அறிவு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:53 | Best Blogger Tips
Photo: அறிவை நாம் இரண்டு வழிகளில் பெறுகிறோம் அல்லது விருத்தி செய்து கொள்கிறோம். ஒன்று புற உலகப் பொருள்களில் இருந்து புலன்கள் மூலம் பொறும் அறிவு. இரண்டாவது, கடந்த கால அனுபவங்கள் பதிவுகளாய் ஆழ்மனதில் புதைந்துள்ளன. அந்தப் பதிவுகள் எழும் போது செயல் வடிவம் பெறுகின்றன. இந்த நினைவுகளில் இருந்தும் நாம் அறிவைப் பெறுகிறோம். நமது எண்ணங்களில் பெரும்பான்மையானது நினைவுகளே. நமது இந்த விதமான செயல்களைத் தூண்டும் ஆற்றல் பிராணன். இதை நாம் பிரபஞ்ச சக்தியில் இருந்து பெறுகிறோம். இந்தப் பிராணனைப் பொறுத்தே மனம் அமைகிறது. அதை நெறிப்படுத்தினால் மனம் வசப்படும். இந்தப் பிராணனானது பிரபஞ்சத்தில் ஒரு விதமாகவும், தனிமனிதனுக்குள் ஒருவிதமாகவும் இயங்கக் கூடியது. இதில் நமக்குள் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்போம். நமது ஸ்தூல சரீரத்தின் முக்கிய மூன்று நாடிகள் வழியாகப் பிராணன் இயங்குகிறது. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாம். சுழுமுனை நடுவாகவும் மற்ற இரண்டு நாடிகளும் அதற்கு இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன. 
நமது சாதாரணமான நிலையில் இடகலையும், பிங்கலையும் மட்டுமே செயல்படுகின்றன. ஒவ்வொரு முறை நாம் சிந்திக்கும் போதும், சிறிது பிராணன் இந்த நாடிகள் வழியாகப் போய் செயல்களைத் தூண்டுகின்றது. தியானம் செய்யும் போதும் இந்த இரண்டு நாடிகள் மட்டுமே செயல்படுகின்றன. இவ்வாறு செலவாகும் சிறிய அளவு பிராணன் போக எஞ்சிய பிராணன் ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது. அதுவே குண்டலினி. இந்த குண்டலினி இயங்கவே சுழுமுனை நாடி உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இந்த நாடி இறுதி வரை இயங்குவதே இல்லை. எனவே அவர்கள் பிராண சக்தியின் பெரும் பகுதி பயன்படுத்தப் படுவதில்லை. இந்த சுழுமுனை நாடியிலே தான் கீழிருந்து மேலாக ஆறு சக்கரங்கள் இருக்கின்றன.
மனதிற்கும் உடலுக்கும் இணைப்புப் பாலம் போல் பிராணன் செயல் படுகின்றது. பிராணனின் மூலமாகவே மனம் உடலைக் கட்டுப் படுத்துகிறது. பலவிதமான மன, உடல் நோய்களுக்கு பிராணனின் தவறான இயக்கமே காரணம். பிராணன் என்றால், பிரபஞ்சத்தில் உள்ள தூல, சூக்கும சக்திகள் அனைத்தின் கூட்டு சக்தியும் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மாறிய நிலையில் பிராணன் என்று அழைக்கப் படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். நமது வேதங்களும், தந்திரங்களும் பிரபஞ்ச சக்தியையே பிராணன் என்று கூறுகின்றன.
இடகலை, பிங்கலை நாடிகளின் இயக்கமே நம் மன ஓட்டத்தை தீர்மானிக்கிறது. அவை இரண்டும் நிதானமாக செயல்படும் போது மனம் விழிப்புடன் இருக்கும். அளவுக்கு மீறிய செயல்பாடு மனதில் அலை இயக்கத்தை அதிகமாக்கும். மெதுவாக இயங்கினால் மனம் மந்தமாக சோர்வடைந்து காணப்படும். இரண்டு நாடிகளும் செயலற்று நின்று விட்டால் மனம் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய்விடும். கனவு காணும் போது மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு நாடிகளும் தடங்களின்றும் இயைந்து செயல்படும் போது மனம் அமைதி அடைகிறது. இந்த நிலை தியானத்திற்கு மிகவும் உகந்தது. நம் தீவிர ஆசைகள், மனப் போராட்ங்கள் போன்ற வேறு சில புற, அக உணர்வுகளாலும் இவைகள் இரண்டும் இயைந்து செயல்படுவது தடைப்படுகிறது. பொதுவாக ஒரு நாடியைவிட மற்றது முரண்பாடாகவே செயல்படுகிறது. இதனால் எண்ணங்கள் தொடர்பில்லாமல் எழுகிறது, மனம் பதட்டமுறுகிறது. நமது உடலின் வெப்பநிலை, இரத்த அழுத்தம், உணவு செரிமாணம், தூக்கம் போப்ற எல்லாம் ஒரு குறிப்பிட்ட சுழற்சி மற்றும் ஒழுங்கு முறையில் நடை பெறுகின்றன. தாவரங்கள், விலங்குகள், மனிதன் எல்லாவற்றிற்குள்ளும் வியக்கத்தகு வகையில் இந்த சுழற்சி தினசரியாகவோ சில  மாத சுழற்சியாகவோ இயங்குகின்றன. இந்த சுழற்சிகள் மனதை வெகுவாக பாதிப்பதாக விஞ்ஞானம் கண்டுபிடித்து உள்ளது. ஆனால் இதை முன்பே நம் முன்னோர்கள் கவனித்து அறிந்தார்கள். இந்த சுழற்சிகளுக்கும், பிராணனுக்கும், இடகலை, பிங்கலை நாடிகளின் செயல்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தார்கள். பிரம்ம முகூர்த்தம், சந்தியா வேளைகளில் இந்த இரு நாடிகளும் இயைந்து செயல்படுவதையும், அதனால் மனம் இந்த வேளைகளில் மிக அமைதியாகச் செயல்படுவதையும் உணர்ந்தார்கள். எனவேதான் இந்த நேரங்களை பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளுக்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நம் உடலின் சில பகுதிகள் இச்சைச் செயல் நரம்புகளாலும், அனிச்சைச் செயல் நரம்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில உறுப்புகள் இந்த இரண்டு நரம்பு மண்டலங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவற்றில் நுரையீரலும் ஒன்றாகும். அதனால்தான் நம்மால் மூச்சைக் கட்டுப்படுத்தி அனிச்சை நரம்பு மண்டலத்தை நம் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. இதனால் நாம் இடகலை, பிங்கலை நாடிகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து பிராணனை வசப்படுத்த முடிகிறது. பிராணன் கட்டுப்படும் போது மனம் கட்டுக்குள் வந்து சம்ஸ்காரங்களாகிய செயல்கள் குறைந்து மனம் அமைதி அடைகிறது. இந்த இரு நாடிகளின் நேர் - எதிர் இயக்கம் நம் உடலின் உணர்வு மற்றும் உணர்வறு பகுதி மனங்களில் ஆற்றலாக செயல்படுகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி நம் உடலை இயக்குகிறது. நம் பிராணனை அதிகம் செலவு செய்வது காமம் என்ற உணர்வால்தான். காமத்தை அடக்காதவரை தியானத்தில் வெற்றி அடைவது இயலாத காரியம்.காமத்தால் செலவாகும் பிராணனை  மூலாதாரத்தில் சேமிப்பதால் மட்டுமே ஓஜஸ் சக்தி அதிகரிக்கும். இது அதிகரித்தால் மூளையில் மேதா என்கிற ஆற்றல் உருவாகும். இதனால் சாதகனின் ஆன்மிக ஆற்றல் பெருகுவதுடன், ஆன்மிக அனுபூதியும் பெற முடியும். இடகலை, பிங்கலை நாடிகள் தண்டுவடத்தின் கீழே மூலாதாரத்தில் இருந்து தொடங்கி ஒன்றை ஒன்று பிண்ணிக் கொண்டு ஒவ்வொரு சக்கரத்தையும் சுற்றி வளையம் உண்டாக்கி மேல் நோக்கி செல்கிறது. மேலே இணைவதில்லை. ஆனால் இடையே மூன்று இடங்களில் இணைகின்றன. அவற்றையே முக் கிரந்திகள் என்றழைப்பர். இவைகளை பிராணனின் ஓட்டத்தைத் தடுக்கும் தடைகளாகச் சொல்வார்கள். இந்த மூன்று முடிச்சுகளும் மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கின்றன. முதலில் பிரம்ம கிரந். இது தொப்புளுக்கு கீழே உள்ளது. இதில் பிராணன் தடைபடும் போது பசி, தாகம் போன்ற உணர்ச்சிக்கு ஆட்படுகிறது. புலன் இன்ப நாட்டம் அதிகரிக்கும். இரண்டாவது விஷ்ணு கிரந்தி. இது இதயத்துக்கு கீழே உள்ளது. இது உணர்ச்சி மையம். மனிதனது உணர்ச்சிகள் இங்கிருந்துதான் பெங்கி பிரவாகிக்கின்றன. மூன்றாவது ருத்ர கிரந்தி. இது அறிவு மையமாகும். இது புருவ மத்திக்கு கீழே உள்ளது. இந்த மூன்று கிரந்திகளும் மனித மனதை இயல்புணர்வு, அதிக உணர்வு, அறிவு உணர்வு என்ற மூன்று நிலைகளில் இயக்குகின்றன. ஆன்மிக உணர்வு என்பது இந்த மூன்று நிலைகளையும் கடந்தது. எனவேதான் அதை உணர்வு கடந்த நிலை என்கிறார்கள். ஆன்மிக சாதகன் இந்த மூன்று முடிச்சுகளையும் தளர்த்தி, பிராணனை இடகலை, பிங்களை நாடிகளில் சிரமமின்றி செயல்பட வைத்தால்தான் மன அமைதியைப் பெற்று சுழுமுனை நாடியைக் கண்டுபிடிக்கவோ, அறியவோ முடியும்.
அறிவை நாம் இரண்டு வழிகளில் பெறுகிறோம் அல்லது விருத்தி செய்து கொள்கிறோம். ஒன்று புற உலகப் பொருள்களில் இருந்து புலன்கள் மூலம் பொறும் அறிவு. இரண்டாவது, கடந்த கால அனுபவங்கள் பதிவுகளாய் ஆழ்மனதில் புதைந்துள்ளன. அந்தப் பதிவுகள் எழும் போது செயல் வடிவம் பெறுகின்றன. இந்த நினைவுகளில் இருந்தும் நாம் அறிவைப் பெறுகிறோம். நமது எண்ணங்களில் பெரும்பான்மையானது நினைவுகளே. நமது இந்த விதமான செயல்களைத் தூண்டும் ஆற்றல் பிராணன். இதை நாம் பிரபஞ்ச சக்தியில் இருந்து பெறுகிறோம். இந்தப் பிராணனைப் பொறுத்தே மனம் அமைகிறது. அதை நெறிப்படுத்தினால் மனம் வசப்படும். இந்தப் பிராணனானது பிரபஞ்சத்தில் ஒரு விதமாகவும், தனிமனிதனுக்குள் ஒருவிதமாகவும் இயங்கக் கூடியது. இதில் நமக்குள் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பார்ப்போம். நமது ஸ்தூல சரீரத்தின் முக்கிய மூன்று நாடிகள் வழியாகப் பிராணன் இயங்குகிறது. அவை இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாம். சுழுமுனை நடுவாகவும் மற்ற இரண்டு நாடிகளும் அதற்கு இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
நமது சாதாரணமான நிலையில் இடகலையும், பிங்கலையும் மட்டுமே செயல்படுகின்றன. ஒவ்வொரு முறை நாம் சிந்திக்கும் போதும், சிறிது பிராணன் இந்த நாடிகள் வழியாகப் போய் செயல்களைத் தூண்டுகின்றது. தியானம் செய்யும் போதும் இந்த இரண்டு நாடிகள் மட்டுமே செயல்படுகின்றன. இவ்வாறு செலவாகும் சிறிய அளவு பிராணன் போக எஞ்சிய பிராணன் ஆற்றலாகச் சேமிக்கப்படுகிறது. அதுவே குண்டலினி. இந்த குண்டலினி இயங்கவே சுழுமுனை நாடி உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு இந்த நாடி இறுதி வரை இயங்குவதே இல்லை. எனவே அவர்கள் பிராண சக்தியின் பெரும் பகுதி பயன்படுத்தப் படுவதில்லை. இந்த சுழுமுனை நாடியிலே தான் கீழிருந்து மேலாக ஆறு சக்கரங்கள் இருக்கின்றன.
மனதிற்கும் உடலுக்கும் இணைப்புப் பாலம் போல் பிராணன் செயல் படுகின்றது. பிராணனின் மூலமாகவே மனம் உடலைக் கட்டுப் படுத்துகிறது. பலவிதமான மன, உடல் நோய்களுக்கு பிராணனின் தவறான இயக்கமே காரணம். பிராணன் என்றால், பிரபஞ்சத்தில் உள்ள தூல, சூக்கும சக்திகள் அனைத்தின் கூட்டு சக்தியும் தொடக்கத்தில் இருந்த நிலைக்கு மாறிய நிலையில் பிராணன் என்று அழைக்கப் படுகிறது என்று சுவாமி விவேகானந்தர் மிகத் தெளிவாகக் கூறுகிறார். நமது வேதங்களும், தந்திரங்களும் பிரபஞ்ச சக்தியையே பிராணன் என்று கூறுகின்றன.
இடகலை, பிங்கலை நாடிகளின் இயக்கமே நம் மன ஓட்டத்தை தீர்மானிக்கிறது. அவை இரண்டும் நிதானமாக செயல்படும் போது மனம் விழிப்புடன் இருக்கும். அளவுக்கு மீறிய செயல்பாடு மனதில் அலை இயக்கத்தை அதிகமாக்கும். மெதுவாக இயங்கினால் மனம் மந்தமாக சோர்வடைந்து காணப்படும். இரண்டு நாடிகளும் செயலற்று நின்று விட்டால் மனம் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய்விடும். கனவு காணும் போது மீண்டும் இயங்க ஆரம்பிக்கும். இந்த இரண்டு நாடிகளும் தடங்களின்றும் இயைந்து செயல்படும் போது மனம் அமைதி அடைகிறது. இந்த நிலை தியானத்திற்கு மிகவும் உகந்தது. நம் தீவிர ஆசைகள், மனப் போராட்ங்கள் போன்ற வேறு சில புற, அக உணர்வுகளாலும் இவைகள் இரண்டும் இயைந்து செயல்படுவது தடைப்படுகிறது. பொதுவாக ஒரு நாடியைவிட மற்றது முரண்பாடாகவே செயல்படுகிறது. இதனால் எண்ணங்கள் தொடர்பில்லாமல் எழுகிறது, மனம் பதட்டமுறுகிறது. நமது உடலின் வெப்பநிலை, இரத்த அழுத்தம், உணவு செரிமாணம், தூக்கம் போப்ற எல்லாம் ஒரு குறிப்பிட்ட சுழற்சி மற்றும் ஒழுங்கு முறையில் நடை பெறுகின்றன. தாவரங்கள், விலங்குகள், மனிதன் எல்லாவற்றிற்குள்ளும் வியக்கத்தகு வகையில் இந்த சுழற்சி தினசரியாகவோ சில மாத சுழற்சியாகவோ இயங்குகின்றன. இந்த சுழற்சிகள் மனதை வெகுவாக பாதிப்பதாக விஞ்ஞானம் கண்டுபிடித்து உள்ளது. ஆனால் இதை முன்பே நம் முன்னோர்கள் கவனித்து அறிந்தார்கள். இந்த சுழற்சிகளுக்கும், பிராணனுக்கும், இடகலை, பிங்கலை நாடிகளின் செயல்பாட்டிற்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தார்கள். பிரம்ம முகூர்த்தம், சந்தியா வேளைகளில் இந்த இரு நாடிகளும் இயைந்து செயல்படுவதையும், அதனால் மனம் இந்த வேளைகளில் மிக அமைதியாகச் செயல்படுவதையும் உணர்ந்தார்கள். எனவேதான் இந்த நேரங்களை பிராணாயாமம், தியானம் போன்ற பயிற்சிகளுக்கு உகந்த நேரமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நம் உடலின் சில பகுதிகள் இச்சைச் செயல் நரம்புகளாலும், அனிச்சைச் செயல் நரம்புகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சில உறுப்புகள் இந்த இரண்டு நரம்பு மண்டலங்களாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவற்றில் நுரையீரலும் ஒன்றாகும். அதனால்தான் நம்மால் மூச்சைக் கட்டுப்படுத்தி அனிச்சை நரம்பு மண்டலத்தை நம் கட்டுக்குள் கொண்டு வர முடிகிறது. இதனால் நாம் இடகலை, பிங்கலை நாடிகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து பிராணனை வசப்படுத்த முடிகிறது. பிராணன் கட்டுப்படும் போது மனம் கட்டுக்குள் வந்து சம்ஸ்காரங்களாகிய செயல்கள் குறைந்து மனம் அமைதி அடைகிறது. இந்த இரு நாடிகளின் நேர் - எதிர் இயக்கம் நம் உடலின் உணர்வு மற்றும் உணர்வறு பகுதி மனங்களில் ஆற்றலாக செயல்படுகிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி நம் உடலை இயக்குகிறது. நம் பிராணனை அதிகம் செலவு செய்வது காமம் என்ற உணர்வால்தான். காமத்தை அடக்காதவரை தியானத்தில் வெற்றி அடைவது இயலாத காரியம்.காமத்தால் செலவாகும் பிராணனை மூலாதாரத்தில் சேமிப்பதால் மட்டுமே ஓஜஸ் சக்தி அதிகரிக்கும். இது அதிகரித்தால் மூளையில் மேதா என்கிற ஆற்றல் உருவாகும். இதனால் சாதகனின் ஆன்மிக ஆற்றல் பெருகுவதுடன், ஆன்மிக அனுபூதியும் பெற முடியும். இடகலை, பிங்கலை நாடிகள் தண்டுவடத்தின் கீழே மூலாதாரத்தில் இருந்து தொடங்கி ஒன்றை ஒன்று பிண்ணிக் கொண்டு ஒவ்வொரு சக்கரத்தையும் சுற்றி வளையம் உண்டாக்கி மேல் நோக்கி செல்கிறது. மேலே இணைவதில்லை. ஆனால் இடையே மூன்று இடங்களில் இணைகின்றன. அவற்றையே முக் கிரந்திகள் என்றழைப்பர். இவைகளை பிராணனின் ஓட்டத்தைத் தடுக்கும் தடைகளாகச் சொல்வார்கள். இந்த மூன்று முடிச்சுகளும் மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கின்றன. முதலில் பிரம்ம கிரந். இது தொப்புளுக்கு கீழே உள்ளது. இதில் பிராணன் தடைபடும் போது பசி, தாகம் போன்ற உணர்ச்சிக்கு ஆட்படுகிறது. புலன் இன்ப நாட்டம் அதிகரிக்கும். இரண்டாவது விஷ்ணு கிரந்தி. இது இதயத்துக்கு கீழே உள்ளது. இது உணர்ச்சி மையம். மனிதனது உணர்ச்சிகள் இங்கிருந்துதான் பெங்கி பிரவாகிக்கின்றன. மூன்றாவது ருத்ர கிரந்தி. இது அறிவு மையமாகும். இது புருவ மத்திக்கு கீழே உள்ளது. இந்த மூன்று கிரந்திகளும் மனித மனதை இயல்புணர்வு, அதிக உணர்வு, அறிவு உணர்வு என்ற மூன்று நிலைகளில் இயக்குகின்றன. ஆன்மிக உணர்வு என்பது இந்த மூன்று நிலைகளையும் கடந்தது. எனவேதான் அதை உணர்வு கடந்த நிலை என்கிறார்கள். ஆன்மிக சாதகன் இந்த மூன்று முடிச்சுகளையும் தளர்த்தி, பிராணனை இடகலை, பிங்களை நாடிகளில் சிரமமின்றி செயல்பட வைத்தால்தான் மன அமைதியைப் பெற்று சுழுமுனை நாடியைக் கண்டுபிடிக்கவோ, அறியவோ முடியும்.
 
Via FB மௌனத்தின் குரல்