சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:36 PM | Best Blogger Tips

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம் பங்கு என்ன?

சுற்றுச்சூழல்... இது நீங்களும், நானும், இன்ன பிற உயிர்களும் வாழத் தேவையான முக்கியமான நாடி. நிலம், நீர், காற்று, வெளி, நெருப்பு, உணவுச் சுழற்சி, வன உயிர்கள், விவசாயம், பருவ நிலை ஆகியவை வலையைப்போல சுற்றுச்சூழலில் பிணைக்கப்பட்டுஇருக்கிறது. இவற்றில் எந்த ஒரு கன்னி அற்றுப்போனாலும், அது நமக்கும். நம்மைச் சார்ந்த, சாராத உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும்.

நம் முன்னோர்கள் பாதுகாத்ததனால்தான் இன்று நமக்கு இயற்கை மிச்சம் வைத்திருக்கிறது. இன்று இருப்பதை நாம் பாதுகாத்தால் தான், நம் அடுத்த தலைமுறைக்கு எதையேனும் மிச்சம்வைக்க முடியும். ஆகவே, சுத்தமான நீர், சுத்தமான காற்று, சுத்தமான நிலம் ஆகியவற்றைப் பராமரிப்பது அனைவரின் பொறுப்பு.

சுற்றுச்சூழல் பாதுகாக்க சில எளிய குறிப்புகள்...

வீடு, அலுவலகங்களில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

வீடு கட்டும்போது முழுக்கவும் கான்க்ரீட்டால் கட்டாமல், வீட்டின் பின்புறம் சிறு  தோட்டம் அமைத்து செடிகள் வளர்க்கலாம்!

டிராஃபிக்கில் இருக்கும்போது வண்டியை 'ஆஃப்’ செய்துவிடுங்கள்!

குளிர் சாதனப் பெட்டிகளை அதிகமாக உபயோகிக்காதீர்கள்!

வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தனியாகப் பிரித்துவைக்கலாம்!
 கூடுமானவரை சொந்த வாகனங்களைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து  வசதிகளைப் பயன்படுத்தலாம். சைக்கிள் உபயோகிப்பது இன்னும் சிறப்பு!

கடைகளுக்குச் செல்லும்போது பை எடுத்துச் செல்லலாம். அங்கு சென்று    பிளாஸ்டிக் பைகளை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள்!

ஒரு முறை உபயோகப்படுத்திய பொருட்களை மீண்டும் இன்னொரு முறைப்பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். முடிந்தால் அதை நடைமுறைப்படுத்துவது  நல்லது!

மறுசுழற்சி செய்யத்தக்க பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது செலவுகளைக் குறைப்பதுடன் சூழலையும் பாதுகாக்கும்!

கணினியில் பிரின்ட்-அவுட் எடுக்கும்போது ஒரு தாளின் இரண்டு பக்கத்தையும்    பயன்படுத்தலாம். இதனால் பேப்பர் பயன்பாடு குறையும்!

 பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சிறு குழுக்களை ஏற்படுத்தி   சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தலாம்!

- இவை எல்லாம் அடிப்படை விஷயங்கள். இவற்றை நீங்கள் பின்பற்றினாலே சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்காற்றுகிறீர்கள் என்பது தெளிவாகும்!
(ஆனந்த விகடன்)

சுற்றுச்சூழலைப் பாது காக்க நாம் செய்ய வேண்டியது என்ன? தவிர்க்க வேண்டியது என்ன? அலசுவோம்.

Via Vikatan EMagazine