கைகளை அழகாக்குவதற்கான 10 எளிய டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:25 PM | Best Blogger Tips


பெரும்பாலும் நம் வீட்டு பெரியவர்கள் நம் கைகளையும் கால்களையும் கழுவி சுத்தமாக இருக்கச் சொல்வார்கள். அதிலும் முக்கியமாக வெளியே வேலை பார்த்தோ அல்லது விளையாடி விட்டு வந்தாலோ, நிச்சயம் கழுவிய பின்னர் தான் வீட்டிற்குள்ளேயே அனுப்புவார்கள். அது சுத்தத்திற்கு மட்டுமல்ல, கைகள் மற்றும் கால்களுக்கு பாதுகாப்பை அளிக்கவும் தான்.

பெரும்பாலான வேலைகளை செய்வதற்கு கைகள் அவசியமானதாக இருப்பதால், அவைகளை நன்றாக பராமரித்து அதிக அழுத்தம் தராமல் பாதுகாக்க வேண்டும். அப்படி பாதுகாத்தால் பார்ப்பதற்கு அழகாகவும், மென்மையாகவும் இருக்கும். ஆகவே அதற்கு கீழ்க்கூரிய 10 டிப்ஸை பின்பற்றினால், கைகள் அழகாக ஜொலிக்கும்.

ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளுதல்
 
மாய்ஸ்சுரைசரை தினமும் மூன்று முறையாவது கைகளில் தடவ வேண்டும். அதிலும் தடவும் முன் கைகளை தண்ணீரில் நன்கு கழுவிட வேண்டும். கோடைக்காலத்தில் எண்ணெய் பசை குறைவாக உள்ள மாய்ஸ்சுரைசரையும், குளிர் காலத்தில் எண்ணெய் பசை அதிகமுள்ள மாய்ஸ்சுரைசரையும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குளிர் காலத்தில் சீக்கிரமாகவே சருமம் வறண்டு போவதால், சற்று அதிகமாகவே மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம்.

கைகளை குஷிப்படுத்துதல்
 
மாதம் ஒரு முறை மெனிக்யூர் செய்வதால், கைகள் சுத்தமாகவும், கைகளைச் சுற்றியிருக்கும் இறந்த செல்களை வெளியேற்றுவதோடு, தேவையான அளவு மசாஜும் கிடைக்கும். மேலும் இது கைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்கான ஒரு வழி என்று கூட சொல்லலாம்.

கைகளை கழுவவும்
கைகளை கழுவும் போது, எப்போதுமே வெதுவெதுப்பான தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். அதிக வெப்பம் அல்லது மிகவும் குளிர்ந்த நீரில் கைகளை கழுவினால் சருமம் பாதிக்கப்படும். பாத்திரம் கழுவும் சோப்புகளை பயன்படுத்தி கைகளை கழுவவே கூடாது. அது சருமத்தை வெகுவாக பாதிக்கும். மேலும் சருமத்தை வறண்டு போகச் செய்யும்.

அழுத்தித் தேய்க்க வேண்டும்
 
கைகளில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதற்கு பயன்படும் ஜெல்லைப் பயன்படுத்தி, கைகளை வாரம் ஒரு முறையாவது அழுத்தி தேய்க்க வேண்டும். ஒருவேளை அதனை வாங்க நேரமில்லையா? கவலையை விடுங்கள். வீட்டிலேயே ஒன்றை தயாரித்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை, சிறிது எலுமிச்சை பழச் சாற்றில் கலந்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனைக் கொண்டு கைகளை தேய்த்து கழுவலாம். டிப்ஸ்: ஆலிவ் எண்ணெய் சேர்க்காமலும் கூட தேய்க்கலாம். அதிலும் எண்ணெயை பயன்படுத்தியிருந்தால், கைகளை மிருதுவான சோப்பை வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். எண்ணெய் கலக்காத ஜெல்லைப் பயன்படுத்தியிருந்தால், நேரடியாக கைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உலரச் செய்யதால் போதுமானது.

மசாஜ்
 
தினசரி இரவு படுக்கும் முன், குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது கைகளை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், மாய்ஸ்சுரைசர் கைகளில் நன்றாக ஊடுருவி, கைகளை வறட்சியின்றி வைக்கும். மிகவும் சொரசொரப்பாக இருக்கும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசருடன் சிறிது வேஸ்லினை சேர்த்து தடவினால், இரவு முழுவதும் கைகள் பாதுகாப்பாக இருக்கும்.

கைகளை பாதுகாப்பாக
 
வைக்கவும் பாத்திரம் கழுவும் போதும், தோட்ட வேலையில் ஈடுபடும் போதும், இரசாயனங்கள், க்ரீஸ் அல்லது அழுக்கு சம்பந்தப்பட்ட பொருட்களைத் தூக்கும் போது கைகள் பாதுகாப்பாக இருக்க இரப்பர் கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

நகம் வளர்த்தல்
 
மற்றும் சீராக்குதல் கைகளில் நகம் வளர்த்தால், அதனை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால் நக அடுக்குகளில் பிரிவு ஏற்பட்டு, தண்ணீர் உள்ளே சென்றால், நாளடைவில் நகம் உடைந்து வெளிவந்துவிடும். மேலும் நகத்தை இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது சீர்படுத்தி பராமரிக்க வேண்டும்.

நெயில் பாலிஷ்
 
நகங்களுக்கு நெயில் பாலிஷ் போடும் போது, நகத்தின் மேல் அடுக்குகளில் கரை படியாத நெயில் பாலிஷை பயன்படுத்துங்கள். அதிலும் மேல் அடுக்குகளுக்கு ஒரு முறை பாலிஷ் செய்தால், அது பல நாட்கள் நீடிக்கும்.

சருமத்தை பாதுகாக்கவும்
 
நல்ல தரமுள்ள சரும கிரீம் அல்லது எண்ணெயை பயன்படுத்தினால், சருமம் சொரசொரப்பாவதையும், வறண்டு போவதையும் தடுக்கலாம். இதற்கு மாற்று எதாவது உண்டா என்று கேட்கலாம். ஆம் இருக்கிறது, சிறு துளி கிளிசரினை கைகளுக்கு தடவி இரவு முழுவதும் ஊற விட வேண்டும். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவவும். இதனால் கைகள் மென்மையாக இருப்பது உறுதி.

நன்றாக சாப்பிடவும்
 
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்ப முக்கியம். புரதம், வைட்டமின் பி,  

வைட்டமின் கொண்ட உணவுகளை உட்கொண்டால், வளமுள்ள திடமான  

நகங்கள் வளரும். மேலும் அது கைகளை பாதுகாத்து மென்மையாகவும் இருக்கச்  

செய்யும்.

thanks to Thatstamil