இந்த படத்தில் இருக்கும் Nick vujicic கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை...
நமது கதையின் கதானாயகன் ஒரு மாற்றுத்திறனாளி. ஒரு போரில் இரண்டு கால்களையும் இழந்தவர். ஒரு நாள் அவர் ஊனமுற்றோர் சைக்களில் தன்னுடைய தோட்டத்தைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணின் அலறல் சத்தம் அவருக்குக் கேட்டது.
சத்தத்தைக் கேட்டு பதறி அடித்துக்கொண்டு அவருடைய சைக்கிளை வேகமாக கைகளால் சுழற்றினார். அவர் சைக்கிள் புற்களின் மீதும், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கியதால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதைப் பொருட்படுத்தாமல் அவர் தன் கைகளால் முன் நோக்கி நகர ஆரம்பித்தார். தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தான் அங்கே போகவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் இருந்தது.
ஒரு வழியாக அவர் பக்கத்து வீட்டில் சத்தம் வந்த இடத்தை அடைந்துவிட்டார். அங்கே ஒரு அம்மா கண்ணீருடன் என் மூன்று வயது பெண் குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்துவிட்டாள் அவளை எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கெஞ்சினாள். அவளுக்கு இரண்டு கைகளும் கிடையாது எப்படியாவது காப்பாத்துங்கள் என்று கதறினாள்.
நீச்சல் குளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்தவுடன் சட்டென நீச்சல் குளத்தில் பாய்ந்து ஒரு வழியாக குழந்தையை வெளியே கொண்டுவந்தார். குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் கிடந்தது. உடனடியாக வாய் மூலமாக தண்ணீரை எடுக்க முயற்ச்சித்து கொண்டு இருந்தார். குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை அவள் தாய் கதறி அழ ஆரம்பித்தாள்.
அவர் சொன்னார் நீச்சல் குளத்தில்’ அவளுக்கு கையாக இருந்து நான் அவளை வெளியே கொண்டு வந்தேன் இப்போது அவளுக்காக நான் சுவாசிப்பேன் அவளும் சுவாசிக்க ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள் என்று சொன்னார். அவர் சொன்ன அடுத்த நிமிடம் குழந்தை இரும ஆரம்பித்தது மூச்சு சீராக வர ஆரம்பித்த உடன் அந்தக் குழந்தை அழ ஆரம்பித்தது.
அந்த பெண் கேட்டாள் எப்படி உங்களால் என் குழந்தை பிழைத்துவிடும் என்று உறுதியாக கூற முடிந்தது. அதற்கு அவர் சொன்னார் ’எனக்கும் தெரியாது’. நான் வியட்னாம் போரில் குண்டு அடிப்பட்டு இரண்டு கால்களையும் இழந்து போர்க்களத்தில் கிடந்தேன், அந்த வழியாக சென்ற பக்கத்து கிராமத்துப் பெண் என்னை முதுகில் சுமந்து கொண்டு அவரது வீட்டிற்குச் சென்றார்.
அங்கே என்னை பார்த்துச் சொன்னாள் ’நீங்கள் இறக்கவில்லை உங்கள் காலுக்கு காலாக கடைசி வரை இருந்து நான் உங்களை காப்பாற்றுவேன்’ என்றார். அவர் கொடுத்த அந்த தன்னம்பிக்கை தான் இன்று வரை என்னைக் காப்பாற்றியது. அவள் சொன்ன அதே தன்னம்பிக்கை வார்த்தையைத்தான் உங்ளுக்கும் சொன்னேன் என்றார்.
இரண்டு கால்கள் இல்லாத என்னால் உங்கள் குழந்தையைக் காப்பாற்ற முடியுமா என்று எண்ணாமல், என்னால் முடியும் என்று முயற்ச்சி செய்து தன்னம்பிகையுடன் வந்தேன் காப்பாற்றினேன் என்றார்.
நம்பிக்கை தாங்க வாழ்க்கை... தன்னம்பிக்கை என்ற ஒரு ஆயுதம் கையில் இருந்தால் எத்தகைய தடையையும் முறியடித்து வாழ்க்கையில் முன்னேற முடியும்...
via - Ilayaraja Dentist.