உலகில் அதிக அளவில் பெண்கள் முட்டைப்பை புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டைப்பை புற்றுநோய் என்பது அறிகுறிகள் இல்லாமல்
ஆளைக் கொல்லும் ஒரு நோய் ஆகும்.
முட்டைப்பை புற்று நோயானது
முட்டைப்பையின் செல்களை பாதிக்கிறது. ஆகவே, அது எவ்வகை செல்களை
பாதிக்கிறது? என்பதைப் பொறுத்தே புற்றுநோய் வகைப்படுத்தப்படுகிறது.
'எபித்லியல் ஓவரியன் கார்சீனமோ' முட்டைப்பையின் படிமச் செல்களை
பாதிக்கிறது. 'ஜேர்ம் செல் கார்சீனமோ' முட்டை உருவாக்கும் செல்களை
பாதிக்கிறது. 'ஸ்ட்ரோமல் கார்சீனமோ' முட்டைப்பையின் திசுக்களை பாதிப்பதுடன்
ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் ஹார்மோன்களை உருவாக்கும் செல்களையும்
பாதிக்கிறது. இதில் 'எபித்லியஸ் ஓவரியன் கார்சீனமோ'தான் மிகவும் ஆபத்தான
வகை! 40 வயதிற்கும் குறைவாக உள்ள பெண்கள் மத்தியில் முட்டைப்பை புற்றுநோய்
குறைவாக காணப்படுகிறது. போஸ்ட் மெனோபாசல் நிலையில் உள்ள பெண்களையே இவ்வகை
பாதிக்கிறது. பரம்பரை காரணமாகவும் சிலருக்கு முட்டைப்பை புற்றுநோய்
ஏற்படக்கூடும். அதாவது குடும்பத்தில் பெற்றோருக்கு மார்பகப்
புற்றுநோய், குடல் புற்றுநோய் இருப்பின் இந்த நோய் ஏற்படக்கூடிய
சாத்தியக்கூறுகள் அதிகம். இதேபோல் குழந்தையில்லாதவர்கள், இளம் வயதிலேயே
பூப்படைந்தவர்கள், தாமதமாக இறுதி மாதவிடாய் அடைந்தவர்களுக்கும் இந்நோய்
ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைப் பேறுக்காக நெடுநாட்கள் எடுத்துக்கொண்ட
மருந்து, மாத்திரைகளாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும். ஹார்மோன்
சிகிச்சை அதாவது 'ஈஸ்ட்ரோஜன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி', 'ஹார்மோன்
ரீப்ளேஸ்மெண்ட் தெரபி' போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் முட்டைப்பை
புற்றுநோய் ஏற்படுகிறது.
இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது
மிகவும் கடினம். இதன் அறிகுறியாக சிலருக்கு செரிமானமின்மை, வயிறு உப்பி
காணப்படும். மேலும் ஒரு சிலருக்கு உடல் எடை வெகுவாக குறையும். முதுகுவலி,
மயக்கம், அடிவயிற்றில் வலி ஏற்படும். இவ்வகை அறிகுறிகள் சாதாரணம் என்பதால்
பெண்கள் அதை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அதே சமயம் மற்றவகை
புற்றுநோய்களின் அறிகுறிகள் எளிதில் தென்பட்டுவிடும். சி.டி.ஸ்கேன்,
அடிவயிறு பரிசோதனைகள் மற்றும் சி.எ.125 மூலம் முட்டைப்பை, குடல் புற்றுநோய்
இருப்பின் அவர்களுக்கு 'மார்பக புற்றுநோய் ஜீன்ஸ்', 'பி.ஆர்.சி.ஏ.',
மற்றும் 'பி.ஆர்.சி.ஏ2' உள்ளதா? என்று கண்டறிவது நல்லது. அதனால்
பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருப்பின் கண்டிப்பாக மற்றவருக்கும்
புற்றுநோய் வரும் என்று கூறமுடியாது.
வரும் முன் காப்போம்:
முட்டைப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும்
முழு தானிய வகைகள் அதிகம் இடம்பெறச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மூலம்
உடல் எடையைச் சரிவர பராமரிக்க வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் வருடாந்திர
பரிசோதனைகள் கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.
Thanks
to FB Karthikeyan Mathan
உலகில் அதிக அளவில் பெண்கள் முட்டைப்பை புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். முட்டைப்பை புற்றுநோய் என்பது அறிகுறிகள் இல்லாமல்
ஆளைக் கொல்லும் ஒரு நோய் ஆகும்.
முட்டைப்பை புற்று நோயானது முட்டைப்பையின் செல்களை பாதிக்கிறது. ஆகவே, அது எவ்வகை செல்களை பாதிக்கிறது? என்பதைப் பொறுத்தே புற்றுநோய் வகைப்படுத்தப்படுகிறது. 'எபித்லியல் ஓவரியன் கார்சீனமோ' முட்டைப்பையின் படிமச் செல்களை பாதிக்கிறது. 'ஜேர்ம் செல் கார்சீனமோ' முட்டை உருவாக்கும் செல்களை பாதிக்கிறது. 'ஸ்ட்ரோமல் கார்சீனமோ' முட்டைப்பையின் திசுக்களை பாதிப்பதுடன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரொஜஸ்ட்ரான் ஹார்மோன்களை உருவாக்கும் செல்களையும் பாதிக்கிறது. இதில் 'எபித்லியஸ் ஓவரியன் கார்சீனமோ'தான் மிகவும் ஆபத்தான வகை! 40 வயதிற்கும் குறைவாக உள்ள பெண்கள் மத்தியில் முட்டைப்பை புற்றுநோய் குறைவாக காணப்படுகிறது. போஸ்ட் மெனோபாசல் நிலையில் உள்ள பெண்களையே இவ்வகை பாதிக்கிறது. பரம்பரை காரணமாகவும் சிலருக்கு முட்டைப்பை புற்றுநோய் ஏற்படக்கூடும். அதாவது குடும்பத்தில் பெற்றோருக்கு மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் இருப்பின் இந்த நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். இதேபோல் குழந்தையில்லாதவர்கள், இளம் வயதிலேயே பூப்படைந்தவர்கள், தாமதமாக இறுதி மாதவிடாய் அடைந்தவர்களுக்கும் இந்நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குழந்தைப் பேறுக்காக நெடுநாட்கள் எடுத்துக்கொண்ட மருந்து, மாத்திரைகளாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படும். ஹார்மோன் சிகிச்சை அதாவது 'ஈஸ்ட்ரோஜன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி', 'ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி' போன்ற சிகிச்சை எடுத்துக் கொள்வதாலும் முட்டைப்பை புற்றுநோய் ஏற்படுகிறது.
இந்நோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினம். இதன் அறிகுறியாக சிலருக்கு செரிமானமின்மை, வயிறு உப்பி காணப்படும். மேலும் ஒரு சிலருக்கு உடல் எடை வெகுவாக குறையும். முதுகுவலி, மயக்கம், அடிவயிற்றில் வலி ஏற்படும். இவ்வகை அறிகுறிகள் சாதாரணம் என்பதால் பெண்கள் அதை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. அதே சமயம் மற்றவகை புற்றுநோய்களின் அறிகுறிகள் எளிதில் தென்பட்டுவிடும். சி.டி.ஸ்கேன், அடிவயிறு பரிசோதனைகள் மற்றும் சி.எ.125 மூலம் முட்டைப்பை, குடல் புற்றுநோய் இருப்பின் அவர்களுக்கு 'மார்பக புற்றுநோய் ஜீன்ஸ்', 'பி.ஆர்.சி.ஏ.', மற்றும் 'பி.ஆர்.சி.ஏ2' உள்ளதா? என்று கண்டறிவது நல்லது. அதனால் பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருப்பின் கண்டிப்பாக மற்றவருக்கும் புற்றுநோய் வரும் என்று கூறமுடியாது.
வரும் முன் காப்போம்:
முட்டைப்பை புற்றுநோய் வராமல் தடுக்க உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானிய வகைகள் அதிகம் இடம்பெறச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி மூலம் உடல் எடையைச் சரிவர பராமரிக்க வேண்டும். நாற்பது வயதுக்கு மேல் வருடாந்திர பரிசோதனைகள் கண்டிப்பாக செய்துகொள்ள வேண்டும்.