெல்லாம் சித்தமாகிய சித்தன். அவனே சிவன். அவனே ஆண்மை. சர்வம் சக்தி மயம். எங்கும் பித்த மயம். உருவமே இல்லாத உவமயம் தான் எங்கும் சிவமயம்.

மகா தவசியான பகீரதன் பிரம்ம நீரைப் பெற ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தவமிருந்தார். சிவத்தைக் கட்டி, தன் உடலில் உள்ள 18 படிகளையும் கட்டி சிவ நாதத்தைப் பெற்றார். சிவ பெருமானும் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பகீரதனும் பிரம்ம நீர் வேண்டும் என்று கேட்டார். சிவனும் அருளி மறைகிறார். பகீரதனோ மகிழ்ச்சியில் ''தலைகால்'' புரியாமல் ஆடுகிறார். தன்னிலை மறந்தார். அந்தோ பரிதாபம் சிவ நீரோ நாதத்தில் நின்று விட்டது. வேதனை அடைந்த பகீரதன் மீண்டும் முன்பை விட முனைப்பாக கடும் தவம் இயற்றுகிறார். ஆண்டுகள் கடந்தன. இறுதியில் மனமிரங்கிய சிவபெருமான் காட்சி தந்தார். பக்தா தன்னிலை மறந்த நீ நாபியைக் கட்ட மறந்தாய். அதனால் பிரம்மநீர் நாதத்தில் நின்றது. முழுமையாக ஞானம் பெற நீ கங்கை நீர் அருந்த வேண்டும். அருந்தினால் சித்தனாவாய் என்று கூறி ஆசிர்வதிக்க, நாபி நின்றது, நாதம் திறந்தது கங்கை நீர் அதாவது அமிர்தம்(தாய் நீர்) உண்டார் பிரம்ம ஜோதியில் இணைந்தார். அன்று முதல் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பது தாய் நீர் ஒன்றே. ஞானிக்கோர் தாய் நீர், மண்ணிற்கோர் கங்கை நீர். கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் பித்தத்தைக் கட்டினால் (சிவத்தை) ஞான நீர் அருந்தலாம், காயத்தைக் கல்பமாக்கலாம்.  பிரம்மத்தை அடைய இது ஒன்றே வழி. அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதால்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எனினும், குருவருளும், திருவருளும் கூடினால் எதுவும் எளிதே.
கேள்வி கேட்பது என்பது திறமை. பதில் சொல்வது பொறுமை. என்றாலும், கேள்வியே வாழ்க்கை ஆகிவிடக் கூடாது. அவ்வாறாயின் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால் நம் அறிவுக்கு எதுவும் புலனாகாது. நம் ஆறாம் அறிவான பகுத்தறிவை உபயோகப்படுத்தி தன்னைத் தானே கேட்டுக் கொண்டு, நம் மூளையில் மூடிக்கிடக்கும் ஒவ்வொரு செல்லாகத் தட்ட வேண்டும். மனதுக்குள் விடையைத் தேட வேண்டும். அதுவே கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பதன் பொருள். ஒரு மகானிடம் போய் ஒருவர் ஐயா என் துன்பங்கள்எல்லாம் போக ஒரு வழி சொல்லுங்கள் என்றார். அவரும் ''கடவுள் கண் திறக்கும் வரை காத்திரு'' என்று சொல்லி அனுப்பி விட்டார். அந்த மனிதரும் போய்விட்டார். வெகு காலம் ஆயிற்று மீண்டும் அந்த மனிதர் வந்தார். மிகவும் வாடிப் போனவராக துன்பத்தில் உழன்று துயருற்றவராக வந்தார். மகானிடம் போய் ஐயா எவ்வளவு காலம்தான் காத்திருப்பது ? கடவுள் கண் திறக்கவும் இல்லை. என் துன்பம் தீர்ந்த பாடும் இல்லை என்று வேதனையோடு சொன்னார். அந்த மகானும் நான் சொன்னதை நீ தவறாகப் புரிந்து கொண்டாய். கட, உள், கண், தீ, இறக்கும், வரை, காத்திரு என்றுதான் சொன்னேன். நீ வேறு விதமாகப் புரிந்து கொண்டாய். இனியாவது நான் சொன்னதைச் செய், துன்பங்கள் ஓடிப் போகும். பேரின்பம் அடைவாய் என்றார். அதாவது கடந்து உள்ளே செல். கண்களால் வெளி உலகில் சுற்றிக் கொண்டிருக்கும் புலன்களால் ஏற்படும் மலக் குற்றங்கள் என்னும் கொடிய தீ இறக்கும் வரை காத்திரு. பேரின்பம் அடைவாய்.

வடக்கே இருப்பது இமய மலை. சித்தர்களுக்கோ அது நம் உடலாகவே இருக்கிறது. அதில் தாய் நீர் என்னும் அமிர்தம், குளுமை நீர் என்னும் சளி, உஷ்ண நீர் எனப்படும் பித்தம், தச நாடிகளுக்கு ஒப்பாக பத்து நதிகள், அக்னி காந்தத்திற்கு ஒப்பாக கங்கை நதி, பெரும் கபாலத்திற்கு இணையாக ஜுவாலாமுகி, சிறு மூளைக்கு ஒப்பாக சிவன் கோவிலும் உள்ளது. ஏழாவது மலைக்கு மேலே ஞானிகள் எப்போதும் தவம் செய்தபடி இருக்கிறார்கள். இருபத்தோராவது மலையில் கற்ப மூலிகைகள் பலவும் உள்ளன. முப்பத்திரெண்டாவது மலையில் ஜுவாலாமுகி என்னும் அனையா விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. இந்த மலையில் சீனாவுக்கு அருகே சிவக்கட்டு என்னும் பாதரசம் ஊறும் ஊற்று இருக்கிறது. நம் உடலில் அதற்கு இணையாக நாதவிந்து உள்ளது.

எப்போதும் குளுமையாக இருக்கும் இந்த மலை உருகுவதற்கு காரணம் உண்டு. சித்திரை மாதம் முழு நிலவைக் கொண்ட ஜுவாலாமுகி மலை உச்சியில் சூரியனின் வெப்பம் படும் போது மலை உருகத் துவங்குகிறது. உருகி வரும் கங்கையானது ஏழு மாநிலங்களை சுத்தப்படுத்துகிறது. நம் உச்சியிலும் தவக்கனலால் தாய் நீர் சுரக்கும் போது, அது ஏழு ஆதாரங்களையும் சுத்தம் செய்கிறது. ஜுவாலாமுகி என்னும் அக்னி ஏழு ஆதாரங்களோடு கல்லீரலையும், நாபியையும் சுத்தப்படுத்தும்.இவையெல்லாம் சுத்தமடையும் போதுதான் குண்டலினி முழுமையாக சிவனோடு ஐக்கியமாகி யோகி பிரம்ம ஞானியாவான். இமய மலையில் உள்ள 63 மலைத்தொடர்களும் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும். 64 வதாக ஒரே ஒரு மலைமட்டும் கீழ் நோக்கி இருக்கும். இந்த மலைக்குப் பெயர் பிரம்ம கபால மலையாகும். இது போலவே நம் உடலில் பெருமூளையின் நடுப்பகுதி மட்டும் கீழ் நோக்கி உள்ளது. சித்தர்கள் அதைத்தான் முழுமதி என்பார்கள். இமயத்தில் இரண்டு நீர்க் குழிகள் உள்ளன. ஒன்று வெப்ப நீராகும் மற்றொன்று குளிர்ந்த நீராகும். அதாவது ஒன்று சிவநீர் மற்றது தாய் நீர். பித்தம் என்றால் சிவன். அதுவே பித்த நீர். மற்ற தாய் நீரானது ஞானிகளுக்கு நல்ல சக்தியைத் தருகிறது. ஆணும் பெண்ணும் ஒன்றே என்பதற்கு விளக்கமே இந்த மலைதான். பெண்ணென்ற உடலை நாயகன் உயிர் உள்ளவரை விடுவதில்லை. யார் அந்த நாயகன் ? அவனே பித்தமாகிய பித்தன். சித்தனுக்கெல்லாம் சித்தமாகிய சித்தன். அவனே சிவன். அவனே ஆண்மை. சர்வம் சக்தி மயம். எங்கும் பித்த மயம். உருவமே இல்லாத உவமயம் தான் எங்கும் சிவமயம்.

மகா தவசியான பகீரதன் பிரம்ம நீரைப் பெற ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தவமிருந்தார். சிவத்தைக் கட்டி, தன் உடலில் உள்ள 18 படிகளையும் கட்டி சிவ நாதத்தைப் பெற்றார். சிவ பெருமானும் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பகீரதனும் பிரம்ம நீர் வேண்டும் என்று கேட்டார். சிவனும் அருளி மறைகிறார். பகீரதனோ மகிழ்ச்சியில் ''தலைகால்'' புரியாமல் ஆடுகிறார். தன்னிலை மறந்தார். அந்தோ பரிதாபம் சிவ நீரோ நாதத்தில் நின்று விட்டது. வேதனை அடைந்த பகீரதன் மீண்டும் முன்பை விட முனைப்பாக கடும் தவம் இயற்றுகிறார். ஆண்டுகள் கடந்தன. இறுதியில் மனமிரங்கிய சிவபெருமான் காட்சி தந்தார். பக்தா தன்னிலை மறந்த நீ நாபியைக் கட்ட மறந்தாய். அதனால் பிரம்மநீர் நாதத்தில் நின்றது. முழுமையாக ஞானம் பெற நீ கங்கை நீர் அருந்த வேண்டும். அருந்தினால் சித்தனாவாய் என்று கூறி ஆசிர்வதிக்க, நாபி நின்றது, நாதம் திறந்தது கங்கை நீர் அதாவது அமிர்தம்(தாய் நீர்) உண்டார் பிரம்ம ஜோதியில் இணைந்தார். அன்று முதல் இன்று வரை உலகில் நிலைத்து நிற்பது தாய் நீர் ஒன்றே. ஞானிக்கோர் தாய் நீர், மண்ணிற்கோர் கங்கை நீர். கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடானுகோடி மக்களும் பித்தத்தைக் கட்டினால் (சிவத்தை) ஞான நீர் அருந்தலாம், காயத்தைக் கல்பமாக்கலாம். பிரம்மத்தை அடைய இது ஒன்றே வழி. அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என்பதால்தான் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். எனினும், குருவருளும், திருவருளும் கூடினால் எதுவும் எளிதே.
 
Via FB மௌனத்தின் குரல்