உறவுச் சிக்கல் இடைவெளி ரிலேஷன்ஷிப்
பெற்றோர்- பிள்ளைகள் உறவுச் சிக்கல்!
வீடு,
கல்லூரி, சமூகம் என ஒவ்வொன்றிலும் இருக்கும் இடைவெளிகளை அணுகும்
முறைபற்றிச் சொல்கிறார் மதுரை சமூக அறிவி யல் கல்லூரியின் முதல்வர் நாராயண
ராஜா!
பெற்றோர் - பிள்ளை
இடைவெளியை நிர்வகிக்க...
பெற்றோர்களுக்கு...
உங்கள்
பிள்ளைகளைக் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகப் பெயரளவில் மட்டுமல்லாமல்;
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசிப்பது
அவர்களுக்குள் நம்பிக்கையை வளர்க்கும்!
தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்!
பிள்ளைகளின் ஆர்வத்துக்கு மதிப்பு அளியுங்கள்!
பிள்ளைகளுக்கு...
பெற்றோர்கள்
சொல்வது சரிதானா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை மனதில் ஓட்டி, அது
சரிதான் என்றால் அதன்படி செயல்படுங்கள். 'இவுங்களுக்கு ஒண்ணுமே புரியாது.
எல்லாம் ஜெனரேஷன் கேப்' என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்!
பெற்றோரிடம்
ஆலோசித்துவிட்டுச் செய் கிறேன் என, உங்களால் தீர்க்க முடிகிற சின்னச்
சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!
குடும்ப
உறவுகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் உங்களின் பங்கு என்ன என் பதை
உணர்ந்துவிட்டால், பெற்றோர்களுக்கு உங்களைப்பற்றிய கவலை பாதி குறையும்!
நீங்கள் எப்படி?
யாரோடும்
சேராமல் தனித்துச் செல்பவரா? நான்கு பேர் சிரித்துப் பேசிக்கொண்டு
இருக்கும் இடத்தைத் தவிர்ப்பவரா நீங்கள்? எதிர்மறை எண்ணங்களி னால் அடிக்கடி
அப்செட் ஆகும் நபரா? 'என்னை யாரும் மதிக்கவில்லை. என் கருத்துக்களுக்கு
அங்கீகாரம் அளிக்கவில்லை!' என்றெல்லாம் அலுத்துக்கொள்பவரா?
ஆம்
எனில், நீங்கள் 'இடைவெளி விட்டுப் பழகுகிறேன்' என்ற போர்வை யில், சுய
கழிவிரக்கத்தை வளர்த்து வரு கிறீர்கள். அதை உடனடியாகத் தவிருங் கள்!
யார் உங்கள் திறமையைக் குறை கூறினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்!
ஒருவேளை
உங்கள் திறமை நிரா கரிக்கப்பட்டால், உடனே கோபத்தில் வெம்பாமல், அடுத்தவர்
மன நிலையில் இருந்து 'என்னப் பிரச்னை' என்பதை ஆராய முயற்சியுங்கள்!
அவ்வப்போது*உங்கள் திறன் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்!
அனைவருடனும்
கலகலவெனக் கலந்து பழகுங்கள். அது உறுதியான முடிவுகள் எடுக்கவும்,
அடுத்தவர்களின் மன நிலையைப் புரிந்து செயல்படவும் வசதியாக இருக்கும்!
ஆசிரியர் - மாணவர் கூட்டணி தத்துவம்!
ஆசிரியர்களுக்கு...
மாணவர்களிடையே
உங்களை நல்ல ஆசிரியராக வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் செய்யும் தவறுகளைக்
கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு. அது உங்கள் இருவரையுமே பாதிக்கும்!
மாணவர்களிடம்
தோழமையாகப் பழகுகிறேன் என்று அதிகம் நெருங்கினால், ஒரு நல்ல விஷயத்தை
நீங்கள் சொன்னால்கூட, அதைக் கேட்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆகவே
கொஞ்சம் 'டஃப்னஸ்' இருப்பது நல்லது!
தொடுதல்,
தோள் தட்டுதல், முதுகு தட்டுதல் போன்ற எந்த ஓர் உடல்ரீதியான செயல்களையும்
கூடிய மட்டும் தவிர்ப்பது நலம். குறிப்பாக, எதிர்பாலினரிடத்தில்!
மாணவர்களுக்கு...
எந்த
ஓர் ஆசிரியரிடத்தில் நீங்கள் நெருங்கிப் பழகினாலும் அது இன்னோர்
ஆசிரியருக்கு எரிச்சலையும் ஈகோவையும் ஏற்படுத்தும். இடம், பொருள், காலம்
அறிந்து செயல்படுக!
'நம்ம சார்தானே...' என்று அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றிய எந்த ஒரு விசாரணையிலும் இறங்காதீர்கள்.
கூடிய மட்டும் 'இன்டலெக்சுவல் ரிலேஷன்ஷிப்'பை உருவாக்க முயலுங்கள்!