தெரிந்து கொள்ளுங்கள் - 2

மணக்கால் அய்யம்பேட்டை | 5:48 PM | Best Blogger Tips

இந்திய போலீஸார் மட்டும் தொப்பையோடு இருப்பது ஏன்?
---------------------------------------------------------------------
உணவுமுறைதான் காரணம். வெளிநாட்டில் முக்கிய உணவு தானியம் கோதுமை. இந்தியாவில் அரிசி. அதையும் மீறி வெளிநாட்டு போலீஸாருக்கு தொப்பை விழுந்தால் அந்த தோப்பையைக் குறைக்க போலீஸ் டிபார்ட்மெண்ட் டாக்டர்களின் உதவியோடு புதிய மாத்திரை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரையை விழுங்கியதும் சிறுகுடலின் சுவரில் போய் அது ஒட்டிக் கொள்ளும். அங்கே ஒட்டிக் கொள்ளும் மாத்திரை உடம்புக்குத் தேவையான சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதியை ஜீரணம் செய்யவிடாமல் தடுத்து கழிவாக வெளியே அனுப்பிவிடுகிறது, அதனால் தொப்பை விழாது. இந்த மாத்திரை கரைந்துவிட்டால் மற்றொன்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.


குளிர்பானங்களைக் குடிப்பது நல்லதா?
--------------------------------------------------------------------
குளிர்பானங்களை அடிக்கடி குடிக்கக் கூடாது. காரணம் என்னவெனில் எல்லா குளிர்பானங்களிலும் பாஸ்போரிக் அமிலம் உள்ளது. லெமன் சுவை கொண்ட குளிர்பானங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டுவகை அமிலங்களும் பற்களுக்கு எதிரி. இந்த அமிலங்கள் பற்களில் உள்ள எனாமலை சுரண்டி எடுத்துவிடும். குளிரூட்டப்பட்ட குளிர்பானங்களை பற்களில் படும்படியாகக் குடிப்பது மிக மிகக் கெடுதல். ஸ்ட்ரா வைத்து உறிஞ்சி நேரிடையாக வயிற்றுக்குள் அனுப்புவது ஓரளவு பரவாயில்லை. சில பன்னாட்டுக் நிறுவன குளிர்பானங்களில் அவை நீண்டநாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக பூச்சி மருந்துகளை சேர்க்கிறார்கள். அவை உடல்நலத்துக்கு மிகவும் கேடானவை. அத்தகைய பானங்களை எப்போதும் தவிர்க்கலாம்.


புயல் எப்படி உருவாகிறது?
=====================================

புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் பூமியின் அமைப்புதான். ஒரு ஆரஞ்சுப்பழம் போன்ற அமைப்புடைய பூமி அதன் அச்சில் நேர் செங்குத்தாக நிற்காமல் ஒருபக்கமாக அதாவது 23 1/2 டிகிரி சாய்ந்து சுற்றுவதால் சூரியனிடமிருந்து வரும் உஷ்ணம் பூமியின் எல்லாப் பரப்பின் மேலும் ஒரே சீராகப்படுவதில்லை. இதன் காரணமாக பூமியின் ஒரு பகுதி அதிக வெப்பமாகவும் இன்னொரு பகுதி குறைவான வெப்பமாகவும் இருக்கும். வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில் காற்று விரிவடைந்து மேலே செல்கிறது. அப்போது அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைந்து ஒரு வெற்றிடம் உண்டாகிறது. அந்த வெற்றிடத்தை நோக்கி காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியிலிருந்து காற்று வேகமாய் வீச ஆரம்பிக்கிறது. அப்போது பூமியின் சுழற்சியின் காரணமாக காற்று அலைக்கழிக்கப்பட்டு சூறாவளியாக மாறி புயலாய் அதாவது குறைந்த காற்று அழுத்த மண்டலமாக உருவாகிறது.


அறுவை சிகிச்சையில் பயன்படும் நூல் எது?
=======================================

அது நூல் அல்ல, நூல் போன்ற நரம்பு. அதற்குப் பெயர் கேட்-கட். இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அறுவை சிகிச்சை செய்து முடித்ததும் இந்த கேட்-கட் நரம்பு நூலினால்தான் மருத்துவர்கள் தையல் போடுவார்கள். இந்தத் தையலை மீண்டும் பிரிக்க வேண்டியது இல்லை; பிரிக்கவும் முடியாது. அறுவை செய்யப்பட்ட ரணம் ஆறிக்கொண்டு வரும்போது இந்த நரம்பு நூலும் உடலோடு சேர்ந்துவிடும். இந்த நூல் நரம்பு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? செம்மறியாட்டின் வலுவான குடல்தசை நார்களிலிருந்துதான்.


கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி?
==========================================
இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில்தான். 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.


பாம்புக்கடி எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது
------------------------------------------------------------------
பாம்பின் உமிழ்நீர்ப்பையில் சேமித்து வைக்கப்படும் எச்சில்தான் விஷமாக உருவாகிறது. தவளை, எலி போன்றவற்றைப் பிடிக்கும்போது, அவற்றை செயலிழக்கச் செய்ய இந்த விஷத்தை பாம்புகள் பயன்படுத்துகின்றன. இதை விஷம் மனிதன் போன்ற விலங்குகளை தற்காப்பின்பொருட்டு கடிக்கும்போது அவற்றைக் கொல்லவும் பயன்படுத்துகின்றன. விஷப்பாம்புகள் மனிதனைக் கடிக்கும்போது, அவற்றின் விஷம் இரத்தத்தில் கலந்ததும், நரம்பு மண்டலத்துக்குப் பரவி, நரம்புகளை செயலிழக்கச் செய்யும் வேலையில் ஈடுபடுகிறது. இதனையடுத்து கை, கால்கள் மரத்துப்போய், இரத்தம் உறைந்து மரணம் சம்பவிக்கிறது.
 
 
 
 


அமெரிக்கா - பெயர் காரணம்
------------------------------------------------
அமெரிக்கன் வெஸ்புக்கி என்பவர்தான் ஒரு நிலப்பரப்பை கண்டறிகிறார்‌. அவர் மூலம் அந்த நிலப்பரப்புக்கு சென்ற கொலம்பஸ் அந்த நிலப்பரப்பை உலகுக்குத் தெரியப்படுத்துகிறார். அமெரிக்கன் வெஸ்புக்கி நினைவாக அந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயர் சூட்டுகிறார்.



 
நன்றி  FB பொதுஅறிவு