உலக தினம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 5:40 PM | Best Blogger Tips
உலக நீர் தினம்.
-----------------------------------------
உலக நீர் தினம்.

உலக நீர் தினம் வருடாந்தம் மார்ச் 22 இல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2013ம் ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச நீர்க் கூட்டுறவு ஆண்டாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


உலக வாய் ஆரோக்கிய தினம்.
------------------------------------------------------
வருடாந்தம் உலக வாய் ஆரோக்கிய தினம் மார்ச் 20 இல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இத் தினத்தின் 2013ம் ஆண்டிற்கான தொனிப்பொருள் 'ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான பல்' என்பதாகும்.


உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.
=============================
வருடாந்தம் மார்ச் 15ம் திகதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

1962 - 03 - 15 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜோன். எப். கெனடி நுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக ஆற்றிய உரையினை அடுத்து 1963 - 03 - 15 அனுஷ்டிக்கப்படுகின்றது


சர்வதேச மகளீர் தினம்.
=====================================
வருடாந்தம் மார்ச் 8 இல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் நகரத்தில் 1900ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் மார்ச் 8 என பிரகடனம் செய்யப்பட்டது.

2013ம் ஆண்டிற்கான தொனிப்பொருள் 'குடும்பத்தினை பாதுகாக்கும் அவளை நாம் பாதுகாப்போம்' என்பதாகும்.


 
நன்றி  FB பொதுஅறிவு