ஷேர் மார்க்கெட் ஒரு சின்ன கதையிலே

மணக்கால் அய்யம்பேட்டை | 6:29 PM | Best Blogger Tips
ஷேர் மார்க்கெட் ஒரு சின்ன கதையிலே
ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாலு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு. அதாவது அவர் குரங்கு வியாபாரம் பன்றதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டே குரங்கு பிடுச்சு குடுக்க்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வோவுறு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கற தாகவும் சொன்னாரு..

இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்சா அளவுக்கு காட்டுல போய் குரங்கு புடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கி கிட்டாங்க. கிட்ட தட்ட ஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சி போச்சு.. இப்ப அந்த வியாபாரி, ஒவ்வோவுறு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு... உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்சா அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்கலாம்.

இப்படியே ஒரு ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒரு குரங்கு இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்.. நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னு... நான் வர வரைக்கும் இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்கு எல்லாம் அப்படியே tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்கு கூட இல்ல... காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே... என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..
அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A. வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க.. உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பாத்திரமா என்கிட்டே இருக்கு.. என் முதலாளி வரர்த்துக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடுங்கன்னு சொன்னாராம்..

திருப்பியும்... ஊர் மக்கள் எல்லாம் அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்னு எண்ணத்தோட...

இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் escape... ஊரு புள்ள இப்போ குரங்கா தான் இருக்கு.
It  is true that stocks market doesn't reflect the real values of stocks. The real worthiness of the stock is indicated by its book value. 'Supply-Demand' only decides the value of the stock in the stocks market. (Like in the realty where there are some places available for prices less than Govt's guideline values due to poor demand, some stocks are traded for less prices than their book values)
It is an underlined fact that stocks market is a game-field where there is a winner in one hand and a loser on the other. We can aim to be on the winning side and have to do continuous homework to be there. Obviously, as in the Kirchoff's first law, the sum total of trading is always zero.
 Like I said before, by appropriately timing one's acquaintance with the market, one can make resonably better gains. Stocks market has to be viewed  as an (additional) avenue for investment and should not be perceived as a platform for minting money from (day) trading. The latter case will invariably lead to disaster for being tiny players in front of big croc like operators. Warren Buffet falls in the first case and has unquestionably accumulated tons of wealth out of stocks.