'ஹெல்த் கான்ஷியஸ்னஸ்' அதிகமாகி வரும் இக்கால கட்டத்தில், கொலஸ்ட்ராலைக்
கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுவது... எண்ணெய்
பயன்பாட்டை குறைத்துக் கொள்வதுதான். இதற்கு உங்களுக்கு கைகொடுக்க வருகிறார்
'சமையல்கலை நிபுணர்' நங்கநல்லூர் பத்மா. புரோட்டீன் ரிச் உசிலி,
வடிகஞ்சி சூப், குழல் புட்டு என்று சத்தும், சுவையும் மிக்க ரெசிபிகளை
அள்ளித் தந்து அசத்தியிருக்கும் அவர், ''சிலவற்றைத் தாளிப்பதற்கு மட்டும்
சில துளி எண்ணெயைப் பயன்படுத்தியிருக்கிறேன். மற்றபடி எண்ணெய் பயன்பாடு
ஜீரோதான். அதேசமயம், சுவையில் துளியும் குறை வைக்காமல் விதம்விதமான
அயிட்டங்களை தந்திருக்கிறேன். குறிப்பாக, மல்டி கடலை உருண்டை, வெஜிடபிள்
ஸ்பெகட்டி, மல்டி பழ டெஸட் போன்றவற்றைச் செய்து குழந்தைகளுக்குக்
கொடுத்தால், தட்டு காலியாகும் வேகத்தைக் கண்டு மூக்கில் விரல் வைத்து
ஆச்சர்யப்படுவீர்கள்'' என்று உத்தரவாதம் தருகிறார். அவருடைய ரெசிபிகள்,
செஃப் ரஜினியின் அலங்கரிப்போடு இங்கே இடம்பெறுகின்றன.
களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!
செய்முறை:
வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி,
உருட்டும் பதம் வந்ததும் (தண்ணீரில் போட்டால் உருட்டும் பதம்) இறக்கவும்.
பாதாம், பிஸ்தாவை சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும். முந்திரியைப்
பொன்னிறமாக வறுத்து... உடைத்த பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலை, வறுத்த
வேர்க்கடலையுடன் சேர்த்து, பாகுடன் கலக்கவும். ஏலக்காய்த்தூள் தூவி, சிறு
உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.
செய்முறை: கோதுமை
மாவுடன் உப்பு, பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.
வெந்தயக் கீரையை ஆய்ந்து, பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்துப் பிசைந்து,
சப்பாத்திகளாக இட்டு வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.
செய்முறை: நெல்லிக்காயை
வில்லை வடிவமாக சீவவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பை மிதமான
தீயில் வைத்துக் கிளறி பாகு காய்ச்சி நெல்லிக்காயும் சுருங்கும் சமயம்
அடுப்பை நிறுத்தவும். நன்கு ஆறியவுடன் தேன் விடவும்.
குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து
அரைக்கவும். இதில் உப்பு சேர்த்துக் கிளறி, கொதிக்கும் நீரில் சிறு
உருண்டைகளாக உருட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி.... பச்சைப் பட்டாணி, நறுக்கிய கேரட்,
தக்காளி, உப்பு சேர்த்து வேகவிடவும், தனியாத்தூள், கரம் மசாலாதூள்
சேர்த்துக் கலந்து, மிளகாய், தேங்காய் துருவலை அரைத்துச் சேர்த்து,
கொதிக்கவிட்டு இறக்கவும். தேங்காய்க்கு பதில் தேங்காய்ப்பாலும்
சேர்க்கலாம்.
குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.
செய்முறை: கறுப்பு
எள், வெள்ளை எள் இரண்டையும் தனித்தனியாக வெறும் வாணலியில்
வறுக்கவும். வெல்லத்தை கரைத்து கடாயில் விட்டு கெட்டியாக வரும் பதத்தில்
பாகு காய்ச்சவும். வறுத்த எள்ளை தனித்தனியாக பாகுடன் சேர்த்து,
ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.
செய்முறை: அரிசியை
நன்கு ஊற வைத்து, கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கிளறவும். மாவை
சிறு உருண்டைகளாக உருட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, உருண்டைகள் வெந்து
மேலே மிதந்துவரும் சமயத்தில் எடுத்து சேவை அச்சில் போட்டுப் பிழியவும்.
நன்றாக சுத்தம் செய்து துருவிய மற்றும் நறுக்கிய காய்கள், நறுக்கிய
கொத்தமல்லி ஆகியவற்றை அப்படியே சேவையின் மேல் தூவி சாப்பிடலாம்.
தேங்காய்ப்பாலை மேலே ஊற்றி சாப்பிடால் சூப்பர் டேஸ்ட்டில் இருக்கும்.
குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்! பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.
செய்முறை: அரிசியைக்
களைந்து, தண்ணீரில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து வரும்போது
கஞ்சி வடிக்கவும். அதில் தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், உப்பு
சேர்க்கவும். பிறகு மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து, சிறிது சோள மாவை
கரைத்து சேர்த்துக் கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
சாப்பிடும்போது ரஸ்க்கை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்துச் சாப்பிடவும்.
குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
செய்முறை: எல்லா பழங்களையும் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு பிளேட்டில் பரவலாக போட்டு, தேன் ஊற்றி அப்படியே சாப்பிடவும்.
குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!
காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய
பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, சோளம், கறிவேப்பிலை, பூண்டுப் பல், காய்ந்த
மிளகாய், தோல் சீவிய இஞ்சி எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து
அரைத்து... உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாக
அல்லது இட்லி வடிவத்தில் தட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில்
வேகவிட்டு எடுக்கவும். ஆறியவுடன் நன்கு உதிர்க்க வரும்.
குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.
செய்முறை: கேழ்வரகு
மாவை வறுத்து, சிறிது தண்ணீர் விட்டு நைஸாக கரைக்கவும். சர்க்கரையை
தனியாக அரைத்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, வறுத்த முந்திரிப்பருப்பு,
ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் கலந்து உருண்டை பிடிக்கவும்.
குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.
செய்முறை:
கேரட்டை நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், குடமிளகாயையும் மெல்லியதாக
நீளவாக்கில் நறுக்கி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்க்கவும். அடுப்பை
மிதமான தீயில் வைத்து, காய்கறிகளை கடாயில் போட்டு, மூடி வேக வைக்கவும்.
பின்பு தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துச் சேர்த்து,
தேங்காய்ப்பால் விட்டு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.
செய்முறை:
புட்டு மாவில் இளம் சூடாக தண்ணீரைத் தெளித்து, நன்கு பிசிறிக் கொள்ளவும்.
பிறகு புட்டு வேக வைக்கும் குழாயில் சிறிது மாவை நிரப்பி. அதன் மேலே
தேங்காய் துருவல், பிறகு மாவு, பிறகு நேந்திரம்பழத் துண்டுகள்... இப்படி
மாற்றி மாற்றி அடைத்து, வேக வைத்து எடுக்கவும். குழல் வடிவத்தில்
இருக்கும் இந்தப் புட்டை கைகளால் பிசைந்து சாப்பிடலாம்.
குறிப்பு: மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.
செய்முறை:
காராமணியை லேசாக வறுத்து 2 மணி நேரம் ஊற வைத்து... குக்கரில் வைத்து,
இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய்,
தனியா, கடலைப்பருப்பை வறுத்து அரைத்து, வேக வைத்த காராமணியில் சேர்த்து,
உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
செய்முறை: இட்லி
மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம்
சேர்த்துக் கலக்கவும். சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால்
மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.
செய்முறை: அகத்திக்கீரையை
ஆய்ந்து, பொடியாக நறுக்கி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். சிறிது
வெந்தவுடன் உப்பு சேர்த்து மேலும் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு
கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தேங்காய் துருவல், வேகவைத்த கீரை
சேர்த்து வதக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும். கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.
தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளியைக்
கரைத்து கடாயில் விட்டு, சாம்பார் பொடி உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை
நறுக்கிப் போட்டு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதித்ததும்
பைனாப்பிள் துண்டுகள் போட்டு, வேக வைத்த பருப்பை கரைத்து விட்டு, கடுகு
தாளித்து, பெருங்காயத்தூள், கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.
செய்முறை: பெரிய
நெல்லிக்காயை சீவி... உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து,
தயிரில் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து இதில் கொட்டவும்..
குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி' உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: முருங்கைக்
கீரையை உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவல், சீரகம், பச்சை
மிளகாயை அரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். வேக வைத்த பாசிப்பருப்பை
சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து
இதில் கொட்டவும். நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.
செய்முறை: தனியா,
காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு மூன்றையும் வறுத்து பொடித்துக்
கொள்ளவும். கத்திரிக்காயை சுட்டு, தோல் உரித்து, நன்கு பிசையவும்.
புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து, பிசைந்த கத்திரிக்காய், உப்பு
சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து, வெல்லத்தை போட்டு
கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: அரிசி உப்புமாவுக்கும், பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.
செய்முறை: சிவப்பு
காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேகவிடவும். வெல்லத்தை பாகுகாய்ச்சி,
வடிகட்டி, உருட்டும் பதம் வந்ததும் வேக வைத்த காராமணி சேர்த்துக்
கிளறவும். ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து மேலும் கிளறி
இறக்கவும்.
குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
செய்முறை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய்
எல்லாவற்றையும் வெறும் காடயில் வறுத்து, உப்பு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக
அரைக்கவும்.
குறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.
குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பாசிப்பயறை பொன்னிறமாக வறுத்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். பயறு
குழையாமல் வேக வேண்டும். காடயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு,
காய்ந்த மிளகாய் தாளித்து... பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து,
பயறு, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.
செய்முறை: வெறும்
வாணலியில் கறிவேப்பிலை, வேப்பம்பூ, சீரகம், உளுத்தம்பருப்பு,
சுண்டைக்காய் வற்றல், கடுகு, சுக்கு, மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக
வறுக்கவும். அவற்றுடன் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் நைஸாக
அரைக்கவும்.
குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
செய்முறை: அவலை
நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டவும். வெல்லத்தை தூள் செய்து சேர்த்து,
தேங்காய் துருவலையும் சேர்த்து, ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும்.
பாலைக் காய்ச்சி ஆற வைத்து, அவலுடன் சேர்க்கவும்.
குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்
செய்முறை:
அரிசியை ஒரு மடங்குக்கு இரு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து 2
விசில் வந்ததும் இறக்கவும். புதினாவையும் வெங்காயத்தையும் வதக்கவும்.
வதக்கிய வெங்காயம், புதினா,பொட்டுக்கடலை, வேர்க்கடலை, நெய் ஆகியவற்றுடன்
சாதத்தைச் சேர்க்கவும். கடுகு, சீரகத்தை எண் ணெயில் தாளித்து சாதத்தில்
கொட்டி, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
செய்முறை: பூண்டை
தோல் உரித்து, நசுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு
கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பூண்டு சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள்,
பெருங்காய்த்துள் போட்டு... பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து
நன்கு கலக்கவும்.
குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.
செய்முறை: ஸ்பெகடியை
உடைத்து வேகவிட்டு தண்ணீரை வடிக்கவும். தக்காளி, குடமிளகாய்,
கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி, பச்சைப்
பட்டாணி சேர்த்து எண்ணெயில் வதக்கவும். பிறகு உப்பு போட்டு, வேக வைத்த
ஸ்பெகட்டியுடன் சேர்த்து, கொத்தமல்லி தூவவும்.
குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!
களத்தில் இறங்குங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!
மல்டி கடலை உருண்டை
தேவையானவை:
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 100 கிராம்,
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 10, வெல்லம் - 250 கிராம், ஏலக்காய்த்தூள்
- சிறிதளவு.குறிப்பு: பள்ளிக் குழந்தைகளுக்கு மாலை வேளைக்கேற்ற சத்தான உருண்டை இது.
வெஜிடபிள் கலவைக் கூட்டு
தேவையானவை: பாசிப்பருப்பு
- ஒரு கப், கேரட், சிறிய புடலங்காய், பச்சை மிளகாய் - தலா 1, பீன்ஸ் -
10, பச்சைப் பட்டாணி - 100 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், சீரகம் -
ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.செய்முறை: கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். புடலங்காய், பீன்ஸையும் தனித்தனியே சிறு துண்டுகளாக நறுக்கவும். கேரட், பீன்ஸ், புடலங்காய், பச்சைப் பட்டாணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துச் சேர்க்கவும். பாசிப்பருப்பை வேக வைத்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து, தாளிக்கும் பொருட்களைத் தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: சூடான சாதத்தில் இந்தக் கூட்டை கலந்து சாப்பிடலாம் சைட் டிஷ் தேவை இல்லை.
மேத்தி ரொட்டி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெந்தயக்கீரை - ஒரு கட்டு, பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு,குறிப்பு: பால் சேர்ப்பதால் எண்ணெய், நெய் எதுவும் வேண்டாம். இதற்கு ஆனியன் ரெய்தா சிறந்த காம்பினேஷன்.
தேன் நெல்லிக்காய்
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 10, தேன் - 100 மில்லி, சர்க்கரை - 200 கிராம்.குறிப்பு: தினமும் இரு துண்டு சாப்பிட்டால்... ரத்த சோகையைத் தடுக்கும்.
நீர்க் கொழுக்கட்டை
தேவையானவை: புழுங்கல் அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: தேங்காய் சேர்த்து அரைத்து இருப்பதால், சுவையாக இருக்கும். ஊறுகாய், இட்லி மிளகாய்ப்பொடி ஆகியவை இதற்கு சிறந்த காம்பினேஷன். சட்னியும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் குருமா
தேவையானவை: தக்காளி
- ஒன்று, கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - 100 கிராம், உருளைக்கிழங்கு -
2, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன். உப்பு - தேவையான
அளவு.குறிப்பு: கரம் மசாலா பிடிக்காதவர்கள்... புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சிறிதளவு சேர்த்து அரைத்து கொதிக்கவிடலாம்.
எள் உருண்டை
தேவையானவை: கறுப்பு எள் - 100 கிராம், வெள்ளை எள் - 100 கிராம், வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.குறிப்பு: எள் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பருவ வயது வரும்போது எள்ளை பெண் குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வலுவடைய செய்யலாம். எள்ளை துவையல், பொடி என்று சமையலில் பலவிதமாக பயன்படுத்தலாம்.
வெஜிடபிள் இடியாப்பம்
தேவையானவை: இட்லி
அரிசி - அரை கிலோ, பொடியாக துருவிய கேரட் - அரை கப், பொடியாக நறுக்கிய
ஸ்பிரிங் ஆனியன் - ஒரு கப், கோஸ் (துருவியது) - அரை கப், நறுக்கிய
கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான
அளவு,குறிப்பு: பச்சைக் காய்களும் வெந்த இடியாப்பமும் தனி ருசிதான்! பச்சையாக சாப்பிடக்கூடிய பயிறு வகைகள், இனிப்பு சோளம் சேர்த்தும் கலந்து கொடுக்கலாம். வேக வைத்த காய்களும் சேர்த்து சாப்பிடலாம்.
வடிகஞ்சி சூப்
தேவையானவை:
அரிசி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய
தக்காளி - அரை கப், துருவிய கேரட் - ஒரு கப், மிளகுத்தூள் - கால்
டீஸ்பூன், சோள மாவு - ஒரு சிட்டிகை, பொடியாக துருவிய கோஸ் - 4 டீஸ்பூன்,
சீரகத்தூள் - கால் டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, ரஸ்க் - 4,
உப்பு - தேவையான அளவு.குறிப்பு: சூப்பை சூடாக சாப்பிட வேண்டும். கஞ்சி உடலுக்கு குளுமை தரும். சூப்பில் கால் டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்தால் சுவை கூடும். சூப் சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
மல்டி பழ டெஸட்
தேவையானவை: கிர்ணிப்பழத்
துண்டுகள் - 6, சப்போட்டா - இரண்டு, ஆரஞ்சு - ஒன்று, ஆப்பிள் - ஒன்று,
வாழைப்பழம் - ஒன்று, தேன் - 4 டீஸ்பூன், பைனாப்பிள் - ஒரு டேபிள்ஸ்பூன்.குறிப்பு: குழந்தைகள் பிறந்தநாள், விருந்தினர்களை உபசரிக்க இந்த மல்டி பழ டெஸட் ஒரு சூப்பர் டிஷ். தயாரிப்பது எளிது... கிடைக்கும் பாராட்டு பெரிது!
புரோட்டீன் ரிச் உசிலி
தேவையானவை:
முளைகட்டிய பயறு - ஒரு கப், முளைகட்டிய கொண்டைக்கடலை - ஒரு கப்,
முளைவிட்ட சோளம் - ஒரு கப், முளைகட்டிய கொள்ளு - ஒரு கப், பூண்டு - 2 பல்,காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
குறிப்பு: சூடான சாதத்தில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு இந்த உசிலி சேர்த்துச் சாப்பிடலாம்.
ராகி இனிப்பு உருண்டை
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் சிறிதளவு, நெய் - 4 டீஸ்பூன்.குறிப்பு: கேழ்வரகு மாவை கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டுக் கிளறி... வெல்லம், தேங்காய் சேர்த்து உருட்டி, ஆவியில் வேக வைத்தும் கொடுக்கலாம்.
வெஜிடபிள் சொதி
தேவையானவை: கேரட் - 1, பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்ப்பால் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்.
குறிப்பு: இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும் இந்த ரெசிபி, இலங்கையில் வசிப்பவர்களின் ஸ்பெஷல் ரெசிபி.
குழல் புட்டு
தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 250 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நேந்திரம்பழம் - ஒன்று.குறிப்பு: மாவை மட்டும் தனியே வேக வைத்து எடுத்து... பழத்துண்டுகள், தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம்.
பயறு கறி
தேவையானவை: சிவப்பு
காராமணி - 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் -
ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.குறிப்பு: இது, குழல் புட்டுக்கு ஒரு சிறந்த காம்பினேஷன். சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.
வெஜிடபிள் இட்லி
தேவையானவை:
இட்லி மாவு - அரை கிலோ, துருவிய கேரட் - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி
- ஒரு டீஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று, பொடியாக துருவிய கோஸ் -
ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்.குறிப்பு: இந்த மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன். ஒரு பவுலில் சாம்பார் ஊற்றி, இட்லிகளை சற்று ஊறவைத்தும் சாப்பிடலாம்.
அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை
- ஒரு கட்டு, பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய்- ஒன்று, கடுகு -
அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - முக்கால்
டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: அகத்திக்கீரை, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது... குடல் புண்னை ஆற்றும். கீரையை அளவாக தண்ணீர் வைத்து வேகவிடவும். அதிகம் தண்ணீர் வைத்து வடித்தால் சத்துக்கள் குறையும்.
பைனாப்பிள் ரசம்
தேவையானவை: புளி
- ஒரு நெல்லிக்காய் அளவு, பைனாப்பிள் துண்டுகள் - 6, சாம்பார் பொடி - ஒரு
டீஸ்பூன், வேக வைத்த துவரம்பருப்பு - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி,
பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான
அளவு.தாளிக்க: கடுகு - அரை ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
குறிப்பு: பைனாப்பிள் ஃப்ளேவருடன் வித்தியாசமான டேஸ்ட்டில் இருக்கும் இந்த ரசம்.
நெல்லிக்காய் பச்சடி
தேவையானவை: பெரிய
நெல்லிக்காய் - 6, தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை
டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.குறிப்பு: நெல்லிக்காயில் விட்டமின் 'சி' உள்ளது நெல்லிக்காய் சாப்பிட்டால் உடல் குளுமை அடையும்.
முருங்கைக் கீரை கூட்டு
தேவையானவை:
முருங்கைக்கீரை (ஆய்ந்தது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப்,
சீரகம் - ஒரு டீஸ்பூன், வேக வைத்த பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய்
- ஒன்று, உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், பெருங்காய்த்தூள்- சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
குறிப்பு: முருங்கைக் கீரை குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அடங்கியது.
கத்திரிக்காய் கொத்ஸு
தேவையானவை:
கத்திரிக்காய் (பெரியது) - ஒன்று, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, தனியா.
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, வெல்லம் - ஒரு
சிறு துண்டு, உப்பு - தேவையான அளவுகுறிப்பு: அரிசி உப்புமாவுக்கும், பொங்கலுக்கும் சிறந்த காம்பினேஷன் இது.
காராமணி சுண்டல்
தேவையானவை: சிவப்பு காராமணி - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப்.குறிப்பு: வெல்லம் சேர்த்திருப்பதால், இந்த சுண்டல் இரும்புச் சத்து மிக்கது. நவராத்திரி கொண்டாட்டத்தில் இதற்கு தனி இடம் உண்டு.
மல்டி பருப்பு பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு
- ஒரு கப், துவரம்பருப்பு - ஒரு கப், மிளகு - ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவுகுறிப்பு: குழம்பு வைக்காத சமயங்களில் இந்தப் பொடி கைகொடுக்கும்.
மல்டி மாவு கேக்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், கோதுமை மாவு - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், உப்பு தேவையான அளவு.செய்முறை: கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, அரிசி மாவு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து... தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து... அடுப்பில் வைத்து கூழ் பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்டவும். கூழ் நன்கு ஆறியவுடன் விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி சாப்பிடலாம். இதை கூழாகவும் சாப்பிடலாம்.
குறிப்பு: விரத நாட்களில் இந்தக் கூழ் பசி தாங்கும். மோர் மிளகாய் தாளித்து சேர்க்கலாம்.
பாசிப்பயறு சுண்டல்
தேவையானவை: பாசிப்பயறு - 200 கிராம், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
குறிப்பு: இதே சுண்டலில் மாங்காய் துருவல், கேரட் துருவல் போட்டும் தயாரிக்கலாம்.
மூலிகைப் பொடி
தேவையானவை: சீரகம்
- 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, வேப்பம்பூ - 4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் - 6, கடுகு - 4
டீஸ்பூன், சுக்கு - ஒரு சிறு துண்டு, மிளகு - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.குறிப்பு: வயிறு மந்தமாக இருக்கும்போது, இந்தப் பொடியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். சளித் தொல்லை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.
பால் அவல்
தேவையானவை: அவல் - 200 கிராம், வெல்லம் - 100 கிராம், பால் - 250 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - 2 டேபிஸ்பூன்.குறிப்பு: விரதம் இருப்பவர்களுக்கு இந்த அவல் பசியை அடக்கிவிடும். இந்த அவலும் ஒரு பழமும் போதும்... ஒரு நாள் பசி தாங்கலாம்.
புதினா - சீரக ரைஸ்
தேவையானவை:
பாசுமதி அரிசி - 250 கிராம், புதினா - ஒரு கட்டு, சீரகம் - 6 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - 6 டீஸ்பூன். எண்ணெய் - அரை டீஸ்பூன்
குறிப்பு: கலந்த சாத வகைகளில் இது வித்தியாசமானது. புதினா - சீரகம் தனி ருசி தரும். முந்திரி, பாதாம், பிஸ்தா வறுத்துப் போட்டால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
காரப்பொரி
தேவையானவை:
அரிசிப்பொரி - மீடியம் சைஸ் பாக்கெட், வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம், பூண்டுப் பல் - 2, மிளகாய்த்தூள் - முக்கால்
டீஸ்பூன், பெருங்காய்த்தூள் - சிறிதளவு. தாளிக்க கடுகு - சிறிதளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 1 டீஸ்பூன்.குறிப்பு: மாலை வேளையிலும் மழைக் காலத்திலும் சாப்பிட இந்தக் காரப்பொரி மிகவும் உகந்தது.
வெஜிடபிள் ஸ்பெகட்டி
தேவையானவை: ஸ்பெகட்டி
(சேமியாவில் ஒருவகை) - 100 கிராம் , குடமிளகாய் - ஒன்று, கேரட் - ஒன்று,
பச்சை மிளகாய் - ஒன்று, கொத்தமல்லி - சிறிதளவு தக்காளி, வெங்காயம் - தலா
ஒன்று, பச்சைப் பட்டாணி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு
- தேவையான அளவு.குறிப்பு: ஸ்பெகட்டி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுக்க புதுமையானது. கலர் குடமிளகாய் சேர்த்தால் பார்க்கவும் அழகு!