தியானம் 3

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:22 | Best Blogger Tips
Photo: உயர்ந்த உணர்வு மையத்தில் பரம்பொருளை இடையூறின்றி தன்னுணர்வுடன் எண்ணுவது தியானம். சிந்திப்பது அல்லது எண்ணுவது என்றால் என்ன ? எண்ணற்ற எண்ண அலைகளின் தொடர் நீரோட்டமே சிந்தனை எனப்படுகிறது. மனமே இப்படி எண்ண அலைகளாகச் செயல்படுகிறது. அப்படி செயல்படும் நிலைகளை இரண்டு பிரிவாகச் சொல்வார்கள். மனமானது ஒன்றன் பின் ஒன்றாக பல எண்ண அலைகளுக்குத் தாவுவதை பலமுக நிலை என்பார்கள். அவ்வாறல்லாமல் ஒரே பொருளைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ நிற்கின்ற நேரங்களும் உண்டு. இதை ஒரு முக நிலை என்பார்கள். இந்த மனதின் விசேஷமான ஒருமுக நிலையே தியானம்.

இந்த ஒருமுக நிலை முக்திக்கான சாதனை முறையாக மாற வேண்டுமானால், அது ஐந்து நியதிகளை நிறைவேற்றியாக வேண்டும் என்று பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது. அது என்ன ஐந்து நியதிகள் ? பார்ப்போமா ? 
முதலில் வருவது சிரத்தை. அதாவது ஆழ்ந்த நம்பிக்கை. குறிக்கோளில் நம்பிக்கையும், அதை அடைந்தே தீருவேன் என்கிற உறுதியும் வேண்டும்.
இந்த நம்பிக்கையானது செயல் வடிவம் பெற வேண்டுமானால் ஆற்றல் தேவை. அதுவே இரண்டாவது நியதியாகிய வீர்யம். வீர்யம் என்றால் உணர்ச்சி வேகத்தில் ஏற்படுகின்ற வெறும் உற்சாகமல்ல. அது தொடர்ந்த பயிற்சியால் ஏற்படுகின்ற வலிமை. மூன்றாவது நினைவு. இந்த நினைவானது நான்காவது நியதியான ஸமாதியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஐத்தாவது தன்னறிவு. இந்த ஐந்து நியதிகளில் நினைவே மிக முக்கியமானது. ஒரே எண்ண அலையைத் தொடர்ந்து செலுத்துவதே தியானம் என்று கூறுவது இதையே. அதாவது தொடர்ந்து நிலையான நினைவைக் கொண்டிருப்பதே தியானம்.

அவ்வாறாயின் நாம் பல பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்போம். அது தியானமா ? என்று கேட்டால் இல்லை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சாதாரணமாக ஒருவன் பலவற்றை நினைவில் வைத்திருக்கிறான். அதிலும் சிலரின் நினைவாற்றல் வியப்புக்குரியதாக இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து மனமானது ஒரே பொருளை நினைத்துக் கொண்டிருப்பது என்பது கடினம். உதாரணமாக பக்கம் பக்கமாக படித்து அதனை நினைவில் வைத்துக் கொண்டு ஒப்புவிப்பது எளிது. ஆனால் அதே பக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையை அல்லது ஒரு கருத்தை தொடர்ந்து நினைப்பது என்பது கடினம். இதைச் செய்ய முயலும் போது இந்த நுண்ணிய வேறுபாடு புலப்படும். இப்படி ஒரே விஷயத்தைத் தொடர்ந்து நினைப்பது தியானம். 

இதில் அதி சூக்குமமான விஷயம் ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால், அது காலம். காலத்தை வெல்வது தியானம். என்ன ஐயா குழப்புகிறீர்கள் ? என்கிறீர்களா ? குழப்பவில்லை. கேளுங்கள். அதாவது, கடந்த கால அனுபவங்களை மீண்டும் சிந்திப்பதையே நாம் நினைவு என்கிறோம். நம் வாழ்வின் பெரும் பகுதி கடந்தகால நினைவுகளிலோ அல்லது எதிர்கால கற்பனைகளிலோ  வீணாகிப் போகிறது. நிகழ் காலம் என்பதோ கணப் பொழுதுதான். ஒரு அனுபவத்தைப் பெறுகிறோம், கண்ணிமைக்கும் நேரத்தில் அது கடந்தகாலத்துக்கு உருண்டோடிப் போய்விடுகிறது. என்ன செய்ய முடியும்? தியானம்தான் செய்ய வேண்டும். ஆனால், தியானம் என்பது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதோ அல்ல. அது நிகழ்காலத்தை தொடர்ந்து கொண்டே இருப்பது. அதாவது நிகழ்காலம், கடந்த காலத்தின் நினைவற்ற இருளுக்குள் நழுவிச் சென்று கலந்து விடாமல் தடுக்கின்ற முயற்சியே தியானம். இன்னும் சொன்னால், முழு நினைவையும் நிகழ்காலத்தில் நிலை நிறுத்துவதே தியானம். அதில் உறுதியாக நின்றவர்கள் உணர்வுகளையும், காலத்தையும் கடந்தவர்களாவார்கள். அவர்களுக்கு புற உலகின் முக்காலமும் அழிந்து போகும். நிகழ்காலம் மட்டுமே. அந்தப் பரிமாணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். எனவே மீண்டும் மீண்டும் படியுங்கள், புரியவில்லை என்றால் தியானத்தில் மூழ்கி பார்த்து விடுங்கள்.உயர்ந்த உணர்வு மையத்தில் பரம்பொருளை இடையூறின்றி தன்னுணர்வுடன் எண்ணுவது தியானம். சிந்திப்பது அல்லது எண்ணுவது என்றால் என்ன ? எண்ணற்ற எண்ண அலைகளின் தொடர் நீரோட்டமே சிந்தனை எனப்படுகிறது. மனமே இப்படி எண்ண அலைகளாகச் செயல்படுகிறது. அப்படி செயல்படும் நிலைகளை இரண்டு பிரிவாகச் சொல்வார்கள். மனமானது ஒன்றன் பின் ஒன்றாக பல எண்ண அலைகளுக்குத் தாவுவதை பலமுக நிலை என்பார்கள். அவ்வாறல்லாமல் ஒரே பொருளைப் பற்றியோ, விஷயத்தைப் பற்றியோ நிற்கின்ற நேரங்களும் உண்டு. இதை ஒரு முக நிலை என்பார்கள். இந்த மனதின் விசேஷமான ஒருமுக நிலையே தியானம்.

இந்த ஒருமுக நிலை முக்திக்கான சாதனை முறையாக மாற வேண்டுமானால், அது ஐந்து நியதிகளை நிறைவேற்றியாக வேண்டும் என்று பதஞ்சலி யோக சூத்திரம் சொல்கிறது. அது என்ன ஐந்து நியதிகள் ? பார்ப்போமா ?
முதலில் வருவது சிரத்தை. அதாவது ஆழ்ந்த நம்பிக்கை. குறிக்கோளில் நம்பிக்கையும், அதை அடைந்தே தீருவேன் என்கிற உறுதியும் வேண்டும்.
இந்த நம்பிக்கையானது செயல் வடிவம் பெற வேண்டுமானால் ஆற்றல் தேவை. அதுவே இரண்டாவது நியதியாகிய வீர்யம். வீர்யம் என்றால் உணர்ச்சி வேகத்தில் ஏற்படுகின்ற வெறும் உற்சாகமல்ல. அது தொடர்ந்த பயிற்சியால் ஏற்படுகின்ற வலிமை. மூன்றாவது நினைவு. இந்த நினைவானது நான்காவது நியதியான ஸமாதியுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஐத்தாவது தன்னறிவு. இந்த ஐந்து நியதிகளில் நினைவே மிக முக்கியமானது. ஒரே எண்ண அலையைத் தொடர்ந்து செலுத்துவதே தியானம் என்று கூறுவது இதையே. அதாவது தொடர்ந்து நிலையான நினைவைக் கொண்டிருப்பதே தியானம்.

அவ்வாறாயின் நாம் பல பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்போம். அது தியானமா ? என்று கேட்டால் இல்லை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. சாதாரணமாக ஒருவன் பலவற்றை நினைவில் வைத்திருக்கிறான். அதிலும் சிலரின் நினைவாற்றல் வியப்புக்குரியதாக இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து மனமானது ஒரே பொருளை நினைத்துக் கொண்டிருப்பது என்பது கடினம். உதாரணமாக பக்கம் பக்கமாக படித்து அதனை நினைவில் வைத்துக் கொண்டு ஒப்புவிப்பது எளிது. ஆனால் அதே பக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையை அல்லது ஒரு கருத்தை தொடர்ந்து நினைப்பது என்பது கடினம். இதைச் செய்ய முயலும் போது இந்த நுண்ணிய வேறுபாடு புலப்படும். இப்படி ஒரே விஷயத்தைத் தொடர்ந்து நினைப்பது தியானம்.

இதில் அதி சூக்குமமான விஷயம் ஒன்றிருக்கிறது. அது என்னவென்றால், அது காலம். காலத்தை வெல்வது தியானம். என்ன ஐயா குழப்புகிறீர்கள் ? என்கிறீர்களா ? குழப்பவில்லை. கேளுங்கள். அதாவது, கடந்த கால அனுபவங்களை மீண்டும் சிந்திப்பதையே நாம் நினைவு என்கிறோம். நம் வாழ்வின் பெரும் பகுதி கடந்தகால நினைவுகளிலோ அல்லது எதிர்கால கற்பனைகளிலோ வீணாகிப் போகிறது. நிகழ் காலம் என்பதோ கணப் பொழுதுதான். ஒரு அனுபவத்தைப் பெறுகிறோம், கண்ணிமைக்கும் நேரத்தில் அது கடந்தகாலத்துக்கு உருண்டோடிப் போய்விடுகிறது. என்ன செய்ய முடியும்? தியானம்தான் செய்ய வேண்டும். ஆனால், தியானம் என்பது கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருப்பதோ அல்லது எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதோ அல்ல. அது நிகழ்காலத்தை தொடர்ந்து கொண்டே இருப்பது. அதாவது நிகழ்காலம், கடந்த காலத்தின் நினைவற்ற இருளுக்குள் நழுவிச் சென்று கலந்து விடாமல் தடுக்கின்ற முயற்சியே தியானம். இன்னும் சொன்னால், முழு நினைவையும் நிகழ்காலத்தில் நிலை நிறுத்துவதே தியானம். அதில் உறுதியாக நின்றவர்கள் உணர்வுகளையும், காலத்தையும் கடந்தவர்களாவார்கள். அவர்களுக்கு புற உலகின் முக்காலமும் அழிந்து போகும். நிகழ்காலம் மட்டுமே. அந்தப் பரிமாணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். எனவே மீண்டும் மீண்டும் படியுங்கள், புரியவில்லை என்றால் தியானத்தில் மூழ்கி பார்த்து விடுங்கள்.
 
Via FB மௌனத்தின் குரல்