பொது அறிவு ! 17

மணக்கால் அய்யம்பேட்டை | 5:36 PM | Best Blogger Tips
சர்வதேச கைகழுவும் தினம்.
------------------------------------------------]
இத்தினம் வருடாந்தம் நவம்பர் மாதம் 18 இல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இத்தினம் 2008ம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2012ம் ஆண்டிற்கான தொனிப்பொருள் ' தாய்மார் மத்தியில் இந்நாளை ஊக்குவித்தல்' என்பதாகும்.
 
டைட்டானிக் நூறு ஆண்டுகள் நிறைவு

1907 இல் 270 மீற்றர்கள் நீளமும் 28 மீற்றர்கள் அகலமும் 46329 தொன்கள் எடையும் கொண்ட பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலாக உருவாக்கப்பட்டது.

1912 இல் ஏப்ரல் 10 இல் இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து சேர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குயின்ஸ்டவுண் வழியாக நியூயோர்க்கை சென்றடைய திட்டமிடப்பட்டது.

இக் கப்பலின் கப்டனாக எட்வேர்ட் ஜே.சிமித் கடமையாற்றினார்.

1912 ஏப்ரல் 14 நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையுடன் மோதி விபத்திற்குள்ளானது.

1912 ஏப்ரல் 15 இல் அதிகாலையில் கப்பலில் இருந்த 1514 பேர் பலியானதுடன் இதன் 100 ஆண்டுகள் நிறைவு தினம் 2012 இல் ஏப்ரல் 15 இல் அனுஷ்டிக்கப்பட்டது.

உலகின் மிக உயரமான கோபுரம்.
-----------------------------------------------------------
உலகின் மிக உயரமான கோபுரமான Toke yo Sky Tree கோபுரம் ஜப்பானில் 2012 மேயில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் உயரம் 634 மீற்றர்கள் அதாவது 2080 அடி ஆகும்.

இதற்கு அடுத்த நிலையில் உள்ளது 600 மீற்றர்கள் உயரமான சீனாவில் உள்ள கேன்டன் கோபுரமாகும்.

உலகின் உயரமான கட்டிடம்
===============================
2010 ம் ஆண்டு வரை உலகின் உயரமான கட்டிடம் என்ற பெருமையை டுபாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 828 மீற்றர் உயரம் கொண்ட புர்ஜ்கலிபா என்ற கட்டிடமே பெற்றிருந்தது.

தற்போது 2022 ம் ஆண்டில் திறந்து வைக்கப்படவுள்ள 1050 மீற்றர்கள் உயரமும் 189 மாடிகளைக் கொண்டதுமான‌ அசர்பைஜான் எனும் கட்டிடமே பெருமையை பெற்றுள்ளது.

இது சவூதி அரேபியாவில் நிர்மாணிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகில் செலவு.
--------------------------------------------
உலகின் செலவு தொடர்பாக மென்சர் குழுமம் 2012 ஜூனில் ஓர் ஆய்வை மேற்கொண்டது.

வெளிநாட்டவ‌ர் தங்கியிருப்பதற்கு அதிக செலவு கொண்ட நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகில் அதிக செலவு குறைந்த நகரமாக பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சி இடம்பிடித்துள்ளது.
 
சீனப் பெருஞ்சுவரின் நீளம்.
----------------------------------------------------------
சீனாவின் வடக்கு எல்லையை பாதுகாக்கும் வகையில் சீன மன்னர்களால் கி.பி 475ம் ஆண்டு தொடக்கம் 1644ம் ஆண்டு வரை சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மின்ஸ் அரச பரம்பரைக் காலத்தில் (1368-1644) கட்டப்பட்ட சீனச் சுவர் மாத்திரமே கணக்கில் எடுக்கப்பட்டதாயினும் 2007 முதல் இப் பரம்பரைக்கு முன் கட்டப்பட்ட அளவுகளும் கவனத்தில் எடுக்கப்பட்டன.

சீன அரசின் புதிய அளவையின்படி சீனப்பெருஞ்சுவர் 21,168.18 கி.மீ (13170.6956 மைல்) நீளமானதாகும்.

மனிதனால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய கட்டுமானமாக பதிவாகியுள்ள சீனப்பெருஞ்சுவர் 1987ம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சொத்தாக பிரகடனபடுத்தப்பட்டது.

Photo: டைட்டானிக் நூறு ஆண்டுகள் நிறைவு
	
1907 இல் 270 மீற்றர்கள் நீளமும் 28 மீற்றர்கள் அகலமும் 46329 தொன்கள் எடையும் கொண்ட பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலாக உருவாக்கப்பட்டது.

1912 இல் ஏப்ரல் 10 இல் இங்கிலாந்தில் உள்ள சவுதாம்ப்டனில் இருந்து சேர்பர்க், பிரான்ஸ் மற்றும் அயர்லாந்தில் உள்ள குயின்ஸ்டவுண் வழியாக நியூயோர்க்கை சென்றடைய திட்டமிடப்பட்டது.

இக் கப்பலின் கப்டனாக எட்வேர்ட் ஜே.சிமித் கடமையாற்றினார்.

1912 ஏப்ரல் 14 நள்ளிரவில் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது பனிப்பாறையுடன் மோதி விபத்திற்குள்ளானது.

1912 ஏப்ரல் 15 இல் அதிகாலையில் கப்பலில் இருந்த 1514 பேர் பலியானதுடன் இதன் 100 ஆண்டுகள் நிறைவு தினம் 2012 இல் ஏப்ரல் 15 இல் அனுஷ்டிக்கப்பட்டது.
 
நன்றி  FB பொதுஅறிவு