பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…
என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி , நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல , சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.
திடும் … திடும் … திடும் …
கலாச்சாரக் காவலர்கள் , கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!
சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில் , கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.
அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க " உன் வாழ்க்கை உன் கையில் " னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள் , அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.
ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல் , காலேஜ் , வேலைக்குப் போயி , கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.
வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. ( இங்க " செட்டில் " ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும் , சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)
பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம் , மத சடங்குகளைத் தவிர்த்து , பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க , சில வீட்டுல ஒத்தப்படை , கண்டம் , திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.
நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா " அழுத புள்ளைக்குதான் பால் " னு புரிஞ்சுக்கிட்டு , வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் " இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன் , ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன் " னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா , கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு " அப்புறம்.. , இவனுக்கு எப்போ " னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.
ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து , " சரி உனக்குப் பாக்கலாமாப்பா " னு கேட்டா மட்டும் , உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி " ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம் " னு சலிச்சுக்குவானுக.
அவங்களும் " வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா " ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே ? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு " சரி என்னமோ பண்ணுங்க போங்க " அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான
ஆனா " என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது ?" ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.
முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு " சின்ன வீடு " பாக்யராஜ் மாதிரி , சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய , திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு , பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும் , உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும் , பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும் , பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும் , அப்படி , இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.
நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும் , ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும் , ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும் , ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும் , ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. ( இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)
ஆனா ஒண்ணுங்க , இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ , பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.
இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு " எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும் " னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி " பெரியவங்க , நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும் , அத நான் ஏத்துக்கறேன் " னு கால்லேயே விழுந்திருவாங்க.
ஏன்னா , ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால " ஆயிரத்தில் ஒருவன் " மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.
என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட் , ரயில்வே ஸ்டேஷன் , சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.
சின்ன வயசுல , " வாடா , கல்யாணத்துக்குப் போகலாம் " னு கூப்பிட்டா , " வேற வேலை இல்லை உங்களுக்கு " ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , " ஏம்மா , இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா , ஒரு பத்திரிகைக் கூட வரலே " ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா , எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும் , இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.
ஆக " ஒரு கல்யாணத்துக்கோ , கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன் , குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன் " ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.
முதல கட்டமா " தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா " ன்னு வீட்டுல கேப்பாங்க.
ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி , அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.
" மாப்ள , என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா " ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா , " சோலோ " அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே ? ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம , அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.
" ப்ளீஸ்டா , மறுபடியும் எட்றா , தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன் " னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க …
கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும் , ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும் , தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.
இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க , உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.
இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. " நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன் , நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே " ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300 ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா , ரகம் ரகமா ட்ரை பண்ணி , ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.
சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி , சாந்தமா முகத்துல பால் வடிய , ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.
அடுத்து பயோடேட்டா , ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட் , மங்கள சந்திப்பு , சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி , இத்யாதி)
இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும் , கனிவாவும் , கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப " என்ன பாஸ் , உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல ? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல ?" னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (" இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு " னு சொல்லவும் முடியாது)
எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா , இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி , அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி , லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி , அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே , அதாங்க ஜோசியரு , அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு , " ரெண்டு பொருத்தம் கூட இல்ல , மீறிப் பண்ணி வெச்சா 2012 ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம் " ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.
இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு , இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக , என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.
ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி , வெறப்பா " மணல் கயிறு " கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gate ஆ மாத்திப் பாப்பாங்க , அப்புறம் நாள்பட , நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில " பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது , பந்தம் கெடச்சாக் கூடப் போதும் " னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம் , காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.
ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி , ஜோசியர் சார் ஓகே பண்ணி , ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம் , முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள் , கொஞ்சம் உபசரிப்பு , சில சுய தம்பட்டம் , " அது தெரியுமா , இது தெரியுமா ", " இது புடிக்குமா , அது புடிக்குமா ", இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.
இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா , பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன ? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.
ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா , பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ , நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன ?
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா , வேறே ஏதும் இருக்கா ?
சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே , ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா " சங்கீத ஸ்வரங்கள் " னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.
இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க , பேட்டரி மாத்தி , சிம் மாத்தி , போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது , விடிய விடியப் பேசறது , விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறதுன்னு , தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.
போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ , பீச்சுக்கோ , பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ , தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.
இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும் , வீரவசனம் பேசிய பல ' மௌனம் பேசியதே ' சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு , சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கல்யாண நாள் நெருங்க நெருங்க , பத்திரிகை விநியோகம் , புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.
இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி , "Please consider this as my personal invite" னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து , " மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே " ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு , அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.
எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும் , கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.
சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன ?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல ( Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான்.
மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா ….. ற்றதுக்குத் தயாராகுங்கள்!