''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு''

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:01 | Best Blogger Tips
Photo: என் தகப்பனார் அடிக்கடி என்னிடம் சொல்லும் வாக்கியம் ''கோபம் குல நாசம்.'' நம் முன்னோர்கள் ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்பார்கள்.
அதாவது புத்தி சரியாக இயங்காதவன் கோபப்படுவான் என்கிறார்களா ? அல்லது கோபப்படுபவனுக்கு புத்தி  வேலை செய்யாது என்கிறார்களா ? என்றால் கோபப்படுபவனுக்கு மூளை சரியாக இயங்காது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதை இப்போது விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. கிராமத்தில் பெரியவர்கள் கோபப்படாதே, அது உடலுக்கு நல்லதல்ல. உடலில் தேவையில்லாத இரசாயன மாற்றங்கள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லும் போது சிறுசுகள் நக்கலடிப்பார்கள். வந்துட்டாருய்யா விஞ்ஞானி என்று. அது உண்மை என்பது இன்று நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மை. என் குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ''நீ கோபப்படுவதால் எதிரிக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ இல்லையோ, உனக்கு பாதிப்பு நிச்சயம் ஏற்படும்'' என்பார். 
இந்த கோபம் வந்தால் டென்சன், எரிச்சல் போன்றவைகளும் கூடவே வரும். இரத்த அழுத்தம் அதிகமாகும். அட்ரீனலின் சுரப்பி அதிகமாக சுரக்கும். எனவே ஆக்சிஜனின் தேவை அதிகரிக்கும். பற்றாக்குறை ஏற்படும் போது ப்ளேட்லெட்ஸ் என்கிற திரவம் சுரக்கும். இந்த பிசுபிசுப்பான திரவம் இரத்தக் குழாய்களில் படிவதால் அடைப்பு ஏற்படும். இதன்காரணமாக இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன் மாரடைப்பு ஏற்படக் கூடும். இது ஒரே நாளில் உருவாகுவதல்ல. அடிக்கடி கோபப்படுவது, டென்சன் ஆவது, எரிச்சல் அடைவது, மன அழுத்தத்திற்கு ஆளாவது போன்றவற்றால் சிறுகச் சிறுக படிவுகள் ஏற்பட்டு இது நிகழ்கிறது. உணவுப்பழக்கமும் ஒரு காரணமாக இருந்தாலும், கோபத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவது நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்த முடிவுகளில் மேலும் அவர்கள் தரும் அதிப்படியான தகவல் என்னவென்றால், கோபத்தை வெளிக்காட்டுபவர்களைவிட, கோபத்தை அடக்குபவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதுதான். உடல் எடை அதிகமாக இருப்பது,மதுப் பழக்கம் போன்றவற்றையெல்லாம்விட அதிகமாக கோபப்படுவதால் மன அழுத்தம் ஏற்பட்டு இளம் வயதினருக்குக் கூட மாரடைப்பு வந்து விடுகிறது. மன அழுத்தம் ஏற்படும் போது சி - ரியாக்டிவ் புரோட்டின் என்கிற ஆபத்தான இரசாயனம் உருவாகிறது. மாரடைப்பு ஏற்படுவதில் 50% பேர் இந்த இரசாயனத்தால் ஏற்படும் மாரடைப்பால்தான் இறக்கிறார்கள் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. அதிலும் இளம் வயதினரே அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது வேனைக்குரிய விஷயம். ஏனென்றால் நெரிசல் மிகுந்த நகர வாழ்க்கையில் இந்த பாதிப்பிலிருந்து தப்பிப்பது அபூர்வம். இதற்கெல்லாம் தீர்வாக மருத்துவர்களும், மனோதத்துவ நிபுணர்களும் இப்போது சிபாரிசு செய்வது தியானமும், அதன் மூலம் பெறப்படும் அமைதியான மனநிலையையுமே. மேலும் உணவுப் பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்துவது இன்னும் ஆரோக்யமான அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்க வளமுடன்.
என் தகப்பனார் அடிக்கடி என்னிடம் சொல்லும் வாக்கியம் ''கோபம் குல நாசம்.'' நம் முன்னோர்கள் ''ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு'' என்பார்கள்.

Via FB மௌனத்தின் குரல்