பால் அதிகம் பருகுவதால் பார்வைக்கு பலம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது . அமெரிக்காவின்நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ
பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பொதுவாக பெண்கள் தான் அதிகமாக பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.
சுமார் 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் வைட்டமின் டி அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடுஅதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது.
முளைகட்டிய தானியங்கள்
கோதுமை, கம்பு, கேழ்வரகு, எள், நிலக்கடலை, பட்டாணி, கொண்டைக் கடலை, உளுந்து, பச்சைபயறு, சோயா, காராமணி பயறு போன்றவைகளை முளைகட்ட வைத்து சாப்பிடவும். முளைக்கட்டிய தானிய வகைகளில் அதிக அளவிலான வைட்டமின் சி உள்ளது. தானிய வகைகள் அதிகம் உட்கொண்டால் பார்வை நன்கு தெரியும்.தினமும ் இரவில் தானிய வகைகளை முளைக்கட்ட செய்து காலை வேளையில் சாப்பிடலாம்
சூரிய ஒளி
காலை நேர வெயிலில் நின்று உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த நலம் தரும். சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும்வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது கண்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் கண்களுக்கு நல்ல பயன்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகளான மீன், முட்டை, பால் காய்கறிவகைகள்தானியங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் கண்களையும் உங்களையும் பாதுகாத்து கொள்ளலாம்.

நன்றி மருத்துவ-தகவல்கள்