பொது அறிவு ! 15

மணக்கால் அய்யம்பேட்டை | 5:23 PM | Best Blogger Tips
*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.


*டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

*நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

*ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.


*ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

*உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

*ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

*நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

*ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

*ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

*தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.
 


 
நன்றி  FB பொதுஅறிவு