மனித உரிமை என்பது கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடர்கிறது. ஆம் ஒரு
மனித உயிர் கருவாய் உருக்கொள்ளும் கணத்திலேயே மனித உரிமை பிறந்து விடுகிறது.
ஏனெனில் முறையற்ற கருக்கலைப்பு முழுமையாய் பெரும் குற்றம். மனிதனை மனிதனாக
மதிப்பதே மனித உரிமை. "மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டுமென்று
விரும்புகிறாயோ அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி' என்பதே மனித உரிமையின்
அடிப்படைத் துத்துவம். இந்த மனித உரிமைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது
இன்று நேற்று அல்ல. மனிதன் நாகரிக மாக வாழ கற்றுக் கொண்டது முதலே
தொடங்கியது.