பெண்களின் வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:52 | Best Blogger Tips
பெண்களின் வெள்ளைப்படுதலை போக்குவதற்கான சித்த மருத்துவம்:-

* கட்டுக் கொடி மூலிகையை நன்கு அரைத்து எருமை தயிரில் கரைத்து சாப்பிட வேண்டும். பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நோய் தீர்ந்து விடும்.

* வல்லாரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிடலாம்.

* அருகம்புல் இரண்டு கைப்பிடி, கீழாநெல்லி ஒரு கைப்பிடி எடுத்து நன்கு அரைத்து எருமைத்தயிரில் சேர்த்து சாப்பிடலாம்.

* வெள்ளைப்படுதலால் ஏற்படும் அரிப்பை குணப்படுத்த இலுப்பை புண்ணாக்குடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்கு அரைத்து தூளாக்கி எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்து வெந்நீரால் கழுவ வேண்டும்.

* தென்னம்பூ இரண்டு பிடி, உதிர மரப்பட்டை சிறுதுண்டு இவை இரண்டையும் நன்கு இடித்து பாத்திரத்தில் வைத்து மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியவுடன் ஆற வைத்து வடிகட்டி குடித்தால் சுமார் 25 நாட்களுக்குள் வெள்ளைப்படுதல் குணமாகும்.

உணவு முறைகள்

* உணவில் கீரைகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* சரியான நேரத்தில், உப்புக் காரம் குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

* எளிதில் ஜீரணமாகக் கூடிய பழங்கள் சாப்பிடலாம்.

* மசாலா பொருட்கள், காபி, டீ, புளியை தவிர்த்தல் நல்லது.

* இளநீர், கீரை, தயிர், மோர் இவைகளை அதிகம் சேர்த்தும் மாமிச உணவு வகைகள், கத்தரிக்காய் போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது.

Thanks to FB Karthikeyan Mathan