கோமியதின் மகிமைகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:34 | Best Blogger Tips
கோமியதின் மகிமைகள்:

பசுவானது புனித விலங்காக போற்றப்படுகிறது . பசுவின் சிறுநீரில் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதன் காரணமாகவே வீடுகளில் கிருமிகள் அண்டாமல் பாதுகாக்க அடிக்கடி பசுவின் சிறுநீர் தெளிக்கின்றனர் முன்னோர்கள். மனிதர்களின் பல நோய்களை நீக்கும் மருந்தாக பசு கோமியம் செயல்படுவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கோமியத்தில் உள்ள சத்துக்கள்
பசுவின் சிறுநீரில் உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி, டி, இ போன்றவை அடங்கியுள்ளன. தாது உப்புக்களும், லாக்டோஸ், என்ஸைம் போன்றவை காணப்படுகின்றன. மேலும் நைட்ரஜன், சல்ஃபர், பாஸ்பேட், சோடியம், மாங்கனீஸ், சிலிகான், குளோரின், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்றவையும் அடங்கியுள்ளன. கார்பாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், ஆகியவையும் இதில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவுக்கு மருந்து
பெங்களூருவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பசு கோமியத்தில் நீரிழிவு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு வாய்மூலம் உட்கொள்ளும் வகையில் பசு கோமியம் 25 மிலி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவை விரைவில் நோயில் இருந்து விடுபடுவது தெரியவந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையில் ஏற்கனவே கோமியம் பயன்படுத்தப்பட் டு வருகிறது. தோல் நோய், புற்றுநோய், இதய நோய், பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கு கோமியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் எடுத்துக் கொள்வோர், அவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு ஆளாகின்றனர்.பக்கவிளைவுகளில் இருந்து பாதுகாக்கவும், கோமியம் உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, கோமியத்தில் இருந்து பல்வேறு மருந்துகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று தோஷங்களை நீக்கும் பசுவின் கோமியமானது மூன்றுவிதமான தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை நீக்கும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது . மனிதர்களின் உடலில் இந்த மூன்று குணங்களும் அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கிறது. பசுவின் சிறுநீரை உபயோகிப்பதன் மூலம் இருமல், மைக்ரேன் தலைவலி, தைராய்டு, போன்றவை குணமடைவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோல்நோய்களை குணமாக்கும்
தோல் நோய்களான எக்ஸைமா, அரிப்பு, படை, சொரி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர ்களுக்கு பசுவின் கோமியத்தை பூசுவதன் மூலம் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் புற்றுநோய் போன்றவைகளுக்கும் கூட இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும் பசுவின் கோமியமானது உடலில் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. டென்சனை நீக்குகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் இதயம், மூளையின் சக்தியை வலுவாக்குகிறது. அதேபோல் வயதாவதை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
-வி. ராஜமருதவேல்:

-வி. ராஜமருதவேல்
Via தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture