சித்தர்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips
Photo: சரியைகிரியா யோகம் தான்ஞானம் பாராமல்
பரிதிகண்ட மதியதுபோல் பொறிஅழிந்தேன் பூரணமே !

அகங்காரமென்னும் பேயை ஒழித்தும், மனதை அழித்தும், மெய்யறிவை அறிந்து புத்தி தெளிந்தும், இம்முப்பாழையும் கடந்து சித்தத்தின்பால் சிந்தை ஊன்றி சிவத்தோடு கலந்திருப்பவர்கள் சித்தர்கள். எந்தவித களங்கமில்லாத, வேஷமில்லாத, இயல்பானவர்களாய் இருப்பதால், இந்த உலகாய வாழ்வில் வேஷதாரிகளாய் வாழும் நமக்கு அவர்கள் பித்தர்கள் போலத் தெரிவார்கள். ஊரே நிர்வாணமாக இருக்கும் போது, வேட்டி கட்டியவன் பைத்தியமதானே? சித்தத்தை அடக்கியவன் சித்தன். காணும் பொருள் எல்லாம் சிவமே என்றிருப்பவன் சித்தன். இப்படி பல விதமாக சித்தர்கள் பற்றி நூல்கள் சொல்கின்றன. இந்த வகையில் பல சித்தர்கள் இங்கே கடந்த காலங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களை பதிணெண் சித்தர்கள் என்று சொல்வார்கள். 
பக்தி முதல் தவம் முடிய பதினெட்டு நிலைகளையும் கடும் முயற்சியாலும், பயிற்சியாலும் கடந்து உண்மையை உணர்ந்தவர்கள் சித்தர்கள். ஆதியைத் தவிர மற்றெல்லாம் அழிந்தே தீரும் என்பதை உணர்ந்து தங்கள் உடலையும், உயிரையும் வந்த ஆகாய பூதத்திலே கரைத்து சமாதியில் வாழ்பவர்கள் சித்தர்கள். சில கோவில்களிலும், சிலைகளிலும் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறவர்கள். அவர்கள் சமாதியான இடங்கள் சக்தி களஞ்சியங்களாகத் திகழ்வது கண்கூடு.
பதினெட்டு சித்தர்கள் யாரெல்லாம் என்பதில் சில முரண்பாடுகள் உண்டு. அதைப் பற்றி தேடிப் பார்க்கும் போது ஓர் உண்மை புலனாகிறது. பதினெட்டு நிலைகளைக் கடந்தவர்கள் பதிணெண் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டார்களே அன்றி, சித்தர்கள் பல கோடி பேர்கள் உண்டு.
சரியை என்ற பக்தி, கிரியை என்ற தொண்டு, யோகம் என்ற வாசி, ஞானம் என்கிற தியானம் இவற்றின் அடிப்படையில் விளைவதே பதினெட்டு நிலைகள். அதாவது சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம். அடுத்து கிரியையில் சரியை, கிரியையில் கிரியை, கிரியையில் யோகம், கிரியையில் ஞானம். அடுத்து யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை, யோகத்தில் யோகம், யோகத்தில் ஞானம். அடுத்து ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆக மொத்தம் பதினாறு நிலைகளையும் கடும் முயற்சியால் பயின்று, கடந்து பதினேழாவது நிலையான தன்னையறிதலில் தன்னையும், தன்னுயிரையும் முழுவதுமாக உணர்ந்து, அறிந்து பதினெட்டாவது நிலையில் இறைவனோடு சமாதியில் ஒன்றி இருப்பவர்களே சித்தர்கள்.
இந்த பதினெட்டு நிலைகளையும் படிகளாக்கி அதனை கடும் முயற்சியால் கடந்து இறவா நிலை அடைந்து, அஷ்டமா சித்திகளையும் பெற்று மக்களுக்கு நன்மைகள் பல செய்தவர்களே சித்தர்கள். எனவே சித்தர்கள் பல கோடிபேர் இருப்பினும் பதினெட்டு நிலைகளையும் கடந்தவர்கள் யாவரும் பதிணெண் சித்தர்கள் என்று போற்றி வணங்கப்படுகின்றனர்.
சரியைகிரியா யோகம் தான்ஞானம் பாராமல்

Via FB மௌனத்தின் குரல்